இக்காலக் கவிதைகள்
உரைநடைக் காலம்:
- இருபதாம் நூற்றாண்டை “உரைநடைக் காலம்” என்பர்.
- எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது.
பாரதியார்:
- பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருந்தது.
- மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும்.
பாரதிதாசன்:
- தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.
- “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
- இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
கவிமணி:
- கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில் ஆழ்த்துவன.
- கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்வனும் நீதானோ, எனத் தாலாட்டு பாடியவர்.
- “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
- மாதவம் செய்திட வேண்டுமம்மா”
- “சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
- சபைகளிலே தமிழ் எழுந்து முழங்கவேண்டும்”
நாமக்கல் கவிஞர்:
- இவரின் கவிதைகளில் காந்தியச் சிந்தனை அதிகம்.
- “தமிழன் என்றோர் இனமுண்டு
- தனியே அவற்கொரு குணமுண்டு”
- “பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
- பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்”
- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
- கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
முடியரசன்:
- இவரின் கவிதையில் பகுத்தறிவு நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் தமிழுணர்வும் அதிகம் காணலாம்.
ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி? |
சுரதா:
- சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம்.
- அவரி “உவமைக் கவிஞர்” என்று அழைப்பர்.
- மறைமலையடிகளைப் பற்றி சுரதா பாராட்டுதல்,
முல்லைக்கோர் காடுபோலும் முத்துக்கோர் கடலேபோலும் சொல்லுக்கோர் கீரன்போலும் தூதுக்கோர் தென்றல்போலும் கல்விக்கோர் கம்பன்போலும் கவிதைக்கோர் பரணர்போலும் வில்லுக்கோர் ஓரிபோலும் விளங்கினார், வென்றார், நின்றார். |
வாணிதாசன்:
- பாரதிதாசனைத் தொடர்ந்து இயக்கியின் அழகை படம்பிடித்துக் காட்டுவதில் வாணிதாசன் கவிதைகள் சிறந்து விளங்கின.
மணிக்கொடி:
- ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினர்.
எழுத்து:
- எஸ்.வைதீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு.செல்லப்பா முதலியோர் எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைப் படைத்தனர்.
வல்லிக்கண்ணன்:
- புதுகவிதை வரலாற்றில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன. |
என்பது இவரின் புதுக்கவிதையின் எளிய வடிவை காட்டும்.