விழுதும் வேரும்
தூலம்போல் வளர்கி ளைக்கு விழுதுகள் தூண்கள்! தூண்கள் ஆலினைச் சுற்றி நிற்கும் அருந்திறல் மறவர்! வேறோ வாலினைத் தரையில் வீழ்த்தி மண்டிய பாம்பின் கூட்டம்! நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்! – பாரதிதாசன் |
சொற்பொருள்:
- திறல் – வலிமை
- மறவர் – வீரர்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – பாரதிதாசன்
- இயற்பெயர் – கனக சுப்புரத்தினம்
- பெற்றோர் – கனகசபை,இலக்குமி
- ஊர் – புதுச்சேரி
- காலம் – 29.04.1891-21.04.1964
- சிறப்புப்பெயர்கள் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர்
சிறப்பு:
- பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை அமைத்துக்கொண்டார்.
- தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையைக் கவிதை வடிவில் தந்தவர்.
இயற்றிய நூல்கள்:
- பாண்டியன் பரிசு
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- அழகின் சிரிப்பு
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- குருஞ்சித்திட்டு
- தமிழியக்கம்
- பிசிராந்தையார்