Tnpsc New Syllabus Tamil Study Material 6th Std – tamil kummi

தமிழ்க்கும்மி

pavalaru perunchithiranar

 பாடல்:

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்

    கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்

எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்

     எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!

ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு

     ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்

ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்

     அழியாமலே நிலை நின்றதுவாம்!

பொய் அகற்றும்: உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு

     பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்

மெய்புகட்டும்; அறமேன்மை கிட்டும்: இந்த

     மேதினி வால்வழி காட்டிருக்கும்!

–    பெருஞ்சித்திரனார்

 

பாடல் குறிப்பு:

  • இப்பாடல் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய “கனிச்சாறு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது
  • இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது
  • இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது

ஆசிரியர் குறிப்பு:

  • இவரின் இயற் பெயர் துரை மாணிக்கம்
  • ஊர் = சேலம் மாவட்டம் சமுத்திரம்
  • பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள்

சிறப்பு பெயர்:

  • பாவலரேறு
  • தற்கால நக்கீரர்

படைப்பு:

  • கொய்யாக்கனி
  • ஐயை
  • பாவியக் கொத்து
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • அறுபருவத்திருக்கூத்து
  • கனிச்சாறு
  • நூறாசிரியம்
  • கற்பனை ஊற்று
  • உலகியல் நூறு பள்ளிப்பறவைகள்

இதழ்:

  • தென்மொழி
  • தமிழ்ச் சிட்டு
  • தமிழ் நிலம்

குறிப்பு:

  • உலக தமிழ் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்
  • மொழி ஞாயிறு தேவநேயபாவாணரின் கொள்கைகளைப் பரப்பும் தலை மாணாக்கர்
  • தனித்தமிழையும், தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்

 

Leave a Comment

Your email address will not be published.