கவிஞர் காசி ஆனந்தன்
பாடல்:
தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும் அமிழ்தே நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும் தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் – கவிஞர் காசி ஆனந்தன் |
ஆசிரியர் குறிப்பு:
- இயற் பெயர் = காத்தமுத்து சிவானந்தன்
- பிறப்பு = இலங்கையின் மட்டக்களப்பு, 1938ம் ஆண்டு
- இலங்கையில் சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து பலமுறை சிறை சென்றவர்
- வாகன எண் தகடுகளில் சிங்கள எழுத்துக்கள் இருக்கக் கூடாது எனப் போராடி சிறை சென்றவர்
- இவர் இலங்கையின் 5 சிறைகளில் சுமார் 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்
- இவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஆவார்
- இவர் இலங்கை தமிழ் ஈழத்தின் உயரிய விருதான, “மாமனிதர் விருதை” பெற்றுள்ளார்
சிறப்பு பெயர்:
- உணர்சிக் கவிஞர்
- ஈழத்துக் எழுசிக் கவிஞர்
கவிதை படைப்புகள்:
- தெருப்புலவர்
- உயிர் தமிழுக்கு
- தமிழன் கனவு
- காசி ஆனந்தன் கவிதைகள்
- சுவர்க்கவிகள்
சிறுகதை படைப்புகள்:
- காசி ஆனந்தால் கதைகள்
- நறுக்குகள்
வணக்கம் ஐயா,
இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்களுக்கு புதிய பாடத்திட்டங்களும் தேவை அதையும் கருத்தில் கொள்ளவும். தயவுசெய்து புதுப்பிக்கவும் என்று கேட்டுக்கொள்கின்றோம்..
நன்றி ஐயா,
கண்டிப்பாக புதுப்பிக்கப்படும். நன்றி.