பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை 

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை 

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை 

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை 

                இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள பெரும்பான்மையான சட்டங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை ஆகும். மேலும் இந்திய அரசு சட்டம் 1935-ன் (Government of India Act 1935) சட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

       இந்திய அரசியல் அமைப்பின் கட்டமைப்பு பகுதி, இந்திய அரசியல் சட்டம் 1935-ல் இருந்து கொண்டுவரப்பட்டதாகும். அதேநேரம் அரசியலமைப்பின் தத்துவப் பகுதியானது அடிப்படை கடமைகளையும், வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகளையும் உள்ளடக்கியதாகும். அரசியலமைப்பு சட்டத்தின் அரசியல் பகுதி, ஆங்கில பிரிட்டிஷ் பாராளுமன்ற சட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாகும்.

  • கட்டமைப்பு பகுதி (Structural Part) = இந்திய அரசு சட்டம் 1935 (Government of India Act, 1935)
  • தத்துவப் பகுதி (Philosophical Part) = அடிப்படை கடமை (Fundamental Duties) (அமேரிக்கா) + வழிக்காட்டு நெறிமுறைகள் (Directive Principle of State policy) (ஐயர்லாந்து)
  • அரசியல் பகுதி (Political Part) = பிரிட்டிஷ் பாராளுமன்ற விதிகள்

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை

                              இந்திய அரசியல் அமைப்பு சட்டதின் பெரும்பகுதி, 1935 இந்திய அரசு சட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதே ஆகும். கூட்டாட்சி தத்துவம், நீதித்துறை, ஆளுநர், அவசரநிலை விதிகள், பணியாளர் தேர்வாணையம் போன்ற விதிகள் இச்சட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாகும். 1935 இந்திய அரசு சட்டத்தில் இருந்து, தற்போதைய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு 25௦ விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கனடா, ஆஸ்திரேலியா,  இரசியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு தேவைக்கேற்ப அரசியல் சட்டங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை ஆகும்.

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை 

SOURCES (மூலங்கள்)

FEATURES BORROWED (பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை)

Government of India Act of 1935 (இந்திய அரசு சட்டம் 1935) ·         Federal Scheme (கூட்டாட்சி தத்துவம்)

·         Office of Governor (ஆளுநர் பதவி)

·         Judiciary (நீதித்துறை)

·         Public Service Commissions (அரசுப் பணியாளர் தேர்வாணையம்)

·         Emergency Provisions (நெருக்கடி நிலைகள்)

·         Administrative Details (அரசு நிர்வாகம்)

·         Distribution of powers (அதிகாரப் பங்கீடு)

·         President’s or Governor’s power to issue ordinances (அவசர நிலைப் பிரகடனப்படுத்தும் அதிகாரம்)

·         Structure of the Supreme Court (உச்ச நீதிமன்ற அமைப்பு)

British Constitution (பிரிட்டன் அரசியலமைப்பு) ·         Parliamentary Government (பாராளுமன்ற அரசாங்கம்)

·         Rule of Law (சட்டத்தின் ஆட்சி)

·         Legislative Procedure (சட்டம் இயற்றும் வழிமுறைகள்)

·         Single Citizenship (ஒற்றைக் குடியுரிமை)

·         Cabinet System (மத்திய அமைச்சரவை)

·         Prerogative Writs (நீதிப் பேராணைகள்)

·         Parliamentary Privileges (பாராளுமன்ற சிறப்புரிமைகள்)

·         Bicameralism (இரு அவை அரசாங்கம்)

US Constitution (அமெரிக்க அரசியலமைப்பு) ·         Preamble (முகப்புரை)

·         Fundamental Rights (அடிப்படை உரிமைகள்)

·         Independence of Judiciary (சுதந்திரமான நீதித்துறை)

·         Judicial Review (நீதிப் புணராய்வு)

·         Impeachment of the President (குடியரசுத் தலைவரை நீக்கும் முறை)

·         Removal of Supreme Court and High Court Judges (உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவி நீக்க முறை)

·         Post of Vice-President (துணைக் குடியரசுத்தலைவர் பதவி)

Irish Constitution (அயர்லாந்து அரசியலமைப்பு) ·         Directive Principles of State Policy (நெறிமுறைக் கோட்பாடுகள்)

·         Nomination of members to Rajya Sabha (மாநிலங்களவைக்கு உறுப்பினர்கள் நியமனம்)

·         Method of election of President (குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை)

Canadian Constitution (கனடா அரசியலமைப்பு) ·         Federation with a strong centre (மத்தியில் வலுவான கூட்டாச்சி அரசாங்கம்)

·         Vesting of residuary powers in the Centre (மத்திய அரசின் எஞ்சிய அதிகாரங்கள்)

·         Appointment of state governors by the Centre (ஆளுநர் நியமனம்)

·         Advisory Jurisdiction of the Supreme Court (உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை வரம்பதிகாரம்)

Australian Constitution (ஆஸ்திரேலிய அரசியலமைப்பு) ·         Concurrent List (பொதுப்பாட்டியல்)

·         Freedom of trade, Commerce and Inter -Course (சுதந்திரமான வியாபாரம்)

·         Joint sitting of the two Houses of Parliament (இரு அவைகளின் கூட்டு அமர்வு)

