கி ராஜநாராயணன்
கி ராஜநாராயணன் ஆசிரியர் குறிப்பு
- சுருக்கமாக “கி.ரா” என அழைக்கப்படுகிறார்
- கி. ராஜநாராயணனின் இயற்பெயர் = ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்
- ஊர் = கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமம்
- பெற்றோர் = ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள்
கி ராஜநாராயணன் சிறப்பு பெயர்கள்
- “வட்டாரக் கதைகளின் முன்னோடி” எனப்படுபவர் = கி.ராஜநாராயணன்
- “கரிசல் கதைகளின் தந்தை” எனப்படுபவர் = கி.ராஜநாராயணன்
- “கரிசல் இலக்கியத்தின் தந்தை” எனப்படுபவர் = கி.ராஜநாராயணன்
- “இனக்குழு அழகியலின் முன்னோடி” எனப்படுபவர் = கி.ரா
- “கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
- “கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
- “எழுத்துலக அட்சயபாத்திரம்” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
- “தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
- “தலைசிறந்த கதைசொல்லி” என்று அழைக்கப்படுபவர் = கி.ராஜநாராயணன்
- “கரிசல் குயில்” என அழைக்கப்பட்டவர் = கி.ரா
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கி ராஜநாராயணன் சிறுகதைகள்
- சொந்த சீப்பு (கி.ராவின் முதல் சிறுகதை= https://www.kirajanarayanan.com/bio)
- கன்னிமை
- மின்னல்
- கோமதி
- நிலை நிறுத்தல்
- கதவு
- பேதை
- ஜீவன்
- நெருப்பு
- விளைவு
- பாரதமாதா
- கண்ணீர்
- சீதாவின் கல்யாணம்
- அசல்
- அவுரி
- வந்தது
- சிநேகம்
- புத்தக உலகம்
- புவனம்
- சுற்றுப்புற சுகாதாரம்
- இவர்களைப் பிரித்தது?
- திரிபு
- பொம்மைகளும் கிளர்ந்தெழும்!
- காய்ச்சமரம்
- வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்
- அன்பே மனிதமாய்…
- யாருடைய நாள் இது?
- காலம் காலம்
- ஒரு தலை
- ராசா தேடின பொண்ணு!
- தேள் விஷம்
- கன்னிமை
- ஒரு வாய்மொழிக் கதை
- தாச்சண்யம்
- கோமதி
- இல்லாள்
- தமிள் படிச்ச அளகு
- வலி வலி
- அங்கணம்
- கொத்தைப் பருத்தி
- ஜீவன்
- கறிவேப்பிலைகள்
- சாவு
- வேட்டி
- கதவு
- அம்மா பிள்ளை
- அப்பா பிள்ளை
- நாற்காலி
- கரிசல்கதைகள்
- கி.ரா-பக்கங்கள்
- கிராமிய விளையாட்டுகள்
- கிராமியக்கதைகள்
- குழந்தைப்பருவக்கதைகள்
- புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
- புறப்பாடு
- பெண்கதைகள்
- பெண்மணம்
- வயது வந்தவர்களுக்கு மட்டும்
- நிலைநிறுத்தல்
- கனிவு
- கதை சொல்லி
- மாயமான்
கி ராஜநாராயணன் குறு நாவல்கள்
- பிஞ்சுகள்
- கிடை
கி ராஜநாராயணன் நாவல்கள்
- கோபல்ல கிராமம்
- கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது – 1991)
- அந்தமான் நாயக்கர்
- கரிசல் காட்டுக் கடுதாசி
- கொத்தைபருத்தி
- அண்டரெண்ட பட்சி (இறுதி நாவல்)
கி ராஜநாராயணன் கட்டுரைகள்
- ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
- புதுமைப்பித்தன்
- மாமலை ஜீவா
- இசை மகா சமுத்திரம்
- அழிந்து போன நந்தவனங்கள்
- மாந்தருள் ஒரு அன்னப்பறவை
தொகுதி
- நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
அகராதி
- கரிசல் வட்டார வழக்கு அகராதி
கி ராஜநாராயணன் குறிப்புகள்
- இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
- கி.ராவின் முதல் சிறுகதை ‘சொந்த சீப்பு’ (தகவல் = https://www.kirajanarayanan.com/bio)
- மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி, அப்படி ஒதுங்கியபோதும் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டவர் கி. ராஜநாராயணன்.
- 2007-ம் ஆண்டு இவரின் படைப்புகள் அனைத்தும் 944 பக்கங்களை கொண்ட “நாட்டுப்புறக்கதை களஞ்சியம்” என்ற படைப்பாக வெளிவந்தது.
- தனது படைப்புகளின் உரிமை முதலில் தனது வாசகர் புதுவை இளவேனிலுக்கும், இரு மகன்களுக்கும் கி.ரா. அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாகத் தனது எழுத்துப் படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் எழுதிக் கொடுத்து இருப்பது இதுவே முதல் முறை.
- இவரது கதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக 2007-இல் வெளியானது.
- ‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.
- “கிடை” என்ற குறு நாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார்.
கி ராஜநாராயணன் சிறப்புகள்
- ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
- “கரிசல் வட்டார அகராதி” என்று மக்கள் பேசும் சாதாரண தமிழுக்கு அகராதி உருவாக்கிய முதல் அறிஞர் இவரே.
- 1991ஆம் ஆண்டு இவரது ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற படைப்பிற்குச் சாகித்திய அகாடாமி விருது வழங்கப்பட்டது.
- ஜெயமோகன் = கி.ராவின் புனைவுலகம் ஒரு மானுடக்கனவை முன்வைக்கிறது. எந்த நவீனத்துவ எழுத்தாளரிடமும் அத்தகைய கனவு கிடையாது. அக்கனவால்தான் அவர் மாபெரும் படைப்பாளி.
- எஸ்.ராமகிருஷ்ணன் = கடவுள் விடுகின்ற பெருமூச்சைப் போல காற்றுவீசும் கரிசல் வெளி என்று தேவதச்சன் ஒரு கவிதையில் சொல்கிறார். அந்த மூச்சுக்காற்றை இசையாக்கியவர் கிரா. தனது படைப்புகளின் வழியே அவர் என்றும் நம்மோடு இருப்பார்.
- கி.ரா = “மனிதனுக்கு வைத்தியம் செய்யணும்னா அதை கதைகளைக் கொண்டுதான் செய்ய முடியும்”
- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் “கரிசல் காட்டு இலக்கியத்தின்” முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு 1 கோடியே 50 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அவரது முழு திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவரங்கம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
கி ராஜநாராயணன் பெற்ற விருதுகள்
- சாகித்ய அகாடமி விருது (“கோபல்லபுரத்து மக்கள்” நாவலுக்காக)
- இலக்கிய சிந்தனை விருது (“பிஞ்சுகள்” என்ற குழந்தைகள் நாவலுக்காக)
- தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான உ.வே.சா விருது,
- தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் விருது
- மா.சிதம்பரம் விருது
- தமிழ் வளர்ச்சி மன்றப் பரிசு (“கதவு” என்ற சிறுகதைக்காக)
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது
- மனோன்மணியம் சுந்தரனார் விருது