திரிகடுகம்
இல்லர்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க் குள. – நல்லாதனார் |
சொற்பொருள்:
- பால்பற்றி – ஒருபக்கச் சார்பு
- சாயினும் – அழியினும்
- தூஉயம் – தூய்மை உடையோர்
- ஈயும் – அளிக்கும்
- நெறி – வழி
- மாந்தர் – மக்கள்
- வனப்பு – அழகு
- தூறு – புதர்
- வித்து – விதை
ஆசிரியர் குறிப்பு:
- திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
- இவர் திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரை சேர்ந்தவர்.
- இவரைச், “செறுஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நூல் குறிப்பு:
- திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நூறு வெண்பாக்களை கொண்டது.
- “சுக்கு, மிளகு, திப்பிலி” ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய மருந்துக்கு “திரிகடுகம்” எனப் பெயர்.
- அதுபோல், திரிகடுகம் என்னும் இந்நூல், மூன்று கருத்துக்களை உள்ளடக்கி மனிதனின் மனமயக்கத்தை நீக்குகிறது.