Weimar Constitution of Germany (ஜெர்மனியின் வெய்மர் அரசியல் அமைப்பு) ·         Suspension of Fundamental Rights during Emergency (நெருக்கடி நிலையின் பொது அடிப்படை உரிமைகள் நிறுத்திவைப்பு)
USSR Constitution, now Russia (சோவியத் ரஷ்யா அரசியல் அமைப்பு) ·         Fundamental Duties (அடிப்படை கடமைகள்)

·         Ideal of Justice (Social, Economic and Political) in the Preamble (முகப்புரையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி)

French Constitution (பிரெஞ்சு அரசியல் அமைப்பு) ·         Republic (குடியரசு அமைப்பு)

·         Ideals of liberty, equality and fraternity in the Preamble (முகப்புரையின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய குறிகோள்கள்)

South African Constitution (தென் ஆப்ரிக்கா அரசியல் அமைப்பு) ·         Procedure for amendment of the Constitution (அரசியல் அமைப்பை திருத்தும் முறை)

·         Elections of members of Rajya Sabha (மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்)

Japanese Constitution (ஜப்பானிய அரசியல் அமைப்பு) ·         Procedure established by Law (சட்டத்தை அமல்படுத்தல்)
பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை 

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை – குறிப்பு

  • அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணய சபையில் தெரிவிக்கும் பொழுது, “இந்திய சட்டமானது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளின் அரசியலமைப்பு சட்டை துருவித்துருவி ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளது” (ransacking all the known Constitutions of the World) என்றார்.
  • 1935 இந்திய அரசு சட்டத்தில் இருந்து, தற்போதைய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு 25௦ விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன
  • இந்திய சட்டத்தை ‘கடன் மூட்டை’, ‘கடன்வாங்கப்பட்டது’, ‘வெட்டு-ஒட்டு வேலை’, ‘பூச்சு வேலை’ என்று பலர் குறை கூறினார். இக்குற்றச்சாட்டுகளுக்கு அம்பேத்கர், பிற நாடுகளின் அரசியல் அமைப்பின் நடைமுறை அனுபவங்களில் இருந்து பயன் பெறுவதில் எவ்விதமான அவமரியாதையோ, அவமானமோ இல்லை” என்றார்.
பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை 

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை – கடன்வாங்கப்பட்ட சட்டங்கள்

  • இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களை ‘கடன் மூட்டை’, ‘கடன்வாங்கப்பட்டது’, ‘வெட்டு-ஒட்டு வேலை’, ‘பூச்சு வேலை’ என்று பலர் குறை கூறினார். (Borowed Constitution, A Bag of Borrowings, Hotch-Potch Constitution, Patchwork Conmstitution)
  • ஆனால் இந்திய அரசமைப்பினை உருவாக்கிய பெருமக்கள், தமது பழைய சொந்த அனுபவங்கள் மற்றும் இதர நாடுகளின் அனுபவங்கள் ஆகியவற்றில் சிறந்த தீர்வினை வழங்கும் சட்டத்தினை உருவாக்கினர்.

1935 ஆண்டு சட்டத்தின் கார்பன் நகல்

  • சிலர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினை, “1935ம ஆண்டு சட்டத்தின் கார்பன் நகல்” (A Carbon copy of the 1935 Act) என்றும், “1935-ம ஆண்டு சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவம்” (Amended Version of the 1935 Act) என்றும் கூறுவர். ஏனென்றால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பெரும்பகுதி 1935-ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதே ஆகும். 1935 இந்திய அரசு சட்டத்தில் இருந்து, தற்போதைய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு 25௦ விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன
  • என். சீனிவாசன் = இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது “மொழி மற்றும் பொருளமைப்பு ஆகிய இரண்டிலும் 1935-ம் ஆண்டு சட்டத்தை ஒத்திய நகல் போன்றே உள்ளது” என்றார் (both in language and substance a close copy of the Act of 1935)
  • சர் ஐவர் ஜென்னிங்க்ஸ் (Sir Ivor Jennings) = “இந்திய அரசியல் சட்டமானது 1935-ம் ஆண்டு சட்டத்தில் இருந்து நேரடியாக அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளது. பல விதிகள் எழுத்துக்களுடன் நகலெடுக்கப்பட்டுள்ளன” என்றார் (the Constitution derives directly from the Government of India Act of 1935 from which, in fact, many of its provisions are copied almost textually)
  • பி.ஆர். தேஸ்முக் = “1935-ம் ஆண்டு சட்டத்துடன் கூடுதலாக வயது வந்தோர் வாக்குரிமை மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது” என்றார் (the Constitution is essentially the Government of India Act of 1935 with only adult franchise added)
  • எம்.பி.ஷர்மா = “தற்போது இருக்கும் அமைப்பு முறை அப்படியே வெளிப்படையாக அல்லது உட்கிடையாக அரசமைப்புச் சட்டத்தினால் ஏற்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு 1935-ம ஆண்டு இந்திய சட்டத்தின் தாக்கம் புதிய அரசியலமைப்பு சட்டத்தின் மீது உள்ளது
  • அம்பேத்கர் = 1935ம் ஆண்டு இந்திய சட்டத்தின் பெரும் பகுதிகளை எடுத்தும், பிற னைகளின் நல்ல சட்டனலை எடுத்து நமது சட்டதை உருவாக்கியதற்கு நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. பிற நாடுகளில் இருந்து எடுத்ததற்காக வெட்கப்பட வேண்டியது இல்லை. நாம் திருடவும் இல்லை. அரசியல் சட்டத்தின் அடிப்படைகள் யாரும் உரிமை கொண்டாட முடியாது.

Leave a Reply