தமிழ் மொழியின் நடை அழகியல்

தமிழ் மொழியின் நடை அழகியல்

தமிழ் மொழியின் நடை அழகியல்

  • அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகத் தோற்றம் தருகிற சங்க இலக்கியம், குறிப்பிட்ட சில அழகியல் பரிமாணங்களை வரித்துக் கொண்டுள்ளது

மொழிசார் கலை

  • அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்து தரும் நூல் = தொல்காப்பியம்
  • இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசுகின்ற இலக்கண நூல் = தொல்காப்பியம்
  • எழுத்தையும் சொல்லையும் போன்றே செய்யுளையும் ஓர் உள்ளமைப்பாகத் தொல்காப்பியம் கருதுகிறது
  • உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை

கலை முழுமை

  • இலக்கியத்தின் ‘பயன்’ பற்றித் தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருது உண்டு
  • தொல்காப்பியம், இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறிவியல் சார்ந்த கருத்து நிலைகள், கலை உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதை கூறுகிறது
  • அகத்திணை 5 என்றும், பா வகைகள் நான்கு என்றும் கூறுகிறது தொல்காப்பியம்
                             அந்நில மருங்கின் அறமுதலாகிய

                             மும்முதற் பொருட்கும் உரிய என்ப

                                                       —   (தொல்காப்பிய செய்யுள் 105)

நடையியல் – விளக்கம்

தமிழ் மொழியின் நடை அழகியல்

  • பாட்டு அல்லது கவிதையின் நடையியல் கூறுகளில், ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் மிக முக்கியமானவை

ஒலிக்கோலங்கள்

  • எந்த தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையில் இருந்தும் தான் தொடங்குகிறது
  • ஒலிக்கோலங்கள், சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பாகும்

சொற்புலம்

  • சொல்லில் தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடக்கின்றன
  • சொல் வளம் என்பது ஒரு பொருள் குறித்து வரும் பல சொல்லாய்ப் பல பொருள் குறிந்து வரும் ஒரு சொல்லாய் வருதல் ஆகும்
  • காளைகளின் பல இனங்களைக் கூறும் சங்க நூல் = முல்லைக் கலி
  • ஆடுகளின் அடையாளங்களை பாளை பெயர்களில் கூறுபவர் = கி.இராஜநாராயணன் தனது “கிடை” என்னும் குறு நாவலில்

தொகை மொழி

தமிழ் மொழியின் நடை அழகியல்

  • சங்க இலக்கிய மொழியின் அடையாங்களில் ஒன்று “தொகைமொழி” என்னும் கூறு நூல் = தொல்காப்பிய எச்சவியல்

தொடரியல் போக்குகள்

  • ஒலிக்கோலமும் சொர்புலமும் சொற்றொடர் நிலையம் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்திக்கட்டி வரப்புயர்த்தும் பணிகளை தொடரியல் வடிவம் செய்கின்றது
  • உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது, எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு ஆகும்.

பாடக் குறிப்பு

  • “தமிழ் மொழியின் நடை அழகியல்” என்ற உரைநடை தலைப்பு, தி.சு.நடராசனின் “தமிழ் அழகியல்” என்ற நூலில் இருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் – தி.சு.நடராசன்

தமிழ் மொழியின் நடை அழகியல்

  • பெயர் = தி.சு.நடராசன்
  • திறனாய்வுக் கலையை தமிழுக்கு அறிமுகப்படுதியவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
  • இவர் தமிழ்ப் பேராசிரியராக பணிப்புரிந்த பல்கலைக்கழகங்கள்,
    • மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
    • திருநெல்வேலி ம்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
    • போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம்

எழுதிய நூல்கள்

  • கவிதையெனும் மொழி
  • திறனாய்வுக்கலை
  • தமிழ் அழகியல்
  • தமிழின் பண்பாட்டு வெளிகள்

 

இந்த உரைநடை எழுதிய ஆசிரியர் தி.சு.நடராசன் அவர்களை பற்றி மேலும் அறிய “இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply