கார் நாற்பது
கார் நாற்பது ஆசிரியர்
- ஆசிரியர் = மதுரைக் கன்னங் கூத்தனார்
- பாடல்கள் = 40(அகநூல்களில் அளவில் சிறியது)
- திணை = அகத்திணை – முல்லைத்திணை
- பாவகை = வெண்பா
கார்நாற்பது விளக்கம்
- கார் = கார் காலம், மழைக்காலம்
பொதுவான குறிப்புகள்
- இந்நூல் நாடகப் பாங்கு கொண்டு அமைந்தவை.
- அகப்பொருள் கூறும் நூல்களுள் மிகவும் சிறியது.
- ஆசிரியரின் இயற்பெயர் = கூத்தன்
- இவர் தனது நூலில் திருமால், பலராமன், ஆகியோரை குறிப்பிடுவதால் இவரை வைணவர் என்பர்.
- சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிடுதல் பற்றியும் நூல் கூறுகிறது.
- நூலில் கூறப்படும் துறை = வினைமேற் சென்று திரும்பும் தலைவன் பாகனோடு பேசி விரைந்து வருதல்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒருதிணையை (முல்லை) மட்டும் பாடிய நூல்.
- நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் இந்நூலில் மேற்கோள் சான்று காட்டியுள்ளார்.
முக்கிய அடிகள்
- செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
- மேனிபோல் புல்என்ற காடு
- தூதோடு வந்த மழை
- பாடுவண்டு ஊதும் பருவம் பனணத்தோளி
- வாடும் பசலை மருந்து
- பதினெண் கீழ் கணக்கு நூல்கள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக்காஞ்சி
- ஏலாதி