இவர் பிறந்து மூன்று ஆண்டு வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.
தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார்.
கும்பகோணம்:
இராமானுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் “கும்பகோணம்” வந்ததால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது.
பூஜ்யத்திற்கு மதிப்புண்டு:
ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் “பூஜ்யத்திற்கு மதிப்பில்லை” என கூற, அதற்கு இராமானுஜன் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி எடுத்துரைத்தார்.
கார்:
1880இல் இலண்டன் நகரில் “கார்” என்பவர் பதினைந்தாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதுப்போல, இவரும் சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
எழுத்தர் பணி:
தந்தை ஸ்ரீனிவாசனின் முயற்சியால் இவருக்கு சென்னை துறைமுகத்தில் “எழுத்தர்” பணி கிடைத்தது.
பெர்னௌலிஸ் எண்கள்:
தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் கேள்விகளாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிக்கைக்குச் சென்னைத் துறைமுகத்தின் தலைமை பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்ப்ரிங் என்பார் மூலம் அனுப்பினார். “பெர்னௌலிஸ் எண்கள்” எனும் தலைப்பில் வெளியான அவரது கட்டுரை, மிகந்த வரவேற்பை பெற்றது.
ஹார்டி & ஈ.எச்.நெவில்:
தமது கண்டுபிடிப்புகளை விரிவாக எழுதி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் “ஹார்டி” என்பவருக்கு கடிதமாக அனுபினார். ஹார்டி, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் இணைந்துள்ள திரிநிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச்.நெவில் மூலம், அவரை இங்கிலாந்திற்கு வரவழைத்தார்.
உதவித்தொகை:
இராமனுஜம், 18.04.1914 அன்று திரிநிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். அவருக்கு ஆண்டு ஒன்றிற்கு “60” பவுண்டு உதவித்தொகையாக வழங்கப்பட்டது. “ஹார்டி, லிட்டில்வுட்” இருவரும் கணிதத்தில் இரட்டை மாமேதைகளாக விளங்கினர்.
ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள்:
ஹார்டி, “ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள்” என்ற தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்தார்.
எஃப்.ஆர்.ஸ் பட்டம்:
1918ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு எஃப்.ஆர்.ஸ் பட்டம் வழங்கப்பட்டது.
ஹார்டியின் பரிந்துரை:
ஹார்டியின் பரிந்துரையின் பேரில் சென்னைப் பல்கலைகழகம் அவருக்கு 250 பவுண்டு தொகையை ஐந்து ஆண்டுக்குக் கொடுக்க முன்வந்தது. இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.
இராமானுஜன் எண்:
1729 என்பதை இராமானுஜன் எண் என்பர்.
மறைவு:
26.04.1920 அன்று தன்னுடைய 33ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
பொதுவான குறிப்புகள்:
லிட்டில்வுட், இராமானுஜனை பற்றி “ஆய்வாலராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி” என்றார்.(ஜாகோபி என்பவர் ஜெர்மனியை சேர்ந்த கணித மேதை, ஆய்லர் என்பவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இணையற்ற கணித மேதை).
இந்திரா காந்தி அவர்கள் இராமானுஜனை பற்றி, “கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிபிடத்தக்க ஓர் இடத்தைப் பிற்ற பிறவிக் கணிதமேதை” என்றார்.
பேராசிரியர் ஈ.டி.பெல் என்பவர்,”இராமானுஜன் சாதாரண மனிதரல்லர். அவர் இறைவன் தந்த பரிசு” என்றார்.
இலண்டன் ஆளுநர் லார்ட்மென்ட் லண்ட் என்பவர் “இராமானுஜன் முதல் தரமான கணித மேதை” என்றார்.
பேராசிரியர் சூலியன் கக்சுலி என்பவர், “ இராமானுஜன் தான் இந்த 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை” என்றார்.
22.12.1962 அன்று அவரது 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடுவண் அரசு பதினைந்து காசு அஞ்சல்தலையை 2500000 வெளியிட்டது. வெளியிட்ட அன்றே அத்தனை அஞ்சல்தலைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
1971ஆம் ஆண்டு, பேராசிரியர் இராமனுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்டது.
03.10.1972 அன்று அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் இராமானுஜம் உயர் ஆராய்ச்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
அவர் பணியாற்றிய சென்னைத் துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க் கப்பலுக்கு “சீனிவாச இராமானுஜம்” எனப் பெயர் சூட்டப்பட்டது.
அமெரிக்காவின் விசுகன்சீன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் “ரிச்சர்டும் ஆஸ்கேயும்” இணைந்து 1984இல் அவரது மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்கு கொண்டு வந்து வழங்கினர்.
கணித குறிப்புகள் அடங்கிய 3 குறிப்பேடுகளையும் ஆராய்சிக் கட்டுரைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவரது குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தேற்றங்களை 1957ஆம் ஆண்டு “டாடா” அடிப்படை ஆராய்ச்சி நிலையம், அப்படியே ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிட்டது.