கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு

கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு

கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு

 

கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு 

                இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையைப் பின்பற்றினாலும் இதில் கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சியின் சிறப்புக் கூறுகள் காணப்படுகின்றன. இது இந்திய அரசியல் அமைப்பு முறையின் புதிர் பொதிந்த தனிச் சிறப்பாகும். நாடாளுமன்ற – ஒற்றையாட்சி – கூட்டாட்சிக் கலப்பு வேறு எந்த அரசியல் அமைப்புச் சட்டத்திலும் காணக் கிடைக்காத அருங்கலவையாகும்.

   இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களை பற்றி பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது கூட்டாட்சி போன்றது. ஒற்றையாட்சி முறை சாய்வு அல்லது மைய அரசு சாய்வு கொண்ட கூட்டாட்சி அல்லது அமைப்பு முறையில் கூட்டாட்சியாகவும், உயிர்மூச்சில் ஒற்றையாட்சி முறையாகவும் உள்ளது என பலர் கூறுவர்.

கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு

கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு

         அரசியல் அமைப்பு சட்டதின் எந்தவொரு இடத்திலும் “பெடரேசன் (Federation) அல்லது கூட்டாட்சி” என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இந்தியாவில் கூட்டாட்சி முறையே நடைபெறுகிறது.

 

              இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி-1-ல் (Article 1), “இந்தியாவை, மாநிலங்களின் ஒன்றியம்” (Union of States) என கூறப்படுகிறது. இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன.

  1. ஒன்று, மாநிலங்களின் ஒப்பந்த அடிப்படையில் இந்த இந்திய யூனியன் அல்லது இந்திய ஒன்றியம் உருவாகியது இல்லை.
  2. இரண்டாவது, மாநிலங்கள் தனியாக அல்லது சுதந்திரமாக இயங்க இயலாது. மாநிலங்களின் இசைவின்றியே அவற்றின் பெயரையோ அல்லது எல்லையை பாராளுமன்றத்தால் மாற்ற இயலும்.

       இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்ட சட்டம், மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகாரப் பங்கீடு (Division of Powers), அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதன்மை, ஈரவை சட்ட மன்றம் (Bicameralism), சுதந்திர நீதித்துறை (Independent Judiciary) போன்ற கூட்டாட்சி சிறப்பு கூறுகள் உள்ளன.

                      இதே போன்று ஒற்றை அரசியல் அமைப்புச் சட்டம் (Single Constitution Law), வலிமையான மத்திய அரசு (A Strong Centre), ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship), அரசியல் அமைப்புச் சட்டத்தின் நெகிழ்வுத் தன்மை, ஒருங்கிணைக்கப்பட்ட நீதித்துறை (Integrated Judiciary), குடியரசுத் தலைவர் மூலம் மத்திய அரசு நியமிக்கும் மாநில ஆளுநர்கள் (Appointment of Governor), அகில இந்தியப் பணிகள் போன்றவை ஒற்றையாட்சி (Non-Federal Features) சிறப்புக்கூறுகளாகும்.

கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு

 

  • இந்திய அரசியல் அமைப்பின் இத்தகைய தன்மைகளைக் கண்டு, கே.சி.வியர் (K.C.Wheare), அவர்கள் “இந்திய அரசமைப்பு வடிவமைப்பில் கூடாட்சியாகவும், உயிர்மூச்சில் ஒற்றையாட்சியாகவும் அமைந்துள்ளது” (Federal in form, but Unitary in Spirit) என்றார். மேலும் அவர் “அரைகுறை கூட்டாட்சி (அ) கலவியான கூட்டாட்சி” (Quasi – Federal) என்றும் கூறுகிறார்.
  • மோரிஸ் ஜோன்ஸ் (Morris Jones) அவர்கள் “இந்திய அரசமைப்பு ஒரு பேரம் பேசப்பட்ட கூட்டாட்சி” (Bargaining Federalism) என்றார்.
  • கிரன்வேல் ஆஸ்டின், “கூட்டுறவு கூட்டாட்சி” (Co-Operative federalism by Granville Austin) என்றும் “இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்யும் தனித்துவமான புதுவகை கூட்டாட்சி” (A new kind of Federation to met India’s Peculiar needs) என்றும் கூறினார்.
  • ஐவர் ஜென்னிங்க்ஸ் அவர்கள், “இந்திய அரசமைப்பு ஓர் அதிகாரக் குவிப்புக் கூட்டாட்சி” (Federation with a Strong Tendency, by Ivor Jennings) என்றார்.
  • பால் அப்பில்பே என்பார் “அதிகபட்ச கூட்டாட்சி” (Extremely Federal by Paul Appleby என்றார்.
  • அலெக்சாண்ட்ரோவிச் என்பார் “தனித்துவமான தன்மை உடையது” (Unique in Character by Alexandrowicz என்றார்.

 

கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு

 

Leave a Reply