நெருக்கடி கால நியதிகள்
நெருக்கடி கால நியதிகள்
இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில், குடியரசுத் தலைவருக்கு, நாட்டின் எந்த ஒரு அவசர நெருக்கடி காலங்களுக்கும், தேவைக்கு ஏற்ப அவசரநிலை பிரகடனங்களை (Emergency Situations) அறிவிக்கும் உரிமை கொடுத்துள்ளது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மூன்று வகையான அவசரநிலை பிரகடனங்களை கொண்டுள்ளது.
- தேசிய அவசரநிலை (National Emergency) = போர் (War) அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு (External Agression) அல்லது ஆயுதமேந்திய கலவரம் (Armed Rebellion) (விதி 352)
- மாநில அவசரநிலை (குடியரசுத்தலைவர் ஆட்சி) (State Emergency or President’s Rule) = மாநில அரசில் அரசமைப்பு எந்திரத்தின் தோல்வி நிலை (Failure of Constitution) ஏற்படும் பொழுது கொண்டுவருதல் (விதி 356) அல்லது ஒன்றியத்தின் பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்கவோ அவற்றை செல்திறப்படுத்தவோ தவறுமிடத்து ஏற்படும் விளைவு (விதி 365)
- நிதி அவசரநிலை (Financial Emergency) = இந்தியா முழுவதிலோ அல்லது எப்பகுதியிலாவது நிதிநிலையில் ஸ்திரத்தன்மை மோசமானால் அறிவிக்கப்படும் (விதி 36௦)
குடியரசுத் தலைவர் (President) நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்கிறார். அவ்வாறு செய்யும் பொது மத்திய மாநிலத் தொடர்புகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. சாதாரண சமயங்களில் கூட்டாட்சியாக (Federal) செயல்படும் அரசியல் அமைப்பு முறை, நெருக்கடி நிலையில் ஒற்றையாட்சியாக (Unitary) உருமாற்றம் அடைகிறது. சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சுயாட்சி முடக்கப்படுகிறது. அணைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு சென்றுவிடுகிறது.
நெருக்கடி கால நியதிகள் – குறிப்பு
- 1978-ம் ஆண்டு 44-வது சட்டத் திருத்தத்தின் படி (44th Amendment Act, 1978), விதி 352-ல் “உள்நாட்டு கலவரம்” (Internal Disturbance) என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக “ஆயுதமேந்திய போராட்டம்” (Armed Rebellion) என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.
- அவசரநிலை பிரகடனம் அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அனால் அதற்கு முன்னர் அமைச்சரவை தனது ஆலோசனையை எழுத்து வடிவில் குடியரசுத் தலைவருக்கு வழங்கினால் மட்டுமே அவர் அவசரநிலையை பிரகடனம் செய்யவோ அல்லது அதனை மாற்றவோ இயலும்.
- விதி 352-ன் கீழ் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட அவசரநிலை பிரகடனம் நீதிப்புனராய்வுக்கு (judicial Review) உட்பட்டது.
- 36௦-பிரிவான நிதி அவசரநிலை, இந்தியாவில் இதுவரை பிரகடனப்படுத்தப் பட்டதில்லை.
நெருக்கடி கால நியதிகள்
தேசிய அவசரநிலை | மாநில அவசரநிலை / அரசியலமைப்பு தோல்வி | நிதி அவசரநிலை | |
விதிகள் | 352 | 356 | 360 |
அவசரநிலை அறிவிப்பதற்கான சூழ்நிலை | இந்தியாவின் பாதுகாப்பிற்கு அல்லது ஏதாவது ஒரு பகுதியில்,
1.போர் 2.வெளிநாட்டு ஆக்கிரமிப்பு 3.ஆயுதமேந்திய கலவரம் |
மாநில அரசில் அரசமைப்பு எந்திரத்தின் தோல்வி நிலை
ஒன்றியத்தின் பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்கவோ அவற்றை செல்திறப்படுத்தவோ தவறுமிடத்து ஏற்படும் விளைவு |
இந்தியா முழுவதிலோ அல்லது எப்பகுதியிலாவது நிதிநிலையில் ஸ்திரத்தன்மை மோசமானால் அறிவிக்கப்படும் |
முன் நிபந்தனை | காபினட் அமைச்சரவையில் இருந்து எழுத்துப் பூர்வமாக பரிந்துரை கடிதம் வழங்க வேண்டும் | ஆளுநரின் அறிக்கையின் மீது (அல்லது) அறிக்கை இல்லாமலும் | குடியரசுத் தலைவரின் அறிவிப்பின் பேரில் |
பாராளுமன்ற ஒப்புதல் | லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் ஒப்புதல் (1 மாதத்திற்குள்) | 2 மாதம் | 2 மாதம் |
லோக்சபா கலைத்தல் | 30 நாள் | 30 நாள் | 30 நாள் |
அதிகபட்ச காலம் | வரையறை இல்லை | 3 ஆண்டுகள் | வரையறை இல்லை |
காலமுறை ஒப்புதல் | ஒவ்வொரு 6 மாதத்திற்கும் | ஒவ்வொரு 6 மாதத்திற்கும் | ஒப்புதல் தேவை இல்லை |
பெரும்பான்மை | சிறப்பு பெரும்பான்மை தேவை | சாதாரண பெரும்பான்மை | சாதாரண பெரும்பான்மை |
திரும்ப பெறுதல் | குடியரசுத் தலைவரால் திரும்பப் பெறலாம்
பாராளுமன்ற ஒப்புதல் தேவை இல்லை லோக்சபாவில் சிறிய பெரும்பான்மையுடன் கூடிய தீர்மானம் |
குடியரசுத் தலைவரால் திரும்பப் பெறலாம்
பாராளுமன்ற ஒப்புதல் தேவை இல்லை
|
குடியரசுத் தலைவரால் திரும்பப் பெறலாம்
பாராளுமன்ற ஒப்புதல் தேவை இல்லை
|
நீதிப் புனராய்வு | உட்பட்டது | உட்பட்டது | உட்பட்டது |
அடிப்படை உரிமையில் மாற்றம் | ஏற்படும் | ஏற்படாது | ஏற்படாது |
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை
- FUNDAMENTAL RIGHTS / அடிப்படை உரிமைகள்
- DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY / வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- FUNDAMENTAL DUTIES / அடிப்படை கடமைகள்
- A SECULAR STATE / சமய சார்பற்ற நாடு
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை