சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விழுதும் வேரும்

விழுதும் வேரும்

தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேறோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!
– பாரதிதாசன்

சொற்பொருள்:

 • திறல் – வலிமை
 • மறவர் – வீரர்

ஆசிரியர் குறிப்பு:

 • பெயர் – பாரதிதாசன்
 • இயற்பெயர் – கனக சுப்புரத்தினம்
 • பெற்றோர் – கனகசபை,இலக்குமி
 • ஊர் – புதுச்சேரி
 • காலம் – 29.04.1891-21.04.1964
 • சிறப்புப்பெயர்கள் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர்

சிறப்பு:

 • பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை அமைத்துக்கொண்டார்.
 • தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையைக் கவிதை வடிவில் தந்தவர்.

இயற்றிய நூல்கள்:

 • பாண்டியன் பரிசு
 • குடும்ப விளக்கு
 • இருண்ட வீடு
 • அழகின் சிரிப்பு
 • கண்ணகி புரட்சிக் காப்பியம்
 • குருஞ்சித்திட்டு
 • தமிழியக்கம்
 • பிசிராந்தையார்

Leave a Comment

Your email address will not be published.