கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

  • கில்ஜி வம்சம் என்பது, “துருக்கிய, ஆப்கன் கலந்த பிரிவினர்”.
  • கில்ஜி வம்சத்தை துவக்கியவர் = ஜலாலுதீன் பெரோஷா கில்ஜி
  • கில்ஜி வம்சம் ஆண்ட மொத்த ஆண்டுகள் = 30 ஆண்டுகள்.
  • கில்ஜி வம்ச ஆட்சியாளர்கள்
        1. ஜலாலுதீன் கில்ஜி = 1290 – 1296
        2. அலாவுதீன் கில்ஜி = 1296 – 1316
        3. ஷிகாபுதின் உமர் = 1316 (35 நாள்)
        4. குத்புதின் முபாரக் ஷா கில்ஜி = 1316 – 1320
        5. நசுருதின் குஸ்ரூ கான் = 1320 (சுமார் 5 மாதம்)
  • கில்ஜி வம்ச ஆட்சியாளர்களில் நீண்ட நாள் ஆட்சி செய்தவர் = அலாவுதீன் கில்ஜி
  • கில்ஜி வம்ச ஆட்சியாளர்களில் மிகக் குறைந்த நாள் ஆட்சி செய்தவர் = சிகாபுதின் உமர்
  • டெல்லி சுல்தான்களிலே மிகக் குறைந்த நாள் ஆட்சி செய்தவர் = சிகாபுதின் உமர்
  • கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

 ஜலாலுதீன் கில்ஜி

  • கில்ஜி வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர்.
  • கி.பி. 1290 இல் பதவி ஏற்றார்.
  • அடிமை வம்ச மன்னர் சம்சுதீன் கைமர்ஸ் இடம் போர்ப்படை தளபதியாக பணியாற்றி அவரை கொன்று ஆட்சியை கைப்பற்றினார்.
  • இவரின் பெயர் = பிரோஸ்.
  • “சயிஷ்ட கான்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
  • “கருணையுள்ள ஜலாலுதீன்” என்று அழைக்கப்பட்டார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • ஆட்சியை கைப்பற்றிய உடன் தனது பெயரை “ஜலாலுதீன் கில்ஜி” என மாற்றிக் கொண்டார்.
  • பால்பனால் ஏற்படுத்தப்பட்ட கடுமையான ஆட்சி முறையை குறைத்த சுல்தான் = ஜலாலுதீன் கில்ஜி.
  • மக்கள் சுதந்திரமாக வாழ அனுமதித்த முதல் டெல்லி சுல்தான்.
  • ஜலாலுதீன் கில்ஜியை கொன்று ஆட்சியை கைப்பற்றியவர் = அலாவுதீன் கில்ஜி.
  • ஜலாலுதீன் கில்ஜி கொல்லப்பட்ட இடம் = காரா (மாணிக்பூர்)
  • கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
அலாவுதீன் கில்ஜியின் சாதனைகளும் சீர்திருத்தங்களும்
அலாவுதீன் கில்ஜியின் சாதனைகளும் சீர்திருத்தங்களும்

அலாவுதீன் கில்ஜி

  • நிரந்தர ராணுவ படையை உருவாக்கிய முதல் டெல்லி சுல்தான்.
  • வீரர்களுக்கு ஊதியமாக பணத்தை வழங்கிய முதல் டெல்லி சுல்தான்.
  • முஸ்லிம் உலேமாக்களின் பேச்சை கேட்காத முதல் டெல்லி சுல்தான்.
  • “சிக்கந்தர்-ஐ-சனி” என்ற பட்டத்தை தானே சூட்டிக் கொண்டார்.
  • தன்னை “இரண்டாம் அலெக்சாண்டர்” என்று அழைத்துக் கொண்ட டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
  • இவரின் நடவடிக்கைகளில் சிறந்தது = அங்காடி சீர்திருத்தம்.
  • அங்காடி சீர்திருத்தம் மூலம் வீரர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கினார்.
  • லஞ்சத்தை ஒழிக்க முயற்சி செய்தார்.
  • டெல்லி பகுதிகளில் மதுபானங்களை விற்கவோ, குடிக்கவோ தடை விதித்தார்.
  • அரசியலையும், மதத்தையும் தனியாக பிரித்த முதல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆவார்.
  • மேய்ச்சல் வரி (சேராய்) விதித்த முதல் டெல்லி சுல்தான்.
  • வீட்டு வரி (காரி) விதித்த முதல் டெல்லி சுல்தான்.
  • படை வீரர்கள் பட்டியல் (சேரா) முறையை கொண்டு வந்தார்.
  • குதிரைகளுக்கு சூடு போடும் (தாக்) முறையை கொண்டு வந்தார்.
  • புலனாய்வு அதிகாரிகளை (பரித்-ஐ-மண்டி) நியமித்தார்.
  • சுல்தானின் ரகசிய ஒற்றர் படை (முன்ஹியன்) உருவாக்கினார்.
  • யாருடைய ஆட்சி காலத்தில் மிக அதிக அளவு மங்கோலிய படையெடுப்பு நிகழ்ந்தது = அலாவுதீன் கில்ஜி.
  • மங்கோலிய படையெடுப்பை மிக அதிகளவு சந்தித்த டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
  • மங்கோலியர்களுக்கும் அலாவுதீன் கில்ஜிகும் எல்லையாக அமைந்த ஆறு = ராவி நதி.
  • சுல்தானாக பதவி ஏற்ற பின்னர் அலாவுதீன் நடத்திய முதல் தாக்குதல் = அரசர் ராயகர்ணா (குஜராத்)
  • அலாவுதீன் கில்ஜியால் ஆதரிக்கப்பட்டவர்கள் = அமீர் குஸ்ரூ.
  • தபேலா, சிதார், நவீன வீணை ஆகிய கருவிகளை உருவாக்கியவர் = அமீர் குஸ்ரூ
  • ஏழு டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் உயரிய அந்தஸ்தை பெற்றவர் = அமீர் குஸ்ரூ.
  • அமீர் குஸ்ரூவிற்கு, “துதி-ஐ-ஹிந்த்” என்ற பட்டத்தை வழங்கினார்.
  • முதன் முதலில் “குதிரை காலனி வடிவ வளைவு” எங்கு கட்டப்பட்டது = அலய் தார்வாசா (குதுப்மினாரின் நுழைவாயில்).
  • அலாவுதீன் கில்ஜி கட்டிய கட்டிடங்கள் = ஜமைத் கானா மசூதி, அலய் தார்வாசா, ஹவுஸ் காஸ், மஹால் ஹசர் சதூன் (1000 தூண் மஹால்), அலய் மினார்.
  • “சிரி கோட்டை” என்ற புதிய நகரை உருவாக்கினார்.
  • லஞ்சத்தை ஒழிக்க முயற்சி செய்த டெல்லி சுல்தான் இவரே.
  • கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்
அலாவுதீன் கில்ஜி படையெடுப்புகள்
அலாவுதீன் கில்ஜி படையெடுப்புகள்

அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்புகள்

  • விந்திய மழைத்தொடர்களை தாண்டி படையெடுப்பை நிகழ்த்திய முதல் டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி
  • தென்னக பகுதிகள் மீது படையெடுப்பை நிகழ்த்திய முதல் டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
  • அலாவுதீன் கில்ஜியின் வடஇந்தியப் பகுதிகளில் படையெடுப்பை நடத்திய தளபதி = காஸி மாலிக்.
  • அலாவுதீன் கில்ஜியின் தென்னக படையெடுப்பை தலைமை ஏற்று நடத்திய தளபதி = மாலிக்கபூர்.
  • கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

அலாவுதீன் கில்ஜியின் வடஇந்திய படையெடுப்புகள்

  • தலைமை = அலாவுதீன் கில்ஜி, உலூக் கான்.
  • முதலில் தாக்கப்பட்டது = குஜராத்.
  • குஜராத் படையெடுப்பின் பொழுது தான் “மாலிக் காபூரை” ஆயிரம் தினார்களுக்கு வாங்கினார் அலாவுதீன் கில்ஜி.
  • சித்தூரை ஆண்ட ராஜா ரத்தன் சிங்கை, தோற்கடித்து அவரின் மனைவியான “பத்மினி தேவியை” மணக்க முயற்சி செய்தான். ஆனால் பத்மினிதேவி, “ஜவகர்” என்னும் முறையான தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • வடஇந்திய படையெடுப்புகள் = குஜராத் ரத்னாம்போர்  சித்தூர்  மால்வா  தார்  சந்தேரி  சிவனா  ஜலூர்.
  • சித்தூரின் பெயரை “கிஸ்ரபாத்” என பெயர் மாற்றம் செய்தான்.

அலாவுதீன் கில்ஜியின் தென்னக படையெடுப்புகள்

  • தலைமை = மாலிக் காபூர்
  • தோற்றவர்கள் = தேவகிரி யாதவர்கள் (அரசன் – ராம் சந்திர தேவன்), வாரங்காலின் காகதிய அரசன் பிரதாப் ருத்ர தேவன், துவாரசமுத்திராவை ஆண்ட ஹோய்சால அரசன் மூன்றாம் வீரா பல்லாளன் மற்றும் மதுரையை ஆண்ட பாண்டியன் மாறவர்மன் குலசேகர பாண்டியன்.
  • தென்னக படையெடுப்புகள் = தேவகிரி வாரங்கால்  துவாரசமுத்திரா  மலபார்  மதுரை.
  • கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

கோகினூர் வைரம்

  • வாரங்கால் பகுதியை ஆண்ட “இரண்டாம் பிரதாப் ருத்ர தேவர்” மீது மாலிக்காபூர் தனது படையெடுப்பை மேற்கொண்டார்.
  • தோல்வியை ஏற்றுக்கொண்டு இரண்டாம் பிரதாப் ருத்ர தேவர், “கோகினூர் வைரத்தை” மாலிக்காபூருக்கு பரிசாக வழங்கினார்.
  • அதனை அவர் அலாவுதீன் கில்ஜிக்கு வழங்கினார்.
  • கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

மாலிக் கபூர்

  • 1000 தினார்களுக்கு வாங்கப்பட்டதால் இவன் “ஹசர் தினாரி” என்று அழைக்கப்பட்டான்.

சிகாபுதின் உமர்

  • 35 நாட்கள் மட்டுமே ஆட்சி புரிந்தார்.

குத்புதின் முபாரக் ஷா கில்ஜி

  • “காலிப்” பட்டத்தை தங்கு தானே சூட்டிக் கொண்டார்.
  • “காலிபா” பட்டத்தை தனக்கு தானே சூட்டிக் கொண்ட முதல் டெல்லி சுல்தான் இவரே.
  • மக்களின் நன்மதிப்பை பெற முயற்சி செய்தார்.
  • அலாவுதீன் கில்ஜி விதித்த கடுமையான சட்டங்களை நீக்கினார்.
  • கில்ஜி வம்சத்தின் வரலாறும் சாதனைகளும்

நசுருதின் குஸ்ரூ கான்

  • இந்து தாயிற்கு பிறந்து டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் மன்னன்.
  • காசி மாலிக்கால் கொல்லப்பட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *