TOP CURRENT AFFAIRS IN TAMIL 06/12/2022
TOP CURRENT AFFAIRS IN TAMIL 06/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தேசிய டெலிமெடிசின் சேவை – இசஞ்சீவனி 8 கோடி தொலைத் தொடர்புகளை எட்டியது
- இந்தியாவின் தேசிய டெலிமெடிசின் சேவை – இசஞ்சீவனி 8 கோடி தொலைத் தொடர்புகளை எட்டியுள்ளது
- சுமார் 5 வாரங்களில் 1 கோடி ஆலோசனைகளை பதிவு செய்து சாதனைகளை முறியடித்துள்ளது eSanjeevani
- தமிழ்நாட்டில் இருந்து 87,23,333 அழைப்புகள் பதிவாகி உள்ளது.
இந்தியா, ஜெர்மனி இடையே இடம்பெயர்வு மற்றும் நடமாடும் ஒப்பந்தம்
- இந்தியா, ஜெர்மனி இடம்பெயர்வு மற்றும் நடமாடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன // India, Germany sign Migration and Mobility Agreement
- இரு நாடுகளிலும் மக்கள் படிக்க, ஆராய்ச்சி மற்றும் வேலை செய்ய எளிதாக அணுகுவதற்கு வசதியாக இடம்பெயர்வு மற்றும் நடமாட்ட ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2022
- ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை = “இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2022: டிஜிட்டல் பிளவு” // “India Inequality Report 2022: Digital Divide” released by Oxfam India
- ஆண்களுடன் ஒப்பிடுகையில், 15% குறைவான பெண்கள் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள், மேலும் 33% குறைவான மொபைல் இணைய சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
- மகாராஷ்டிராவிலும், கோவா மற்றும் கேரளாவிலும் இணைய ஊடுருவல் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இந்தியாவின் 3 வது பெரிய வர்த்தக நாடு
- இந்தியா-யுஏஇ வர்த்தகம் 2021-22 இல் 72.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்படுகிறது // UAE India’s third largest trading partner after China and the US.
- இது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக UAE இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது.
ஆசியாவின் 2 வது மிகப்பெரிய சேரி காலனி (குடிசைப்பகுதி)
- ஆசியாவின் 2 வது மிகப்பெரிய சேரி காலனி (ASIA’S SECOND LARGEST SLUM COLONY) (குடிசைப்பகுதி) மகாராஸ்டிரா மாநிலத்தின் தாராவி பகுதியை நவீனப்படுத்தும் திட்டத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது.
- தாராவி மறுசீரமைப்புத் திட்டம் 106 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது.
- ஆசியாவின் மற்றும் உலகின் மிகப்பெரிய சேரிப் பகுதி (WORLDS AND ASIAS LARGEST SLUM COLONY) (குடிசைப் பகுதி) = பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள ஒராங்கி நகரப் பகுதி ஆகும்.
இந்தோனேசியாவில் இந்து மதத்தை அவமதித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை
- இந்தோனேசியாவின் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பட்டது.
- இதன் படி அந்நாட்டில் இந்து மதத்தை அவமதித்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்திருந்தம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
கின்னஸ் சாதனையில் உலகின் நீளமான ஈரடுக்கு பாலம்
- மகாராஸ்டிராவில் உள்ள நாகபுரி மெட்ரோவின் 3.14 கிலோமீட்டர் தொலைவிலான ஈரடுக்கு பாலம் உலகின் மீளமான ஈரடுக்கு பாலம் என்ற வகையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
- இந்த பாலம் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம் என்ற சாதனயை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாரதியார் – வரலாற்று நாடகம்
- தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் “பாரதி யார்” இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் நடத்தப்பட உள்ளது.
- இது எஸ்.பி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.எஸ்.ராமன் குழுவினரின் வரலாற்று நாடகம் நடைபெற உள்ளது.
அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ – சென்னை மாநகராட்சி ஒப்பந்தம்
- சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு (சிஸ்டர் சிட்டி அபிலியேசன்) ஒப்பந்தப்படி அமெரிக்காவின் டெக்சாஸ் மாக்கானத்தில் உள்ள சான் ஆன்டோனியோ – சென்னை மாநகராட்சி இடையே கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
- இரு மாநகர மக்களின் ஆக்கப்பூர்வ உறவுகளை மேம்படுத்தவும், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பேராசிரியர் மணிகண்டனுக்கு பாரதி விருது
- சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறை தலைவரும் பாரதியியல் அறிஞருமாகிய பேராசியர் ய.மணிகண்டனுக்கு, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் “பாரதி விருது” வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் நிகழ்நேர தங்க ஏடிஎம்
- இந்தியாவின் முதல் நிகழ்நேர தங்க ஏடிஎம் (India’s first real-time Gold ATM) அமைக்கப்பட்டுள்ள இடம் = ஹைதராபாத்
- இதனை நிறுவிய நிறுவனம் = கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட்
- இது இந்தியாவின் முதல் மற்றும் உலகின் முதல் நிகழ்நேர தங்க ஏடிஎம் ஆகும் // This is India’s first and the world’s first real-time Gold ATM.
- இந்த ஏடிஎம்மில் தங்க நாணயங்கள் வழங்கப்படும்.
இந்தியாவின் முதல் ட்ரோன் நிலையம்
- இந்தியாவின் முதல் ட்ரோன் நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம் = பெடல்டோபா, மேகாலயா // Meghalaya to unveil first drone station for healthcare service delivery.
- சுகாதார சேவை வழங்குவதற்கான முதல் ட்ரோன் நிலையத்தை மேகாலயா உருவாக்கி உள்ளது.
- கடந்த ஆண்டு வரை தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து இணைப்பு இல்லாத பெடல்டோபாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், ட்ரோன் மூலம் மருந்துகளை முதல் விநியோகத்தைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் இந்திய – மத்திய ஆசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதல் இந்தியா-மத்திய ஆசிய கூட்டம் டிசம்பர் 2022 அன்று புது தில்லியில் நடைபெற்றது // The first India-Central Asia meeting of the National Security Advisers
- கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறை.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர்கள்
- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, வரும் 13 ஆம் தேதி துவங்க உள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் “பிருந்தா ரதி (மும்பை), ஜனனி நாராயணன் (சென்னை), வேணுகோபாலன் (தில்லி) ஆகிய 3 பெண் நடுவர்கள் பணியாற்ற உள்ளனர்.
முதல் முறையாக சூரத்தில் “கடற்கரை கால்பந்து” போட்டி
- சூரத் நகரில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல் முறையாக “கடற்கரை கால்பந்து” போட்டி நடத்தப்பட உள்ளது // Beach Soccer National Championship to be held in Surat
இந்தியாவின் முதல் பெண் மின்சார கம்ப பராமரிப்பு பணியாளர்
- தெலுங்கனா மாநிலத்தை சேர்ந்த வி பாரதி மற்றும் பப்புரி சிரிஷா ஆகியோர், அம்மாநில மின்சாரத் துறையில் உள்ள உயர் மின் பிரமிட் கோபுரங்களை பராமரிக்கும் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் மின்சார கம்ப பராமரிப்பு பணியாளர்கள் (INDIA’S FIRST LINE WOMEN) என்ற சிறப்பை இந்த இருவரும் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் 77வது செஸ் கிராண்ட்மாஸ்டர்
- இந்தியாவின் 77வது செஸ் கிராண்ட்மாஸ்டர் (India’s 77th chess Grandmaster) = மும்பையை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆதித்யா மிட்டல்
- ஸ்பெயினில் நடைபெற்று வரும் எலோ பிரோகாட் ஓபன் செஸ் போட்டி தொடரில் இந்த தகுதியை அடைந்துள்ளார்.
- 2022 ஆம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் தகுதியை அடைந்துள்ள 5 வது இந்தியர் இவராவார்.
சிறந்த பாரா வீராங்கனையாக மனீஷா ராமதாஸ் தேர்வு
- சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாரா பாட்மிண்டன் வீராங்கனையாக (BWF FEMALE PARA BADMINTON PLAYER OF THE YEAR AWARD) இந்தியாவின் மனீஷா ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 17 வயதான மனீஷா, இந்த ஆண்டில் மட்டும் 11 தங்கம், 5 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளார்.
கூட்டு கடற்படை சிறப்புப் படை பயிற்சி “சங்கம்”
- இந்திய கடற்படை மார்கோ மற்றும் அமெரிக்க கடற்படை சீல் இடையேயான கூட்டு கடற்படை சிறப்புப் படை பயிற்சி “சங்கம்” கோவாவில் நடைபெற்றது // Sangam exercise, a joint naval special forces exercise between Indian Navy Marco and US Navy SEAL
- இது 7 வது கூட்டுப்படை பயிற்சி ஆகும்.
- சங்கம் பயிற்சி முதன்முதலில் 1994 இல் நடத்தப்பட்டது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கியமான இராணுவ மற்றும் இராஜதந்திர முயற்சியாகும்
மகாபரிநிர்வாண் தினம்
- மகாபரிநிர்வாண் தினம் (Mahaparinirvan day) = டிசம்பர் 6.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மகாபரிநிர்வான் தினமாக (Mahaparinirvan day) அனுசரிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸின் பரோபகார பட்டியல்
- 2022 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸின் ஆசிய ஹீரோக்கள் பரோபகார பட்டியலில் (Forbes’ Asia Heroes of philanthropy list for 2022) மூன்று இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- கௌதம் அதானி
- சிவ நாடார்
- அசோக் சூதா
மதிப்புமிக்க 500 தனியார் நிறுவனங்கள் பட்டியல்
- இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 500 தனியார் நிறுவனங்கள் பட்டியலை ஹூருண் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- முதல் 3 இடம் = ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்விசஸ் (டிசிஎஸ்), எச்டிஎப்சி வங்கி.
- 500 நிறுவனங்கள் பட்டியலில் 193 நிறுவனங்களுடன் மகாராஸ்டிரா முதல் இடத்திலும் கர்நாடகம் 2 வது இடத்திலும், 43 நிறுவனங்களுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
முதல் ஜி-20 ஷெர்பா கூட்டம்
- முதல் ஜி-20 ஷெர்பா கூட்டம் (First G-20 Sherpa meeting) நடைபெற்ற இடம் = உதய்பூர், ராஜஸ்தான்.
- நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அமிதாப் காந்த் தலைமை தாங்குகிறார்.
- ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 19 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துக் கொண்டனர்.
உலகளாவிய விண்வெளி உச்சி மாநாடு
- உலகளாவிய விண்வெளி உச்சி மாநாடு (Global Space Summit in Abu Dhabi) நடைபெற்ற இடம் = அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
- இம்மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துக் கொண்டார்.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் நானோ செயற்கைக்கோள் – ‘நயீஃப்-1’, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது.
டெக்னோடெக்ஸ் 2023
- டெக்னோடெக்ஸ் 2023 (Technical Textiles – ‘Technotex 2023’) நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் = மும்பை, பிப்ரவரி 2023 இல்
- இந்தியத் தொழில்நுட்ப ஜவுளித் துறையின் மிகப்பெரிய நிகழ்வு இது.
5வது ஐரோப்பிய யூனியன்-இந்தியா போட்டி வாரம் 2022
- 5வது ஐரோப்பிய யூனியன்-இந்தியா போட்டி வாரம் 2022 (5th European Union-India Competition Week 2022), புதுதில்லியில் துவங்கியது.
- இந்நிகழ்ச்சியை இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India) ஏற்பாடு செய்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 17வது ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய கூட்டம்
- சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 17வது ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய கூட்டம் நடைபெற்ற இடம் = சிங்கப்பூர் // 17th Asia and Pacific Regional Meeting (APRM) of the International Labour Organization (ILO) began in Singapore
- கூட்டத்தின் கருப்பொருள் = Integrated Policy Agenda for a Human–Centred Recovery”
சர்வதேச தினை ஆண்டு – 2023 விழா
- ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), இத்தாலியின் ரோமில் சர்வதேச தினை ஆண்டு – 2023 (IYM2023) தொடக்க விழாவை ஏற்பாடு செய்தது // FAO Opening Ceremony of International Year of Millets 2023 held in Rome, Italy
- இந்த நிகழ்வின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் இந்தியாவின் சம்பிரதாய செய்தியை சுஸ்ரீ ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார்.
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 03/12/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 02/2/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 30/11/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 29/11/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 28/11/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 27/11/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 26/11/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 25/11/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 24/11/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 23/11/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 22/11/2022
- TOP CURRENT AFFAIRS IN TAMIL 21/11/2022