Tnpsc New Syllabus Tamil Study Material 6th Std – enbatamil

இன்பத்தமிழ்

TNPSC Pavendar Bharathidasan

பாடல்:  

தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்

தமிழ் இனபத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாழ்!

–    பாரதிதாசன்

 

ஆசிரியர் குறிப்பு:

  • இப்பாடலை இயற்றியவர் “பாவேந்தர் பாரதிதாசன்” ஆவார்
  • இவரின் இயற்பெயர் = பாரதிதாசன்
  • பாரதியாரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்
  • தம் கவிதைகளில், “பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு” முதலான புரட்சிகரமான கருத்துக்களை உள்வாங்கிப் பாடியுள்ளார்.

சிறப்பு பெயர்:

  • புரட்சிக்கவிஞர் (அறிஞர் அண்ணா)
  • பாவேந்தர்
  • புதுவைக்குயில்
  • பகுத்தறிவு கவிஞர்
  • தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
  • இயற்க்கை கவிஞர்

சொல்லும் பொருளும்:

  • நிருமித்த =     உருவாக்கிய
  • விளைவு =     விளைச்சல்
  • சமூகம் =     மக்கள் குழு
  • அசதி =     சோர்வு

குறிப்பு:

Leave a Reply