கல்வி = பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்.,
காலம் = 07.02.1902 – 15.01.1981
சிறப்பு = செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்.
தமிழ்பற்று:
தன்னை மோதிய மிதிவண்டிக்காரர் கூறிய மன்னித்து கொள்க என்ற சொல்லை, மன்னிப்பு உருதுச்சொல், பொறுத்துக்கொள்க என தமிழில் சொல்லவும் என்று கூறி, மிதிவண்டிக்காராரையும் சொல்லச் செய்தவர்.
தமிழை வளர்த்தவர்:
தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர் = கால்டுவெல்
தனித் தமிழுக்கு வித்திட்டவர் = பரிதிமாற்கலைஞர்
தமிழைத் தழைக்கத் செய்த செம்மல் = மறைமலையடிகள்
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் = தேவநேயப்பாவாணர்
உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேறும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவியவர்.
“உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்” என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் அவரது ஆய்வின் இரு கண்கள்.
“தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைதான்” என்று கூறினார்.
அனைத்தும் தமிழில்:
கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்றார்.
பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் என்றும் பாவாணர் வலியுறுத்தினார்.
பகலுணவு, இரவுணவு:
ஒருமுறை தன் ஆசிரிய நண்பர்களுடன் சென்று தாரைமங்கலம் என்னும் ஊரில் தங்கினார்.
அங்கு ஒருவர் பாவனாரிடம், “ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன?” என்று கேட்டார்.
பாவாணர், “பகல் உணவு, பகல் உணவாகவும்(பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுதுண்ண நேர்ந்தது), இரா உணவு இரா உணவாகவும்(அனைவரும் உணவின்றி இரவைக் கழித்தல்) இருந்தன” என்றார்.
தமிழ் வளர்த்தல் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்று எண்ணியவர் பாவாணர்.
நீலமலை(நீலகிரி):
ஒருமுறை நீலமலைக்குச் சென்று அங்கு கிருட்டினையா என்பவர் வீட்டில் உணவு உண்டார்.
கிருட்டினையா வெளியே சென்று மீண்டும் வீடு வரும்போது பாவாணர் அங்கு விறகு வெட்டி கொண்டு இருந்தார்.
கிருட்டினையா, இதை நீங்கள் செய்ய வேண்டாம் என கூறியதற்கு, “உண்ட வீட்டிற்கு எதாவது செய்யவேண்டும்; உட்கார்ந்து கொண்டு உண்டு செல்வது நன்றாகாது” என்றர்.
பாவாணரின் படைப்புகள்:
தமிழ் வரலாறு
முதல் தாய்மொழி
தமிழ்நாடு விளையாட்டுகள்
தமிழர் திருமணம்
வடமொழி வரலாறு
தமிழர் மதம்
மண்ணிலே வின்
பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
திருக்குறள் மரபுரை
அகரமுதலி:
பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக 08.05.1974 அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சில தொகுதிகளை வெளிக்கொணர்ந்தார்.
இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தன்மானம் மிக்கவர்:
தாம் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் நேர்ந்தபோது, “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்று வெளியேறினார்.
சிறப்புகள்:
பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையதிற்கு அருகிலுள்ள முறம்பில், பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை அமைகப்பட்டுள்ளன.
தமிழன்னைக்கு பெருமை:
மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்ற தலைப்பில் சொற்பொவாற்றித் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தார்.