தமிழாய் எழுதுவோம்
தமிழாய் எழுதுவோம்
- மொழி ஒரு மிகச் சிறந்த கருவி ஆகும்.
- அதைத் திறம்படக் கையாண்டால் கலையாக மிளிரும்.
எழுத்துப்பிழை
- எழுதும் பொழுது ஏற்படும் பிழைகளைக் கீழ்காணும் வகைப்பாட்டில் பிரிப்பர்
- எழுத்துப்பிழை
- சொற்பொருட்பிழை
- சொற்றொடர்ப்பிழை
- பொதுவான பிழைகள் சில
அடிப்படை செய்திகள்
- உயிரெழுத்துக்கள் = 12. குறில், நெடில் என இரு வகைப்படும்
- மெய் எழுத்துக்கள் = 18. மூன்று வகைப்படும்.
- வல்லின மெய்கள் = க், ச், ட், த், ப், ற்
- மெல்லின மெய்கள் = ங், ஞ், ண், ந், ம், ன்
- இடையின மெய்கள் = ய், ர், ல், வ், ழ், ள்
- உயிர்மெய் எழுத்துக்கள் = 216 (உயிர்மெய்க் குறில் – 90, உயிர்மெய் நெடில் – 126)
- ஆய்தம் – 1
எழுத்துப்பிழை தவிர்க்க
- பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் ஆகும்.
- குறில், நெடில் வேறுபாடு அறிதல் வேண்டும்.
தமிழாய் எழுதுவோம் – விதிகள்
- தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய் எழுத்துக்கள் வருவதில்லை
- வல்லின மெய்யோடு சொல் முடியாது
- வல்லின மெய்கள் ஈரொற்றாய் வராது. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வராது
- க், ச், த், ப் ஆகியவற்றின் பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும்.
- ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும்.
- ட, ற என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வராது
- ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்
- மெல்லின எழுத்துக்களில் ன, ண சொல்லின் தொடக்கமாக வராது
- தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின மெய்யோ அவற்றின் இன மெல்லின மெய்யோ வரும். பிற மெய்கள் வராது
- ய், ர், ல், ழ், ள் என்னும் எழுத்துக்களுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று / கள் விகுதி / வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும் பொழுது இயல்பாய் நிற்கும்
- ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை
- ஞ், ந், வ் என்னும் எழுத்துக்களில் முடியக்கூடிய சொற்கள் அரிதாக உள்ளன
- ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளபெடுத்தால் மட்டுமே வரும்
- தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வராது
- தனிக்குறிலை அடுத்து ரகர ஒற்று வரின் அதனைத் தமிழ் இயல்புக்கு ஏற்ப திருத்தி எழுத வேண்டும்.
- ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துக்களும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துக்களும் வராது
- உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும்
- உயிர் வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்பதாக மாறும்
தமிழாய் எழுதுவோம் – லகர ளகர விதிகள் சில
- வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவது உண்டு
- லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் னகரமாய்த் திரிவது உண்டு
- ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த்திரிவதுண்டு.
- ளகரத்தைதைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவது உண்டு
- வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு தகரமும் றகரமாக மாறும்
- வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு நகரமும் னகரமாக மாறும்
பிழையை தவிர்க்க சில குறிப்புக்கள்
- எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள , ழ / ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
- தமிழில் இவ்வெழுத்துக்கள் வரும் முறையையும், அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்
- தொடக்கத்தில் சிலகாலம் வாய்விட்டோ அல்லது மனதுக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது
- வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும்
- கே, கெ, கொ, கோ போன்று கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.