சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக – TNPSC தேர்வில் கேட்கப்படும் சேர்த்து எழுதுக பகுதிக்கு தேவையான பாடக்குறிப்புகள் தொகுக்கப்பட்டு தேர்விற்கு பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

சேர்த்து எழுதுக
அ வரிசை
- அஃது + இல்லார் = அஃதில்லார்
- அஃது + உடையார் = அஃதுடையார்
- அல் + திணை = அஃறிணை
- அகம் + தூய்மை = அகத்தூய்மை
- அகம் + நான்கு + நூறு = அகநானூறு
- அகல் + உள் = அகலுள்
- அ + களத்து = அக்களத்து
- அ + குறிப்பின் = அக்குறிப்பின்
- அம் + கண் = அங்கண்
- அம் + கயல் + கண் = அங்கயற்கண்
- அம் + கயல் + கண்ணி = அங்கயற்கண்ணி
- அகம் + கை = அங்கை
- அ + செல்வம் = அச்செல்வம்
- அகம் + செவி = அஞ்செவி
- அடல் + களிறு = அடற்களிறு
- அடுத்து + அடுத்து = அடுத்தடுத்து
- அணிந்து + உரை = அணிந்துரை
- அணிவது + அல்லவோ = அணிவதல்லவோ
- அது + அன்று = அதான்று
- அம் + தன்மை = அத்தண்மை
- அது + அன்றி = அதுவன்றி
- அது + இன்றேல் = அதுவின்றேல்
- அன்பு + அகத்து + இல்லா = அன்பகத்தில்லா
- அந்த + பையன் = அந்தப்பையன்
- அந்தம் + ஆதி = அந்தாதி
- அ + நலம் = அந்நலம்
- அப்படி + கேள் = அப்படிக்கேள்
- அமர்ந்து + இருக்கிறேன் = அமர்ந்திருக்கிறேன்
- அமர்ந்து + இருப்பான் = அமர்ந்திருப்பான்
- அமர்ந்து + இளைப்பாறி = அமர்ந்திளைப்பாறி
- அமுதம் + கிரணம் = அமுதகிரணம்
- அமுது + என்று = அமுதென்று
- அமைச்சர் + அவையில் = அமைச்சரவையில்
- அமைச்சரை + கண்டேன் = அமைச்சரைக்கண்டேன்
- அமைந்து + ஒரு + பால் = அமைந்தொருபால்
- அயலர் + அம்பு = அயலரம்பு
- அரக்கு + ஆம்பல் = அரக்காம்பல்
- அரங்கு + ஏற்றம் = அரங்கேற்றம்
- அரண் + ஒரு = அரணொரு
- அரசு + அறிய = அரசறிய
- அரவு + அணை = அரவணை
- அரிது + ஆன = அரிதான
- அரி + அணையில் = அரியணையில்
- அரிய + அற்று + உள் = அரியவற்றுள்
- அரி + ஆசனம் + உனக்கே = அரியாசனமுனக்கே
- அருமை + துணை = அருந்துணை
- அருள் + கடல் = அருட்கடல்
- அருமை + கலை (அல்லது அருள் + கலை) = அருட்கலை
- அருள் + செல்வம் = அருட்செல்வம்
- அருள் + தனை = அருடனை
- அருள் + மொழி = அருண்மொழி
- அருமை + கானம் = அருங்கானம்
- அருமை + கான் = அருங்கான்
- அருமை + மறை = அருமறை
- அருமை + பணி = அரும்பணி
- அருமை + பொருள் = அரும்பொருள்
- அருமை + பெறல் = அரும்பெறல்
- அருமை + விலை = அருவிலை
- அருள் + இலார்க்கு = அருளிலார்க்கு
- அலகு + இல் = அலகில்
- அலகு + இலா = அலகிலா
- அளவு + இல் + சனம் = அளவில்சனம்
- அழகு + அற்ற = அழகற்ற
- அழகு + உற = அழகுற
- அழிவு + உற்ற = அழிவுற்ற
- அழுக்கம் + உற்று + எழுந்து = அழுக்கமுற்றெழுந்து
- அழுக்கு + இல்லா = அழுக்கில்லா
- அள்ளல் + பழனம் = அள்ளற்பழனம்
- அல்கு + உற்ற = அற்குற்ற
- அல் + குற்ற + குழல் = அற்குற்றகுழல்
- அறிந்தது + என்று = அறிந்தது
- அறிய + ஒண்ணா = அறியவொண்ணா
- அறியா + பிள்ளை = அறியாப்பிள்ளை
- அறியா + ஆகி = அறியாவாகி
- அறிவு + உண்டாக = அறிவுண்டாக
- அறிவு + உண்டாம் = அறிவுண்டாம்
- அறிவு + உடையார் = அறிவுடையார்
- அறிவு + உரை = அறிவுரை
- அறிவு + உள் = அறிவுள்
- ஆறு + தொழில் = அறுதொழில்
- அற்று + ஆகும் = அற்றாகும்
- அன்பு + அகத்து + இல்லா = அன்பகத்தில்லா
- அன்பு + அறிவு = அன்பறிவு
- அன்பு + ஈனும் = அன்பீனும்
- அன்புக்கு + அடங்குவதில் = அன்புக் கடங்குவதில்
- அன்பு + உள = அன்புள்ள
- அன்பு + எனப்படுவது = அன்பெனப்படுவது
- அன்னவர் + எல்லாம் = அன்னவரெல்லாம்
- அவா + இன்மை = அவாவின்மை
- அவர் + அவர் = அவரவர்
- அவள் + எங்கே = அவளெங்கே
- அவன் + அழுதான் = அவனழுதான்
- அவனே + அரசன் = அவனேவரசன்
- அ + வழி = அவ்வழி
- அ + உருவம் = அவ்வுருவம்
- அ + உலகம் = அவ்வுலகம்
- அ + ஊர் = அவ்வூர்
- அனைத்து + உண்ணி = அனைத்துண்ணி
- சேர்த்து எழுதுக
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஆ வரிசை
- ஆகாது + இனி = ஆகாதினி
- ஆகாது + என்றான் = ஆகாதென்றான்
- ஆங்கு + அவற்றுள் = ஆங்கவற்றுள்
- ஆடல் + ஏறு + அழகர் = ஆடலேற்றழகர்
- ஆடி + பாடி = ஆடிப்பாடி
- ஆடு + கால் = ஆட்டுக்கால்
- ஆடும்போதே + இரையும் = ஆடும்போதேயிரையும்
- ஆய் + இழை = ஆயிழை
- அருமை + அளவு = ஆரளவு
- அருமை + இருள் = ஆரிருள்
- அருமை + உயிர் = ஆருயிர்
- ஆய்ந்து + ஆய்ந்து = ஆய்ந்தாய்ந்து
- ஆர்த்து + எழுவோம் = ஆர்த்தெழுவோம்
- ஆழ் + கடல் = ஆழ்கடல்
- ஆழம் + கடல் = ஆழ்க்கடல்
- ஆற்று + ஆ + ஈர் = ஆற்றீர்
- ஆறு + கரை = ஆற்றுக்கரை
- ஆறு + அறுப்பார் = ஆற்றறுப்பார்
- ஆறு + உணா = ஆற்றுணா
- ஆறு + நீர் = ஆற்றுநீர்
- ஆற்றும் + உதவி = ஆற்றுமுதவி
- ஆற்றை + கண்ட = ஆற்றைக்கண்ட
- ஆறு + அணியும் = ஆறணியும்
- ஆறு + இல்லா = ஆறில்லா
- சேர்த்து எழுதுக
இ வரிசை
- இசை + இதேல் = இசையிதேல்
- இடது + புறம் = இடப்புறம்
- இடம் + அளிக்க + வேண்டும் = இடமளிக்கவேண்டும்
- இடம் + எல்லாம் = இடமெல்லாம்
- இ + தகைய = இத்தகைய
- இ + நாளை = இந்நாளை
- இ + நான்கும் = இந்நான்கும்
- இயல்பு + இரண்டு + ஆறு = இயல்பீராறு
- இயற்கை + எய்தினார் = இயற்கையெய்தினார்
- இயைவது + ஆயினும் = இயைவதாயினும்
- இரண்டு + அல்ல = இரண்டல்ல
- இரண்டு + திணை = இருதிணை
- இரு + நிலம் = இருநிலம்
- இரும்பு + முனை = இருப்புமுனை
- இரண்டு + விழி = இருவிழி
- இலக்கியம் + சுவை = இலக்கியச்சுவை
- இலக்கியம் + பெட்டகம் = இலக்கியப்பெட்டகம்
- இலக்கு + இயம் = இலக்கியம்
- இல் + ஆகி + ஆங்கு = இல்லாகியாங்கு
- இல் + உள் = இல்லுள்
- இ + வயிறு = இவ்வயிறு
- இ + இரண்டும் = இவ்விரண்டும்
