இளந்தமிழே

இளந்தமிழே

இளந்தமிழே

இளந்தமிழே – பாடல்

செம்பருத்தி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

       செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!

தமக்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்

       தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்

விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்

       வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால்

        ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே!

மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்

              முத்தமிழே! நீயுள்ளாய்; முன்னம் ஓர்நாள்

       பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்!

              பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்!

       மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு

              மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!

       கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்

              குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!

இலக்கணக்குறிப்பு

  • செந்தமிழ் (செம்மை + தமிழ்) – பண்புத்தொகை
  • செந்நிறம் (செம்மை + நிறம்) – பண்புத் தொகை
  • செம்பரிதி (செம்மை + பரிதி) – பண்புத்தொகை
  • சிவந்து – வினையெச்சம்
  • நோக – வினையெச்சம்
  • ஈன்று – வினையெச்சம்
  • கூவி – வினையெச்சம்
  • வியர்வை வெள்ளம் (வியர்வை ஆகிய வெள்ளம்) – உருவகம்
  • முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்
  • தமிழ்க்குயில் (தமிழாகிய குயில்) – உருவகம்
  • வாவா – அடுக்குத் தொடர்
  • குளிர்பொதிகை – வினைத்தொகை
  • இயம்பிடாய் – முன்னிலை ஒருமை நிகழ்கால வினைமுற்று
  • தந்தாய் – முன்னிலை ஒருமை இறந்த கால வினைமுற்று
  • சாய்ப்பான் – படர்க்கை ஆண்பால் எதிர்கால வினைமுற்று
  • விம்முகின்ற தோள் – நிகழ்காலப் பெயரெச்சம்
  • வீற்றிருக்கும் – ‘செய்யும்’ என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று

பிரித்து எழுதுக

  • செம்பரிதி = செம்மை + பரிதி
  • வானமெல்லாம் = வானம் + எல்லாம்
  • உன்னையல்லால் = உன்னை + அல்லால்
  • செந்தமிழே = செம்மை + தமிழே

நூல் குறிப்பு

  • இளந்தமிழே என்னும் இக்கவிதை சிற்பி பாலசுப்ரமணியத்தின் “நிலவுப்பூ” என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது

ஆசிரியர் குறிப்பு

இளந்தமிழே

  • இப்பாடலை எழுதியவர் சிற்பி பாலசுப்ரமணியம் ஆவார்
  • இவரின் ஊர் = கோவை மாவட்டம் ஆத்துப் பொள்ளாச்சி
  • இவர் கவிஞர், பேராசிரியர், மொழி பெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்
  • இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்
  • இவர் இரு முறை சாகித்திய அகாதமி விருதினை பெற்றவர்.
  • ஒன்று “ஒரு கிராமத்து நதி” (2003) என்ற கவிதை நூலிற்காகவும், மொழிபெயர்ப்புக்காக (2001) ஒரு முறை என இரு முறை விருதினை பெற்றுள்ளார்
  • இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகியவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
  • மலையாளத்தில் இருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் இவர்
  • சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
  • தமிழக அரசின் பாவேந்தர் விருது,குன்றக்குடி ஆதீனம் கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்
  • இவர் வானம்பாடி கவிஞர் ஆவார்.

சிறப்பு பெயர்

  • சிற்பி (எழுத்துக்களைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்)

கவிதை நூல்கள்

  • நிலவுப்பூ
  • சூரிய நிழல்
  • ஒளிப்பறவை
  • சர்ப்பயாகம்
  • ஒரு கிராமத்து நதி
  • பூஜ்யங்களின் சங்கிலி

உரைநடை நூல்கள்

  • இலக்கியச் சிந்தனைகள்
  • மலையாளக் கவிதல்
  • அலையும் சுவடும்

சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள “இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply