பொது தமிழ் பகுதி ஆ பத்துபாட்டு

பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம்
குறிஞ்சிப்பாட்டு
முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை
நெடுநல்வாடை
மதுரைக்காஞ்சி

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படையின் உருவம்:

 • பொருள் = ஆற்றுப்படை
 • திணை = புறத்திணை
 • பாவகை = ஆசிரியப்பா
 • அடி எல்லை = 317

கடவுள் வாழ்த்து போன்றது;

 • பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை
 • பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது.
 • வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை.

புலவர், தலைவன்:

 • பாடிய புலவர் = நக்கீரர்
 • பாட்டுடைத் தலைவன் = முருகப் பெருமான்

வேறு பெயர்:

 • முருகு
 • புலவராற்றுப்படை

உரை:

 • நச்சினார்க்கினியர் உரை
 • பரிமேலழகர் உரை

முருகனின் அறுபடை வீடு:

தலங்கள் தலக்குறிப்பு
திருப்பரங்குன்றம் மதுரைக்கு தென்மேற்கில் உள்ளது
திருச்சீர்அலைவாய் சீராக வந்து மோதும் அலைகளின் கரை வாயிலில் அமைந்துள்ள திருச்செந்தூர்
திரு ஆவின்குடி பொதினிமலை. நாளடைவில் இதுவே பழனிமலை என் ஆயிற்று.
திருவேரகம் இதனை திருப்பதி என்று நச்சினார்கினியர் கூறுகிறார்
மலைப்பகுதி முருகன் குடியிருக்கும் குன்றுகள்
பழமுதிர்சோலை மதுரையை அடுத்துள்ள அழகர் மலை. இது திருமால் இருஞ்சோலை எனவும் வழங்கப்படுகிறது.

நூல் குறிப்பிடும் செய்திகள்;

 • முதல் பகுதி = திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோவில், இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் முருகன் செய்த போர்.
 • இரண்டாம் பகுதி = திருச்சீர்அலைவாய்(திருச்செந்தூர்) தலம், முருகனுடைய ஆறுமுகங்கள், பன்னிரு தோள்களின் செயல்கள்.
 • மூன்றாம் பகுதி = திரு ஆவின்குடி(பழனி மலை), வழிபாடும் மகளிரின் சிறப்புகள், முருகனை வெளிப்படும் முனிவரின் பெருமைகள்.
 • நான்காம் பகுதி = திருவேரகம்(திருப்பதி) என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஓதுவார் செயல்கள்,
 • ஐந்தாம் பகுதி = மலைப்பகுதி, மகளிர், குரக் குரவை, முருகனின் அணி, ஆசை, அழகு
 • ஆறாம் பகுதி = பழமுதிர்சோலை, முருகன் இருக்கும் நீர்த்துறை, பழமுதிர் சோலையின் அருவி, முருகன் அருளும் முறை.

பொதுவான குறிப்புகள்:

 • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.
 • நக்கீரர் பாடியவை = நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை
 • ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது.
 • முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார்.

முக்கிய அடிகள்:

 • உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
  பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு – (முதல் 2 வரிகள்)
 • இழுமென இழிதரும் அருவிப்
  பழமுதிர் சோலை மலைகிழ வோனே – (இறுதி 2 வரிகள்)
 • ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை
  மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
 • முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
  கட்கமழ் நெய்தல் ஓதி எல்படக்

 

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படையின் உருவம்:

 • பொருள் = ஆற்றுப்படை
 • திணை = புறத்திணை
 • பாவகை = வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா
 • அடி எல்லை = 248(ஆற்றுப்படை நூல்களுள் சிறியது)

பொருநர்:

 • ஒருவரைப் போல வேடமிட்டுப் பாடுபவரை பொருநர் என்பர்.
 • பொருநராற்றுப்படை போர்க்களம் பாடும் பொருநரை கூறுகிறது.

புலவர், தலைவன்:

 • பாடிய புலவர் = முடத்தாமக் கண்ணியார்
 • பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்

உரை:

 • இந்நூலிற்கு நச்சினார்க்கினியர் உரை உள்ளது.
 • மகாதேவ முதலியார் உரை

பெயர்க்காரணம்:

 • பொருநரைப் புரவலனிடம் பரிசில் பெற்ற பொருநன் ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததால் பொருநராற்றுப்படை எனப்பட்டது.

பொதுவான குறிப்புகள்:

 • கரிகாற் சோழன், பொருநரை அனுப்பும் போது  ஏழு அடி காலால் நடந்து சென்று வழியனுப்புவான்.
 • கரிகாலனின் வெண்ணிப்பறந்தலை வெற்றி கூறப்பட்டுள்ளது.
 • பொருநர் இசைவிழா, விரலி வருணனை, கரிகாற் சோழனின் விருந்து உபசரிப்பு போன்றவை கூறப்பட்டுள்ளது.
 • கரிகாலனின் வலிமையை “வெண்ணித்தாங்கிய வொருவரு நோன்றாள்” எனச் சிறப்பிக்கப்படுகிறது.
 • வறுமைக் கோலத்தோடு விளங்கிய ஆடையை நீக்கிப் பாம்பின் தோல் ஒத்த மெல்லிய ஆடையை கரிகாலன் வழங்குவான் எனப் கூறப்படுகிறது.

முக்கிய அடிகள்:

 • கொள்ளை உழுகொழு ஏய்ப்ப, பல்லே
  எல்லையும் இரவும் ஊன்றுகிறது மழுங்கி
 • ஆறுதலைக் கள்வர் படைவிட அருளின்
  மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை
 • சாறுகழி வழிநாள் சோறுநசை வறாது
  வேறுபுலம் முன்னிய விறகறிபொருந

 

சிறுப்பாணாற்றுப்படை

சிறுப்பாணாற்றுப்படையின் உருவம்:

 • பொருள் = ஆற்றுப்படை
 • தினை = புறத்திணை
 • பாவகை = ஆசிரியப்பா
 • அடி எல்லை = 269

சிறப்புப் பெயர்:

 • சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை(தக்கயாகப்பரணி உரையாசிரியர்)

பாணர்:

 • பாணர்கள் மூன்று வகைப்படுவர் = இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்
 • சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர் சீறியாழ்பாணர் என்பர்

புலவர், தலைவன்:

 • பாடிய புலவர் = நல்லூர் நத்தத்தனார்
 • பாட்டுடைத் தலைவன் = ஒய்மா நாட்டு நல்லியக்கோடன்

கடை ஏழு வள்ளல்கள்:

பேகன் மயிலுக்கு போர்வை அளித்தவன்
பாரி முல்லைக்கு தேர் தந்தவன்
காரி இரவலர்க்கு குதிரைகள் நல்கியவன்
ஆய் நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவன்
அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி அளித்தவன்
நள்ளி நடைப்பரரிகாரம் முட்டாது கொடுத்தவன்
ஓரி இரவலர்க்கு நாடுகளை பரிசாக நல்கியவன்

உரை;

 • நச்சினார்க்கினியர் உரை உள்ளது
 • மு.வை.அரவிந்தன் உரை

பொதுவான குறிப்புகள்:

 • தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இந்நூலை “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை” என்கிறார்.
 • திண்டிவனப் பகுதி ஒய்மா நாடு ஆகும்.
 • நல்லியக்கோடனின் தலைநகரம் “கிடங்கில்”
 • இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.
 • வேளாளர் வீடுகளில் நாய் வளர்த்ததைப் போல, உமணர்கள் வீட்டில் குரங்குகளை வளர்த்தனர்.

முக்கிய அடிகள்:

 • பன்மீன் நடுவே பால்மதிபோல
  இன்நடை ஆயமொடு இருந்தோன்
 • முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
  மடமா நோக்கின் வாணுதல் விறலியர்
 • தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின்
  மகிழ்நனை மறுகின் மதுரை
 • எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்

 

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பானாற்றுப்படையின் உருவம்:

 • பொருள் = ஆற்றுப்படை
 • திணை = புறத்திணை
 • பாவகை = ஆசிரியப்பா
 • அடி எல்லை = 500

பெயர்க்காரணம்:

 • பெரிய யாழ்ப்பாணர்கள் ஆற்றுப்படுத்துவதாலும்,
 • சிறுபாணாற்றுபடையை காட்டிலும் அதிக அடிகளைப் பெற்றிருப்பதாலும் இது பெரும்பாணாற்றுப்படை ஆயிற்று.

புலவர், தலைவன்:

 • பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங் கண்ணனார்
 • பாட்டுடைத் தலைவன் = தொண்டைமான் இளந்திரையன்

வேறு பெயர்கள்:

 • பாணாறு
 • சமுதாயப் பாட்டு

தொண்டைமான்:

 • சோழன் ஒருவனுக்கும் நாகக் கன்னிக்கும் பிறந்தவன் என நச்சினார்கினியர் கூறுகிறார்.
 • சோழன் நெடுமுடிக்கிள்ளிக்கும் நாக நாட்டரசன் மகள் பீலவள்ளிக்கும் பிறந்தவன் தொண்டைமான் என்கிறது மணிமேகலை.
 • துரோணர் மகன் அசுவத்தாமனுக்கும், மதனி என்கிற அரக்கன் மகளுக்கும் பிறந்த பல்லவ மன்னனே தொடைமான் என்கிறார் இராகவையங்கார்

பொதுவான் குறிப்புகள்:

 • நீர்ப்பெயற்று என்னும் ஊரின் பழம் பெயர் “நீர்ப்பாயல்துறை”.
 • இங்கு மிகப்பெரிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.
 • தொண்டைமானின் தலைநகரம் திருவெகஃகா.
 • திருவெகஃகா என்பது காஞ்சிபுரம்
 • யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது.
 • நெல்லரிசி கொண்டு மது தயாரித்தல் பற்றி குறிப்பிடுகிறது.

முக்கிய அடிகள்:

 • பொழிமலை துறந்த புகைவேய் குன்றத்து
  பழுமரம் தேடும் பறவை போல
 • மணிவார்த் தன்ன மாயிரு மருப்பின்
  பொன்வார்த் தன்ன புரியடங்கு நரம்பு
 • முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டி நர்க்கும்
  வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி
 • புனலோடு மகளிர் இட்ட பொலங்குழை
  இறைதேர் மணிச்சிரல் இரைசெத்து எரிந்து

மலைபடுகடாம்

மலைப்படுகடாம் உருவம்:

 • பொருள் =ஆற்றுப்படை
 • திணை = புறத்திணை
 • பா வகை = ஆசிரியப்பா
 • அடி எல்லை = 583(ஆற்றுப்படை நூல்களுள் பெரிய நூல்)

பெயர்க்காரணம்:

 • மலைக்கு யானையை உவமித்து மலையில் உண்டாகும் ஓசைகளைக் கடாம் என்று சிறப்பித்தமையால் இந்நூல் “மலைப்படுகடாம்” எனப்படுகிறது.
 • கடாம் = யானையின் மதநீர்

வேறுபெயர்:

 • கூத்தராற்றுப்படை(கூத்தன் ஒருவன் பிற கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதால்)

புலவர், தலைவன்:

 • பாடிய புலவர் = இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
 • பாட்டுடைத் தலைவன் = நன்னன் சேய் நன்னன்

மலைப்படுகடாம் குறிப்பிடும் இசைக்கருவிகள்:

கருவி விளக்கம்
முழவு பறை
ஆகுளி சிறுபறை
பதலை தபேலா
கோடு கொம்பு
பாண்டில் ஜால்ரா

பொதுவான குறிப்புகள்:

 • நன்னன் ஆண்ட பகுதி சவ்வாது மலைப்பகுதி.
 • கூத்தரைக் “களம் பெரு கண்ணுளர்” என்று கூறுகிறது.
 • சிவனைக் “காரி உண்டிக் கடவுள்” என்கிறது.
 • பண்டைய இசைக் கருவிகள் பற்றி மிகுதியாக கூறும் நூல் மலைப்படுகடாம் ஆகும்
 • நன்னனின் தலைநகரம் = செங்கண்மா(இன்றைய செங்கம்)
 • நன்னனின் மலை = நவிரமலை
 • நன்னனின் மனைவி கற்புக்கென்று தனிக்கொடி கண்டவள்.
 • ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது.
 • நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளது.

முக்கிய அடிகள்:

   • குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி

  மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்

  • செருசெய் முன்பின் குருசில் முன்னிய
  பரிசில் மறப்ப நீடலும் உரியீர்

 • இட்ட எல்லாம் பொட்டாங்கு விளைய
  பெயரோடு வைகிய வியன்கண் இரும்புனம்
 • தலைநான் அன்ன புகலொடு வழிசிறந்து
  பலநாள் நிற்பினும் பெறுகுவீர்

 

குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டின் உருவம்:

 • திணை = குறிஞ்சித்திணை
 • பா வகை = ஆசிரியப்பா
 • அடி எல்லை = 261

வேறு பெயர்கள்;

 • பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
 • களவியல் பாட்டு

புலவர்:

 • பாடிய புலவர் = கபிலர்
 • ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக

அறத்தோடு நிற்றல் துறையின் நிலைகள்:

 • எளித்தல்
 • ஏத்தல்
 • வேட்கை உரைத்தல்
 • ஏதீடு
 • தலைப்பாடு
 • உண்மை செப்பும் கிளவி
 • கூறுதல் உசாதல்

பொதுவான குறிப்புகள்:

 • ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இயற்றியது.
 • அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது.
 • கோவை நூல்களுக்கு குறிஞ்சிப்பாட்டு வழிக்காட்டியது என்பர்.
 • 99 வகையான மலர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளார்
 • தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் தான் முதன் முதலில் குறிஞ்சிப்பாட்டின் ஏடுகளை திரட்டி ஒழுங்குப்படுத்தி பதிப்பித்தார்.
 • “இம்மலர்க் குவியலை 34 அடிகளில் உரைத்தமையால் கபிலர் இயற்கையை வருணிப்பதில் உலகிலேயே தலைச்சிறந்தவர் ஆகிறார்” எனத் தனிநாயகம் அடிகள் பாராட்டுகிறார்.

முக்கிய அடிகள்:

 • முத்தினும்மணியினும் பொன்னினும் அத்துணை
  நேர்வரும் குரைய களம் கொடின் புணரும்
  சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
  மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
  ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
  எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்
 • இகல்மீக் கடவும் இருபெரும் வேந்தர்
  வினையிடை நின்ற சான்றோர் போல
  இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலோன்

முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டின் உருவம்:

 • பொருள் = ஆற்றியிருத்தல்
 • திணை = அகத்திணை(முல்லை)
 • பா வகை = ஆசிரியப்பா
 • அடி எல்லை = 103(பத்துப்பாட்டு நூல்களில் சிறியது)

பெயர்க்காரணம்:

 • முல்லைத் தினையை பாடியதால் முல்லைப்பாட்டு எனப்பட்டது.
 • “இல் இருத்தல் முல்லை” என்பது இதன் இலக்கணம்.

வேறு பெயர்கள்:

 • நெஞ்சாற்றுப்படை
 • முல்லை

பாடியவர்:

 • இந்நூலை பாடியவர் காவிரிப்பூம்பட்டினம் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார்
 • இவர் எட்டு தொகை நூல்களுள் ஒரு பாடலையும் பாடாதவர்.

தலைவன்:

 • முல்லைப்பாட்டு அகநூல் என்பதால் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
 • இந்நூலில் வரும் “கானம் நந்திய செந்நிலப் பெருவழி” என்னும் தொடரை கொண்டு இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று சிலர் கூறுவர்.

உரை:

 • இந்நூலுக்கு மறைமலையடிகள் ஆராய்ச்சி உரை எழுதி உள்ளார்.

பொதுவான குறிப்புகள்:

 • பத்துப்பாட்டுள் சிறிய நூல் இதுவே.
 • முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் சிறப்பாக கூறப்பட்டுள்ளன.
 • முதல் 23 அடிகள் = தலைவியின் பிரிவித் துயர் கூறப்பட்டுள்ளது.
 • அடுத்த 55 அடிகள் = அரசனின் பாசறை அமைப்பு, பாசறையின் சிறப்பு ஆகியன கூறப்பட்டுள்ளது.
 • அடுத்த பத்து அடிகள் தலிவியின் அவல நிலை கூறப்பட்டுள்ளது
 • இறுதியில் முல்லைநிலத்தின் இயல்பும், தலைவன் நிலையும், கார் காலத்திற்குப் பிறகு கூதிர் காலத்தில் அவன் திரும்புதல் கூறப்பட்டுள்ளது

முக்கிய அடிகள்:

 • நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை
  அரும்பு அவிழ் அலறி தூஉய்க் கைதொழுது
  பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
 • நேமியொடு, வலம்புரி பொறித்த மாதாங்குதடக்கை
  நீர்செல நிமிர்ந்த மாஅல் போல
 • குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுரத்து
  இரவுபகல் செய்யும் திண்பிடி ஒண்வாள்
  விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்

பட்டினப்பாலை

பட்டினப்பாலையின் உருவம்:

 • திணை = நெய்தல் திணையும் பாலைத் திணையும்
 • துறை = பொருள்வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல்(செலவழுங்குதல் = செல்லாது விடுதல்)
 • பாவகை = இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும் பாட்டு
 • அடி எல்லை = 301

பெயர்க்காரணம்:

 • பாலைத் திணையையும், காவிரிப்பூம்பட்டினம் நகரின் வளத்தையும் ஒருங்கே கூறுவதால் பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்:

 • வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
 • பாலைபாட்டு

புலவர், தலைவன்:

 • பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்
 • பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்

உரை:

 • மறைமலையடிகள் உரை
 • ரா.இராகவையங்கார் உரை

பொதுவான குறிப்புகள்:

 • பட்டினப்பாலை பாடியமைக்காக கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
 • இந்நூலுக்கு வஞ்சிநெடும் பாட்டு என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது
 • பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.
 • இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளது.
 • இந்நூல் அரகேற்றப்பட்ட இடம் = பதினாறு கால் மண்டபம்
 • பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதன் தலைநகரை அழித்தபோது, அந்நகரில் இந்நூல் அரங்கேற்றப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை அழிக்காதிருக்க ஆணையிட்டான் என “திருவெள்ளரைக் கல்வெட்டு” கூறுகிறது.
 • இந்நூலில் கிளவித் தலைவனின் பெயர் கூறப்படவில்லை.

முக்கிய அடிகள்:

 • நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
  காலின் வந்த கருங்கறி மூடையும்
  வடமலை பிறந்த மணியும் பொன்னும்
  குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
 • தமவும் பிறவும் ஒப்ப நாடி
  கொள்வதுஉம் மிகை கொளாது
  கொடுப்பதூஉம் குறைகொடாது
  பல்பண்டம் பகர்ந்து வீசும்
 • முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
  வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
  வாரேன் வாழிய நெஞ்சே

நெடுநல்வாடை

நெடுநல்வாடையின் உருவம்:

 • திணை = முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும் புறமும் கலந்த நூல்)
 • பாவகை = ஆசிரியப்பா
 • அடி எல்லை = 188

பெயர்க்காரணம்;

 • தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் திகழ்வதால் நெடுநல்வாடை என் ஆயிற்று.
 • நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை

வேறு பெயர்கள்:

 • பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
 • மொழிவளப் பெட்டகம்
 • சிற்பப் பாட்டு
 • தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா)

புலவர், தலைவன்:

 • பாடிய புலவர் = நக்கீரர்
 • பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

உரை:

 • கோதண்டபாணி பபிள்ளை உரை
 • வேங்கடா செட்டியார் உரை

திரு.வி.காவின் கூற்று;

 • நூலின் பெயர் காரணத்தை திரு.வி.க அவர்கள், “வாடை துன்பத்தைக் குறிக்கும்; நல்ல என்பது அன்பை குறிக்கும்; நெடு என்பது அழியாமையை குறிக்கும்; எனவே அழியாது நீளும் நல்வாடை” என்றார்.
 • திரு.வி.க அவர்கள்,”ஒரு சிறு புல் நுனியில் மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம் காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன” என்றார்.
 • திரு.வி.க அவர்கள், “நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச்சுரங்கம்” என நூலை பாராட்டுகிறார்.

பொதுவான குறிப்புகள்:

 • நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.
 • “கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்
 • பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றது இந்நூல்.
 • இதில் கூறப்பட்டுள்ள பாசறை = கூதிர் பாசறை
 • பேராசிரயர் சுந்தரம்பிள்ளை, இந்நூலை,
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கிணமில் கற்பனையே

எனப் புகழ்கிறார்.

முக்கிய அடிகள்:

 • குன்று குளிர்ப்பன்னக் கூதிர்ப்பானாள்
 • வேம்புதலை யாத நோன்காழ் எஃகம்
 • சிலரொடு திரிதரும் வேந்தன்
  பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
 • மா மேயல் மறப்ப மந்தி கூர
 • பறவை பதிவான வீழ, கறவை
  கன்று கோள் ஒழியக் கடிய வீசி

மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சியின் உருவம்:

 • திணை = மருதம், புறத்திணை
 • பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா
 • அடி எல்லை = 782

பெயர்க்காரணம்:

 • மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள் நிலையற்றவை என்று காஞ்சித் திணையை விரித்துக் கூறுவது மதுரைக்காஞ்சி

வேறு பெயர்கள்:

 • மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)
 • கூடற் தமிழ்
 • காஞ்சிப்பாட்டு

புலவர், தலைவன்;

 • பாடிய புலவர் = மாங்குடி மருதனார்
 • பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

பாண்டியனின் போர் வெற்றி:

 • கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
 • சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
 • குறுநில மன்னர்கள் ஐவர் = திதியன், எழினி, எருமையூரன், பொருளன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களை தோற்கடித்தான்

பாண்டியனின் முன்னோர்:

 • முந்நீர் வடிம்பு அலம்ப நின்ற பாண்டியன்
 • பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
 • நிலத்திரு திருவிற் பாண்டியன்

பொதுவான குறிப்புகள்:

 • நிலையாமையை உணர்த்தும் திணை காஞ்சித்திணை
 • தொல்காப்பியரின் காஞ்சித்திணை நிலையாமை பற்றியது; புறப்பொருள் வெண்பா மாலையின் காஞ்சித் திணை போர் பற்றியது.
 • பத்துப்பாட்டின் அதிக அடிகளை கொண்டது
 • பத்துப்பாட்டு வெண்பா இந்நூலை “பெருகுவளமதுரை காஞ்சி” எனப் போற்றுகிறது.
 • மதுரையின் நாள் அங்காடியும்(பகல் கடல்), அல் அங்காடியும் (இரவு நேரக்கடை) கூறப்பட்டுள்ளது.
 • இதனை “மாநகர்ப் பாட்டு” எனக் கூறியவர் ச.வே.சுப்பிரமணியன்
 • மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்கள் = திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா.

முக்கிய அடிகள்:

 • கரை பொருது இறங்கும் கணைஇரு முந்நீர்
  திரையீடு மணலிலும் பலரே, உரைசொல்
  மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
 • அளந்து கடை அறியா வளம்கெழு தாரமொடு
  புத்தேன் உலகம் கவினிக் காண்வர
  மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை

Leave a Comment

Your email address will not be published.