- இவை + உண்டார் = இவையுண்டார்
- இழுக்கு + இன்றி = இழுக்கின்றி
- இளமை + கனி = இளங்கனி
- இளமை + பருவம் = இளமைப்பருவம்
- இழிவு + அன்று = இளிவன்று
- இழிவு + அறிந்து = இழிவறிந்து
- இறக்கி + இட்டு = இறக்கியிட்டு
- இறை + அருள் = இறையருள்
- இறை + என்று = இறையென்று
- இனத்து + இயல்பு + அது = இனத்தியல்பது
- இனம் + அத்து + இயல்பு = இனத்தியல்பு
- இனம் + நிரை = இனநிரை
- இனம் + மணி = இனமணி
- இனிது + ஆவது + எங்கும் = இனிதாவதெங்கும்
- இனிதேறா = இனிது + ஏறா
- இனிமை + ஆனவள் = இனிமையானவள்
- இனிமை + சொல் = இன்சொல்
- இன்பம் + துன்பம் = இன்பதுன்பம்
- இன்பம் + நிலை = இன்பநிலை
- இன்று + உன் = இன்றுன்
- இனிமை + அமுதம் = இன்னமுதம்
- இனிமை + இசை = இன்னிசை
- இனிமை + நிலை = இன்னிலை
- இனிமை + ஓசை = இன்னோசை
- சேர்த்து எழுதுக
ஈ வரிசை
- ஈண்டு + இனி + யான் = ஈண்டினியான்
- ஈண்டு + இவரே = ஈண்டிவரே
- ஈந்து + அளிப்பாய் = ஈந்தளிப்பாய்
- இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்
- இரண்டு + ஆறு + ஆண்டு = ஈராறாண்டு
- இரண்டு + ஆறு = ஈராறு
- இரண்டு + உயிர் = ஈருயிர்
- ஈன்று + எடுத்த = ஈன்றெடுத்த
உ வரிசை
- உடம்பு + எல்லாம் = உடம்பெல்லாம்
- உடன் + எய்தும் = உடனெய்தும்
- உடைத்து + அரோ = உடைத்தரோ
- உடைத்து + எறிந்த = உடைத்தெறிந்த
- உள் + பக்கம் = உட்பக்கம்
- உள் + பகை = உட்பகை
- உள் + பொருள் = உட்பொருள்
- உண்டு + என்று = உண்டென்று
- உள் + நிகழ் = உண்ணிகழ்
- உனக்கு + ஒரு = உனக்கொரு
- உனை + உனும் = உனையுனும்
- உன்னை + அல்லால் = உன்னையல்லால்
- உயர்ந்து + ஓங்கும் = உயர்ந்தோங்கும்
- உயர்வு + அடைவோம் = உயர்வடைவோம்
- உயர்வு + உள்ளல் = உயர்வுள்ளல்
- உயிர் + இழப்பு = உயிரிழப்பு
- உய்வு + இன்று = உய்வின்று
- உரம் + ஊட்டும் = உரமூட்டும்
- உரன் + உடை = உரனுடை
- உரை + அதனை = உரையதனை
- உரு + குலைக்காது + இருந்திட = உருக்குலைக்காதிருந்திட
- உலகு + அனைத்தும் = உலகனைத்தும்
- உலகம் + எலாம் = உலகமெலாம்
- உழுது + உண்டு = உழுதுண்டு
- உழுது + உழுது = உழுதுழுது
- உள்ளம் + மகிழ்வார் = உளமகிழ்வார்
- உளம் + அனைய = உளமனைய
- உள் + கருத்து = உள்கருத்து
- உள் + அடக்கியது = உள்ளடக்கியது
- உள்ளம் + அத்து + அன்பு = உள்ளத்தன்பு
- உள் + அரங்கம் = உள்ளரங்கம்
- உள் + ஆக்கியது = உள்ளாக்கியது
- உள் + உறை = உள்ளுறை
- உள் + ஒதுங்கி = உள்ளொதுங்கி
- உள் + ஒன்று = உள்ளொன்று
- உறுப்பு + ஒத்தல் = உறுப்பொத்தல்
- சேர்த்து எழுதுக
ஊ வரிசை
- ஊக்கம் + உடையான் = ஊக்கமுடையான்
- ஊர் + அறியும் = ஊரறியும்
- ஊர் + ஆண்மை = ஊராண்மை
- ஊர் + புறம் = ஊர்ப்புறம்
- ஊன்று + கோல் = ஊற்றுக்கோல்

எ வரிசை
- எங்கள் + அருள் + பிரகாச = எங்களருட்பிரகாச
- எங்கை + அர் = எங்கையர்
- எங்கு + உரைவீர் = எங்குரைவீர்
- எங்கு + உறைவீர் = எங்குறைவீர்
- எங்கு + உற்றது = எங்குற்றது
- எண்கு + இனங்கள் = எண்கினங்கள்
- எட்டு + திசை = எண்டிசை
- எண் + அற்றவை = எண்ணற்றவை
- எள் + நெய் = எண்ணெய்
- எண் + என்ப = எண்ணென்ப
- எதிர் + ஒலித்து = எதிரொலித்து
- எடுத்து + உரைக்கும் = எடுத்துரைக்கும்
- எ + திசை = எத்திசை
- எ + திசையும் = எத்திசையும்
- எ + நாளும் = எந்நாளும்
- எந்தை + ஆய் (அல்லது எம் + தாய்) = எந்தாய்
- எப்படி + படித்தான் = எப்படிப்படித்தான்
- எ + பொருள் = எப்பொருள்
- எமது + என்று = எமதென்று
- எ + மருங்கும் = எம்மருங்கும்
- எம்மொடு + என்றான் = எம்மொடென்றான்
- எரு + இட = எருவிட
- எவர்க்கும் + இவன் = எவர்க்குமிவன்
- எ + இடம் = எவ்விடம்
- எ + உயிர் + உம் = எவ்வுயிரும்
- எவை + எவை = எவ்வெவை
- எழுச்சி + ஊட்டி = எழுச்சியூட்டி
- எழுத்து + ஆணி = எழுத்தாணி
- எழுத்து + ஆகிய = எழுத்தாகிய
- எழுத்து + இட்டார் = எழுத்திட்டார்
- எழுத்து + என்ப = எழுத்தென்ப
- எழுந்து + எதிர் = எழுந்தெதிர்
- எளிது + ஆகும் = எளிதாகும்
- எளிது + என்ப = எளிதென்ப
- எளிமை + முறை = எளியமுறை
- எள் + அறு = எள்ளறு
- எனக்கு + இடர் = எனக்கிடர்
- என்பு + அணிந்த = என்பணிந்த
- என்ன + என்று = என்னவென்று
- என் + உயிர் = என்னுயிர்
- என்று + ஆகடியம் + ஆன = என்றாகடியமான
- என்று + ஆகடியம் + ஆன் = என்றாகடியமான்
- என்று + இசை = என்றிசை
- என்று + இருள் = என்றிருள்
- என்று + இவை = என்றிவை
- என்று + உணரற்பாற்று = என்றுணரற்பாற்று
- என்று + உருகுவார் = என்றுருகுவார்
- என்று + என்றும் = என்றென்றும்
- சேர்த்து எழுதுக
ஏ வரிசை
- ஏடு + எடுத்தான் = ஏடெடுத்தான்
- ஏது + இலா = ஏதிலா
- ஏரியில் + இருந்து = ஏரியிலிருந்து
- ஏற்றம் + பாட்டு = ஏற்றப்பாட்டு
- ஏறு + ஆண் + முல்லை = ஏறாண்முல்லை
- சேர்த்து எழுதுக
ஐ வரிசை
- ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
- ஐந்து + நிலம் = ஐந்நிலம்
- ஐந்து + பால் = ஐம்பால்
- ஐந்து + பூதம் = ஐம்பூதம்
- ஐந்து + ஐந்தாய் = ஐயைந்தாய்
ஒ வரிசை
- ஒப்பு + அற்ற = ஒப்பற்ற
- ஒப்பு + இலார் = ஒப்பிலார்
- ஒருபோது + ஆதல் = ஒருபோதாதல்
- ஒருவன் + கு = ஒருவற்கு
- ஒல்கார் + உரவோர் = ஒல்காருரவோர்
- ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று
- ஒன்று + ஒன்று + ஆக = ஒவ்வொன்றாக
- ஒண்மை + அழல் = ஒள்ளழல்
- ஒன்று + உண்டு = ஒன்றுண்டு
- ஒள் + நுதல் = ஒண்ணுதல்
- சேர்த்து எழுதுக
ஓ வரிசை
- ஓடு + வீடு = ஓட்டுவீடு
- ஓய்வு + இன்றி = ஓய்வின்றி
- ஓய்வு + ஊதியம் = ஓய்வூதியம்
- ஓர் + இடம் = ஓரிடம்
- ஓர் + இரவு = ஓரிரவு
- ஒன்று + ஆயிரம் = ஓராயிரம்
- ஓலை + சுவடி = ஓலைச்சுவடி