தம்பி நெல்லையப்பருக்கு

தம்பி நெல்லையப்பருக்கு

தம்பி நெல்லையப்பருக்கு

தம்பி நெல்லையப்பருக்கு 

  • இக்கடிதம் எழுதப்பட்ட ஆண்டு = 19 ஜூலை 1915. இடம், புதுச்சேரி ஆகும்.
  • நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களை நம் நிலைக்கு உயர்த்த அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார் பாரதியார்
  • தமிழ்நாடு வாழ்க என்று எழுத வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் நோய்கள் தீர வேண்டும் என்றார்.
  • வீதி தோறும் தமிழ் பள்ளிகள் திறக்க வேண்டும் என்றார். அப்பள்ளிகளில் நவீன கலைகள் கற்பிக்க வேண்டும் என்றார்
  • ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றார். ஒருவரை ஒருவர் தாழ்ந்தவர் இல்லை என்றார்.
  • பெண்ணை தாழ்மை செய்தவன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றும், பெண்ணை அடைத்தவன் கண்ணை அடிதான் என்றும் எழுத வேண்டும் என்றார்.
  • தொழில்கள், வியாபாரம், எந்திரங்கள் பெருக வேண்டும் என்றார்.
  • சங்கீதம், சிற்பம், எந்திர நூல், பூமி நூல், வான் நூல் போன்ற பல நூல்கள் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்றார்.

வம்சமணி தீபிகை

  • எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் “கவிகேசரி சாமி தீட்சிதர்” என்பவர் “வம்சமணி தீபிகை” என்னும் நூலை 1879-இல் வெளியிட்டார்
  • அப்பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசைக் கொண்டார் பாரதியார். இதற்காக அப்பொழுது எட்டயபுரத்தை ஆட்சி செய்து வந்த “வெங்கடேசர எட்டப்பருக்கு” 06.08.1919 இல் கடிதம் எழுதினார்.
  • ஆனால் பாரதியின் ஆசை நிறைவேறவில்லை
  • வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக “இளசை மணி” என்பவரால் 2008 ஆம் ஆண்டு அப்படியே வெளியிடப்பட்டது

பரலி சு. நெல்லையப்பர்

  • பரலி சு.நெல்லையப்பர் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
  • பாரதியின் கண்ணன் பாட்டு, நாடுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்
  • பாரதி நடத்திய “சூரியோதயம், கர்மயோகி” ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பணிபுரிந்தவர்.
  • “லோகோபகாரி, தேசபக்தன்” ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்
  • இவரின் கவிதை நூல்கள் = நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி
  • இவர் வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உள்ளார்

பரலி சு. நெல்லையப்பர் பற்றி மேலும் அறிய = இங்கே கிளிக் செய்யவும்

மகாகவி பாரதியார்

  • மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய “பரலி நெல்லையப்பருக்கு” என்ற இக்கடிதம் ரா.அ. பத்மநாபன் பதிப்பித்த “பாரதி கடிதங்கள” என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது

தம்பி நெல்லையப்பருக்கு

  • பாரதி, 15 வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம் முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குந்திக்கேசவருக்கு எழுதிய கடிதம் வரை அனைத்தும் நம்மிடம் பேசுவது போல் இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு.
  • பாரதியாரை விட 7 ஆண்டுகள் சிறியவர் பரலி நெல்லையப்பர். அவரை தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்பு காட்டினார் பாரதியார்.

பாரதியார் பற்றி மேலும் அறிய = இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

 

Leave a Reply