சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக – TNPSC தேர்வில் கேட்கப்படும் சேர்த்து எழுதுக பகுதிக்கு தேவையான பாடக்குறிப்புகள் தொகுக்கப்பட்டு தேர்விற்கு பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது

சேர்த்து எழுதுக
க வரிசை
- கசடு + அற = கசடற
- கடல் + கரை = கடற்கரை
- கடல் + என = கடலென
- கடல் + ஒலி = கடலொலி
- கடல் + ஓரம் = கடலோரம்
- கட்டு + சோறு = கட்டுச்சோறு
- கட்டு + உண்டோம் = கட்டுண்டோம்
- கடுமை + பல் + ஊகம் = கடும்பலூகம்
- கடுமை + ஆன = கடுமையான
- கடுமை + தோல் = கடுந்தோல்
- கண் + அருவி = கண்ணருவி
- கண் + அழகு = கண்ணழகு
- கண் + ஆடி = கண்ணாடி
- கண் + இரண்டு = கண்ணிரண்டு
- கண் + உடையார் = கண்ணுடையார்
- கண் + பார்வை = கண்பார்வை / கட்பார்வை
- கண் + மலர் = கண்மலர்
- கமலம் + கண் = கமலக்கண்
- கமலம் + கண்ணன் = கமலக்கண்ணன்
- கமலம் + கண்ணன் + ஆர் = கமலகண்ணனார்
- கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில்
- கரணத்து + ஏர் (கரணம் + அத்து + ஏர்) = கரணத்தேர்
- கரி + கோடு = கரிக்கோடு
- கருமை + அர் = கரியர்
- கருமை + அன் = கரியன்
- கருமை + கயல் = கருங்கயல்
- கருமை + கோல் = கருங்கோல்
- கருமை + கோழி = கருங்கோழி
- குருகும் + உண்டு = குருகுமுண்டு
- கருமை + முகில் = கருமுகில்
- கரும்பு + தோட்டம் = கரும்புத்தோட்டம்
- கரும்பு + எங்கே = கரும்பேங்கே
- கலம் + பகம் = கலம்பகம்
- கல் + யானை = கல்யானை
- கல் + அணை = கல்லணை
- கல் + இடை = கல்லிடை
- கவி + அரசர் = கவியரசர்
- கனல் + எரி = கனலெரி
- கன்னல் + அடா = கன்னலடா
- கல் + நன்று = கன்னன்று
- கல் + காலம் = கற்காலம்
- கல் + கோவில் = கற்கோவில்
- கல் + சிலை = கற்சிலை
- கல் + பிளந்து = கற்பிளந்து
- கற்று + அறிந்தார் = கற்றறிந்தார்
- கல் + தார் = கற்றார்
- கல் + தீது = கற்றீது
- கல் + தூண் = கற்றூண்
- காண் + தகு = காண்டகு
- காடு + இதனை = காடிதனை
- காது + அணி = காதணி
- காமுறு + அர் = காமுறுவர்
- கருமை + இருள் = காரிருள்
- கார் + ஐ + குடி = காரைக்குடி
- கால் + கொலுசு = கால்கொலுசு
- கால் + அழகு = காலழகு
- கா + அலரை = காவலரை
- கால் + சிலம்பு = காற்சிலம்பு
- கிரணம் + கை = கிரணக்கை
- கிளி + அலகு = கிளியலகு
- கிழக்கு + நாடு = கீழ்நாடு
- குடக்கு + திசை = குடதிசை
- குணம் + அழகி = குணவழகி
- குத்து + ஒக்க = குத்தொக்க
- குயில் + ஆட்டம் = குயிலாட்டம்
- குரங்கு + இனம் = குரங்கினம்
- குருசு + ஏற்றி = குருசேற்றி
- குலன் + உடைமை = குலனுடைமை
- குழை + ஒன்று + காதில் = குழையோர்காதில்
- குறுமை + காவியம் = குறுங்காவியம்
- குறுகு + இன் + அன் = குறுகினன்
- குறுமை + நிலம் = குறுநிலம்
- குறைவு + இல்லை = குறைவிலை
- குறுமை + ஏவல் = குற்றேவல்
- குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
- குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்
- குறிஞ்சி + பாட்டு = குறிஞ்சிப்பாட்டு
- கூவல் + கீழ் = கூவற்கீழ்
- கேள் + மை = கேண்மை
- கேடு + ஈன்பது = கேடீன்பது
- கொடை + கரம் = கொடைக்கரம்
- கோது + இல் + மொழி = கோதில்மொழி
- கோ + இல் = கோயில்
- கோ + இயல் + தருமம் = கோவியற்றருமம்
