நீளமான எழுதப்பட்ட ஆவணம்

நீளமான எழுதப்பட்ட ஆவணம்

நீளமான எழுதப்பட்ட ஆவணம் 

நீளமான எழுதப்பட்ட ஆவணம்

                உலகில் உள்ள அரசியல் அமைப்பு சட்டங்களை இரு வகையாக பார்பர். ஒன்று எழுதப்பட்ட அரசியல் சட்டம், மற்றொன்று எழுதப்படாத அரசியல் சட்டம். எழுதப்படாத (Unwritten Constitution) அரசியல் சட்டம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பயன்படுத்தும் முறையாகும். அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் அமைப்பு சட்டம், எழுதப்பட்ட ஆவன (Written Constitution) சட்டமாகும். உலகில் உள்ள எழுதப்பட்ட அரசியல் அமைப்பு சட்டங்களிலே, மிகப்பெரிய அரசியல் அமைப்பு சட்டம்  மற்றும் நீளமான எழுதப்பட்ட ஆவணம் (Lengthiest Written Constitution) இந்தியாவினுடையது ஆகும்.

       இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது மிக நீளமானதும், அதே நேரம் விரிவானதும், ஆழமான சட்டங்களை கொண்ட ஆவணமாகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது துவங்கிய 1949-ல், 395 சட்டங்களும், 22 பகுதிகளையும் (Parts), 8 அட்டவணைகளையும் (Schedules) கொண்டிருந்தது.

       ஆனால் தற்போதைய (2௦19) இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் “முகப்புரை, 470 விதிகள், 12 அட்டவணைகள் மற்றும் 25 பகுதிகள்” உள்ளன. பல்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ப தேவையான திருத்தச்சட்டங்களை (Amendment) மேற்கொண்டு இதுவரை சுமார் 2௦ சட்டங்கள் மற்றும் ஒரு பகுதியை நீக்கியும் உள்ளனர். மேலும் சுமார்  95 சட்டங்கள், நான்கு புதிய அட்டவணைகள், நான்கு புதிய பகுதிகளை சேர்த்துள்ளனர்.

       இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Indian Constitution) உள்ளது போல, உலகில் வேறெந்த நாட்டிலும் இவ்வளவு சட்டங்களோ, அட்டவணைகளோ இல்லை. இந்திய அரசியல் சட்டம் மிகப்பெரியதாக உருவாகக் காரணமானவை, அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆள்வதற்கான அடிப்படை நெறிமுறைகள், அரசமைப்பு சட்டத்தில் ஒன்றிணைக்க விரும்பியது மட்டுமல்லாமல், பல்வேறு நிர்வாகப் பிரச்சனைகளையும் விரிவாகக் கூற விரும்பினர். அரசின் பலவகையான மாநிலங்கள் இடையே தேவையற்ற சச்சரவுகள் ஏற்படுவதை தடுக்கவும், அதிகாரத்தை முறையின்றி பயன்படுத்துவதை தடுக்கவும், தேவையான வழிமுறைகளையும் உருவாக்கி உள்ளார்கள்.

  • இந்தியாவின் புவியியல் பரப்பு மற்றும் அதன் பன்முகத்தன்மை (Geographical Factors)
  • வரலாற்று காரணங்கள் = முக்கியமாக இந்திய அரசுச் சட்டம் 1935 (Government of India Act 1935) ஆனது மிகப்பெரிய சட்டமாகும்
  • மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் இணைந்தே ஒரே அரசியல் அமைப்பு சட்டம் (Single Constitution)
  • 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தத்தின் படி, உள்ளாட்சி அமைப்புகளின் சட்டங்களும் சேர்க்கப்பட்டது (Local Bodies)
  • 97-வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் “கூட்டுறவு அமைப்புகள்” சேர்க்கப்பட்டன (Co-operative Societies)
  • அரசியல் நிர்ணய சபையில் சட்ட வழக்கறிஞர்களின் ஆதிக்கம் (Dominant by Lawyers)

அரசியலமைப்பு சட்டத்தில் அரசின் அடிப்படை தத்துவங்கள் மட்டும் இல்லாமல், தேவையான நிர்வாக விதிகளும் உள்ளன. நவீன ஜனநாயக நாடுகளில், அவர்களின ரசிற்கு தேவையான சட்டதிட்டங்கள் மட்டுமே கொண்டுள்ள நிலையில், இந்திய சட்டம் மற்ற நாடுகளில் இருந்து வேறுபடுகிறது.

நீளமான எழுதப்பட்ட ஆவணம் – குறிப்பு

நீளமான எழுதப்பட்ட ஆவணம்

  • அமெரிக்க அரசியல் சட்டத்தில் 7 விதிகளே உள்ளன. ஆஸ்திரேலிய சட்டத்தில் 128 விதிகளும், சீனாவில் 138 விதிகளும், கனடாவில் 147 விதிகளும் உள்ளன.
  • 2௦19-ம் ஆண்டு வரை, ஜம்மு காஸ்மீர் மாநிலத்திற்கு என்று தனிச் சட்டம் இருந்தது. அரசியலமைப்பு சட்டம் விதி 37௦-வது பிரிவு, காஸ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கி இருந்தது. “ஜம்மு காஸ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2௦19” (Jammu Kashmir State Reorganization Act 2019) படி, இம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

Leave a Reply