சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவநேயப்பாவாணர்

தேவநேயப்பாவாணர்

வாழ்க்கை குறிப்பு:

 • பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம்
 • ஊர் = சங்கரன்கோவில்
 • கல்வி = பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்.,
 • காலம் = 07.02.1902 – 15.01.1981
 • சிறப்பு = செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்.

தமிழ்பற்று:

 • தன்னை மோதிய மிதிவண்டிக்காரர் கூறிய மன்னித்து கொள்க என்ற சொல்லை, மன்னிப்பு உருதுச்சொல், பொறுத்துக்கொள்க என தமிழில் சொல்லவும் என்று கூறி, மிதிவண்டிக்காராரையும் சொல்லச் செய்தவர்.

தமிழை வளர்த்தவர்:

 • தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர் = கால்டுவெல்
 • தனித் தமிழுக்கு வித்திட்டவர் = பரிதிமாற்கலைஞர்
 • தமிழைத் தழைக்கத் செய்த செம்மல் = மறைமலையடிகள்
 • தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் = தேவநேயப்பாவாணர்

தமிழை மீட்டல்:

 • மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்.
 • உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேறும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவியவர்.
 • “உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்” என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் அவரது ஆய்வின் இரு கண்கள்.
 • “தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைதான்” என்று கூறினார்.

அனைத்தும் தமிழில்:

 • கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்றார்.
 • பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் என்றும் பாவாணர் வலியுறுத்தினார்.

பகலுணவு, இரவுணவு:

 • ஒருமுறை தன் ஆசிரிய நண்பர்களுடன் சென்று தாரைமங்கலம் என்னும் ஊரில் தங்கினார்.
 • அங்கு ஒருவர் பாவனாரிடம், “ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன?” என்று கேட்டார்.
 • பாவாணர், “பகல் உணவு, பகல் உணவாகவும்(பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுதுண்ண நேர்ந்தது), இரா உணவு  இரா உணவாகவும்(அனைவரும் உணவின்றி இரவைக் கழித்தல்) இருந்தன” என்றார்.
 • தமிழ் வளர்த்தல் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்று எண்ணியவர் பாவாணர்.

நீலமலை(நீலகிரி):

 • ஒருமுறை நீலமலைக்குச் சென்று அங்கு கிருட்டினையா என்பவர் வீட்டில் உணவு உண்டார்.
 • கிருட்டினையா வெளியே சென்று மீண்டும் வீடு வரும்போது பாவாணர் அங்கு விறகு வெட்டி கொண்டு இருந்தார்.
 • கிருட்டினையா, இதை நீங்கள் செய்ய வேண்டாம் என கூறியதற்கு, “உண்ட வீட்டிற்கு எதாவது செய்யவேண்டும்; உட்கார்ந்து கொண்டு உண்டு செல்வது நன்றாகாது” என்றர்.

பாவாணரின் படைப்புகள்:

 • தமிழ் வரலாறு
 • முதல் தாய்மொழி
 • தமிழ்நாடு விளையாட்டுகள்
 • தமிழர் திருமணம்
 • வடமொழி வரலாறு
 • தமிழர் மதம்
 • மண்ணிலே வின்
 • பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
 • உயர்தரக் கட்டுரை இலக்கணம்
 • சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
 • திருக்குறள் மரபுரை

அகரமுதலி:

 • பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக 08.05.1974 அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சில தொகுதிகளை வெளிக்கொணர்ந்தார்.
 • இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தன்மானம் மிக்கவர்:

 • தாம் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் நேர்ந்தபோது, “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்று வெளியேறினார்.

சிறப்புகள்:

 •  பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
 • இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையதிற்கு அருகிலுள்ள முறம்பில், பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை அமைகப்பட்டுள்ளன.

தமிழன்னைக்கு பெருமை:

 • மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்ற தலைப்பில் சொற்பொவாற்றித் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தார்.

Leave a Comment

Your email address will not be published.