நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன.
அவைக்களத் தலைவர்:
நலங்கிள்ளி என்ற மன்னன் கோவூர்கிழாரின் புலமையை அறிந்து அவரை “அவைக்களத் தலைவர்” ஆகினான்.
போரைத் தவிர்த்த புலவர்:
சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது.
நலங்கிள்ளி உறையூருக்கு அருகில் உள்ள ஆவூர்க்கோட்டையை முற்றுகையிட்டான்.
கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் “நீ வீரனாக இருந்தால் போரிடு; அல்லது கோட்டையை ஒப்படைத்துவிடு; இரண்டில் எதையும் செய்யாமல் கோட்டை மதிலுக்குள் ஒடுங்கியிருப்பது நாணும் தன்மையுடையது” என்றர்.
கோவூர்கிழாரின் அறிவுரையை கேட்ட நெடுங்கிள்ளி ஆவூர்க்கோட்டையை விட்டு உறையூர் கோட்டைக்குசென்று கதவடைத்து கொண்டான்.
கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம், “நெடுங்கிள்ளியே! உன்னோடு போர் புரிய, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டிருப்பவன் பனம்பூ மாலையணிந்தசேரனும் அல்லன்; வேப்பம்பூ மாலையணிந்த பாண்டியனும் அல்லன்; சோழருக்குரிய அத்திமாலை அணிந்தவனே. உம் இருவருள் எவர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே’ என்றார்.
ஆதலால் “போரை ஒழிமின்” என்றார்.
மலையமான் பிள்ளைகளை காத்தல்:
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புகார் நகரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். இவன் சிறந்த கவிஞன்.
கிள்ளிவளவனுக்கும், கடையேழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரிக்கும் பெரும் பகை இருந்தது. கிள்ளிவளவன் காரியின் இரு பிள்ளைகளையும் கவர்ந்து வந்து யானை காலில் இடறிக் கொள்ள முடிவு செய்தான்.
கோவூர்கிழார் கிள்ளிவலவனிடம் சோழ முன்னோர்கள் பெருமை எடுத்துக்கூறி காரியின் இரு பிள்ளைகளையும் மீட்டார்.
சிறை மீட்ட செம்மல்:
நலங்கிள்ளியை பாடி பரிசு பெற்ற இளந்தரையனார், நெடுங்கிள்ளியிடம் சென்று பாடினார்.
இளந்தத்தனாரை நலங்கிள்ளியின் ஒற்றன் என்று கருதிய நெடுங்கிள்ளி அவரை சிறையிலிட்டான்.
கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் புலவர்களின் இயல்புகளை எடுத்துக்கூறி அவரை மீட்டார்.