- கோல் + ஆட்டம் = கோலாட்டம்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ச வரிசை
- சரண் + நாங்களே = சரணாங்களே
- சன் + மார்க்கம் = சன்மார்க்கம்
- சாதாரி + அன்று = சாதாரியன்று
- சாகும் + துணை = சாந்துணை
- சால்பு + ஊன்றிய = சால்பூன்றிய
- சால்பு + என்னும் = சால்பென்னும்
- சான்று + இதழ் = சான்றிதழ்
- சில + நாள் = சின்னாள்
- சான்றோர்க்கு + அணி = சான்றோர்க்கணி
- சிதர் + அசைத்து = சிதரசைத்து
- சிந்து + என்று = சிந்தென்று
- சினம் + எனும் = சினமெனும்
- சிரம் + முகம் = சிரமுகம்
- சில + சில = சிலசில
- சில + சில = சிலச்சில
- சில + வளை = சிலவளை
- சில + வளை = சில்வளை
- சில + சில = சிற்சில
- சிறிது + எழீஇ = சிறிதெழீஇ
- சிறுமை + அன் = சிறியன்
- சிறுமை + கோல் = சிறுகோல்
- சிறுமை + தொகை = சிறுந்தொகை
- சிறுமை + படை = சிறுபடை
- சிறுமை + இல் = சிற்றில்
- சிறுமை + இலக்கியம் = சிற்றிலக்கியம்
- சிறுமை + ஊர் = சிற்றூர்
- சிறுமை + ஓடை = சிற்றோடை
- சிறுமை + ஏவல் = சிற்றேவல்
- சீர் + அணி = சீரணி
- சீர்மை + இளமை = சீரிளமை
- சிறுமை + அடி = சீறடி
- சுகம் + அடையும் = சுகமடையும்
- சுகம் + உளது = சுகமுளது
- சுத்தம் + இலா = சுத்தமிலா
- சுவை + உணரா = சுவையுணரா
- சுற்றம் + அத்து + ஆல் = சுற்றத்தால்
- சூர் + உடை = சூருடை
- சூல் + உளை = சூலுளை
- செம்மை + கதிர் = செங்கதிர்
- செம்மை + கோல் = செங்கோல்
- செம்மை + சொல்லை = செஞ்சொல்லை
- செத்து + இறந்த = செத்திறந்த
- செம்மை + தமிழ் = செந்தமிழ்
- செம்மை + தமிழ் + செல்வி = செந்தமிழ்ச்செல்வி
- செம்மை + தமிழே = செந்தமிழே
- செம்மை + தன்மை = செந்தன்மை
- செம்மை + தாமரை = செந்தாமரை
- செம்மை + தீ = செந்தீ
- செம்மை + நிறம் = செந்நிறம்
- செம்மை + பயிர் = செப்பயிர் (செம்பயிர்)
- செம்மை + பரிதி = செப்பரிதி (செம்பரிதி)
- செப்பு + ஏடு = செப்பேடு
- செயல் + ஆனதை = செயலானதை
- செயற்கை + கோள் = செயற்கைக்கோள்
- செய்தற்கு + அரிய = செய்தற்கரிய
- செய்து + ஏந்தும் = செய்தேந்தும்
- செருக்கு + இல்லாமல் = செருக்கில்லாமல்
- செலவு + அயர்ந்திசின் = செலவயர்ந்திசின்
- செலவு + அழித்தான் = செலவழித்தான்
- செலவு + ஒழியா = செலவொழியா
- செவிக்கு + உணவு = செவிக்குணவு
- செவி + அறுத்து = செவியறுத்து
- செவி + இன் + சுவை = செவியிற்சுவை
- செழுமை + கனி + தீம் + சுவை = செழுங்கனித்தீஞ்சுவை
- சேமம் + உற = சேமமுற
- சேய்மை + ஆயினும் = சேயவாயினும்
- சே + இலை = சேயிலை
- செம்மை + அடி = சேவடி
- செம்மை + அழகு = சேவழகு
- செல் + தல் = சேறல்
- சேறி + ஆயின் = சேறியாயின்
- சொல் + ஆய்வை = சொல்லாய்வை
- சொல் + ஏர் + உழவர் = சொல்லேருழவர்
- சொல் + துணை = சொற்றுணை
- சொல் + தொகுப்பு = சொற்றொகுப்பு
- சொல் + மாலை = சொன்மாலை
- சோர்வு + இலன் = சோர்விலன்
- சோறு + இட = சோறிட
ஞ வரிசை
- ஞானம் + சுடர் = ஞானச்சுடர்

த வரிசை
- தகவு + இலன் = தகவிலன்
- தம் + கண் + நேர் = தங்கணேர்
- தம் + கால் = தங்கால்
- தம் + குற்றம் = தங்குற்றம்
- தசை + எலாம் = தசையெலாம்
- தடம் + கை = தடங்கை
- தடம் + தேர் = தடந்தேர்
- தட்டி + எழுப்பிய = தட்டியெழுப்பிய
- தண்மை + தமிழ் = தண்டமிழ்த்தமிழ் / தண்டமிழ்
- தண்மை + தளிர் + பதம் (அல்லது தண்மை + தளிர் + பாதம்) = தண்டளிர்ப்பதம்
- தண்டு + உடை = தண்டுடை
- தண்மை + உளி = தண்டுளி
- தண்மை + பார்வை = தண்பார்வை
- தண்மை + அளித்தாய் = தண்ணளித்தாய்
- தண்மை + நீர் = தண்ணீர்
- தம் + தம் = தத்தம்
- தந்து + உதவும் = தந்துதவும்
- தந்து + உய்ம்மின் = தந்துய்ம்மின்
- தன் + நூல் = தந்நூல்
- தட்பம் + வெப்பம் = தட்பவெப்பம்
- தமிழர் + என = தமிழரென
- தமிழ் + அன்னை = தமிழன்னை
- தமிழ் + அகத்து = தமிழகத்து
- தமிழ் + குரல் = தமிழ்க்குரல்
- தமிழ் + ஓசை = தமிழோசை
- தருக்கள் + எல்லாம் = தருக்களெல்லாம்
- தலை + கோல் = தலைக்கோல்
- தலை + அளிக்க = தலையளிக்க
- தலைவன் + என = தலைவனென
- தவிப்பு + எய்தி = தவிப்பெய்தி
- தனி + ஆழி = தனியாழி
- தனி + ஒருவர் = தனியொருவர்
- தனி + தமிழ் = தனித்தமிழ்
- தன் + அறிய = தன்னறிய
- தன் + இனம் = தன்னகம் / தன்னினம்
- தன் + நெஞ்சு = தன்னெஞ்சு
- தன் + நாடு = தன்னாடு
- தினம் + தினம் = தினந்தினம்
- தினம் + தோறும் = தினந்தோறும்
- தாதுக்களில் + இருந்து = தாதுக்களிலிருந்து
- தாம் + உள = தாமுள
- தாது + ஊதி = தாதூதி
- தான் + ஆகி = தானாகி
- தான் + என்று = தானென்று
- தான் + ஒரு = தானொரு
- தான் + ஒழுக = தானொழுக
- திட்டம் + இட்டான் = திட்டமிட்டான்
- திண்மை + திறல் = திண்டிறல்
- திண் + தேர் (அல்லது திண்மை + தேர்) = திண்டேர்
- திரைகவுள் + பயனில் = திரைகவுட்பயனில்
- திரிந்து + அற்று = திரிந்தற்று
- திரு + புகழ் = திருப்புகழ்
- திரு + புயம் = திருப்புயம்
- திரு + அருள் + பா = திருவருட்பா
- திரு + அடி = திருவடி
- திரு + அமுது = திருவமுது
- திரு + வினை + ஆக்கும் = திருவினையாக்கும்
- திரு + உருவம் = திருவுருவம்
- திரு + உளம் + என்ன = திருவுளமென்ன
- திரு + உளம் = திருவுளம்
- திரு + செற்று = திருச்செற்று
- திறம்புவது + இல்லையாம் = திறம்புவதிலையாம்
- தீமை + செயல் = தீச்செயல்
- தீண்ட + ஒண்ணா = தீண்டவொண்ணா
- தீது + இலா = தீதிலா
- தீது + உண்டோ = தீதுண்டோ
- தீம் + கனி = தீங்கனி
- தீம் + தமிழ் = தீந்தமிழ்
- தீ + அணைப்பான் = தீயணைப்பான்
- தீமை + இனம் = தீயினம்
- தீமை + உழி (அல்லது தீ + உழி) = தீயுழி
- தீ + எரிந்தது = தீயெரிந்தது
- துணை + இல்லை = துணையில்லை
- துயின்று + இருந்தார் = துயின்றிருந்தார்
- துன்பு + உளது = துன்புளது
- துன்பு + உளது + எனின் = துன்புளதெனின்
- தெங்கு + அம் + பழம் = தெங்கம்பழம்
- தெற்கு + திசை = தென்றிசை
- தெற்கு + கிழக்கு = தெண்கிழக்கு / தென்கிழக்கு
- தெள் + திரை (தெண்மை + திரை) = தெண்டிரை
- தெள் + நீர் = தெண்ணீர்
- தெற்கு + திசை = தென்றிசை / தென்திசை
- தெற்கு + புலியூர் = தென்புலியூர்
- தெற்கு + மலை = தென்மலை
- தெரிந்து + ஓம்பி = தெரிந்தோம்பி
- தெங்கு + காய் = தேங்காய்
- தேசம் + உய்ய = தேசமுய்ய
- தேடுதல் + அற்று + உயர் = தேடலற்றுயர் (தேடுதலற்றுயர்)
- தேன் + அடை = தேனடை
- தேன் + மதுரம் = தேமதுரம்
- தேம்பி + அழ = தேம்பியழ
- தேய்ந்து + அழுந்திய = தேய்ந்தழுந்திய
- தேர்ந்து + எடுத்து = தேர்ந்தெடுத்து
- தொண்டு + ஆற்றியும் = தொண்டாற்றியும்
- தொன்மை + கவின் = தொல்கவின்
- தொழுது + ஏத்தி = தொழுதேத்தி
- சேர்த்து எழுதுக
- சேர்த்து எழுதுக
- சேர்த்து எழுதுக
- சேர்த்து எழுதுக