நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு / PARLIAMENTARY FORM OF GOVERNMENT

              இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை (Indian constitution law) உருவாக்கியவர்கள் முன் இரண்டு வெவ்வேறான அரசாங்க அமைப்பு முறைகள் இருந்தன. ஒன்று இங்கிலாந்தின் நாடாளுமன்ற அரசாங்க முறை. இரண்டாவது அமெரிக்காவின் அதிபர் அரசாங்க முறை.

          இந்த இரண்டு முறைகளின் பலங்களும், பலவீனங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டு, இறுதியில் இந்தியாவிற்கு நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு முறையே ஏற்றது, பொருத்தமானது, இயல்பானது என முடிவு செய்யப்பட்டது.

       பாராளுமன்ற அரசாங்க முறையை, “வெஸ்ட்மின்ஸ்டர் அரசாங்க மாதிரி முறை (Westminster Model Government), பொறுப்புள்ள அரசாங்க முறை (Responsible Government), கேபினட் அரசாங்க முறை (Cabinet Government)” என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த பாராளுமன்ற முறையானது, மத்திய ஆட்சியில் மட்டுமில்லாமல் மாநில ஆட்சிகளிலும் உள்ளது. பாராளுமன்ற முறையின் நன்மைகளவான,

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு

  • பெயரளவிலான தலைவர் மற்றும் உண்மையான நிர்வாக தலைவர் (Presence of nominal and real executives)
  • பெரும்பான்மை கட்சியின் ஆட்சி (Majority party rule)
  • பாராளுமன்றத்திற்கு அனைவரும் கூட்டு பொறுப்பு (Collective responsibility of the executive to the legislature)
  • அமைச்சர்களாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் (Membership of the ministers in the legislature)
  • அமைச்சரவை குழு பொறுப்பு (Collective Responsibility)
  • பிரதமர் அல்லது முதல்வரின் முன்னுரிமை (Leadership of the Prime Minister or the Chief Minister)
  • அவையை கலைத்தல் (Dissolution of the lower House (Lok Sabha or Assembly))

            இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, இங்கிலாந்து பாராளுமன்ற முறையை பின்பற்றினாலும், இந்திய அமைப்பிற்கும் இங்கிலாந்து அமைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்தியக் குடியரசுத் தலைவர் (Nominal Head), இங்கிலாந்து ராணியை போல, அரசின் ஆட்சியாளராக இருப்பார். அனால் உண்மையான நிர்வாக அதிகாரம், பிரதம மந்திரியை (Real Head) தலைவராகக் கொண்ட அமைச்சரவையால் செலுத்தப்படுகிறது.

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு

         இங்கிலாந்தில் இருப்பது ஒற்றை ஆட்சி முறை. ஆனால் இந்தியாவில் உள்ளதோ கூட்டாட்சி முறை (Federal Government). இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, வழக்கிட்டு நிலைநாட்டக்கூடிய அடிப்படை உரிமைகளைக் கொண்டுள்ளது. நிர்வாகத்திற்கு எதிராகவும், சட்டமன்ற அரசிற்கு எதிராகவும் வழக்கிடலாம்.

       இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொதுவாகக் குடியரசுத் தலைவர் (President) அமைப்பு அரசின் சிறப்பு இயல்புகள் உள்ளன. அவை நாடாளுமன்றதின் இரு அவைகளுக்கும் குடியரசுத் தலைவர் செய்தியை அனுப்புதல், பண மசோதா (Money Bill) அல்லாத மசோதாக்களை நாடாளுமன்றத்தின் மறு கவனத்திற்கு திருப்பி அனுப்புதல் போன்றவை அடங்கும்.

 

      

      

Leave a Reply