சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

சீக்கிய மதத்தின் 10 குருக்கள்
சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

  • சீக்கிய மதத்தின் முதல் குரு யார் = குருநானக்.
  • சீக்கிய மதத்தின் கடைசி குரு யார் = குரு கோவிந்த்சிங்.
  • கர்தார்பூர் (பாகிஸ்தானில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குருநானக்.
  • கர்தார்பூர் (இந்தியாவில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குரு அர்ஜூன் தேவ்.
  • “அமிர்தசரஸ்” என்னும் புதிய நகரத்தை உருவாக்கியவர் = குரு ராம் தாஸ்.
  • அமிர்தசரஸில் புகழ்பெற்ற பொற்கோயிலைக் கட்டியவர் = குரு அர்ஜூன் தேவ்.

சீக்கிய குருக்களின் பட்டியல்

  1. குரு நானக் தேவ்
  2. குரு அங்கத் தேவ்
  3. குரு அமர்தாஸ்
  4. குரு ராம் தாஸ்
  5. குரு அர்ஜன் தேவ்
  6. குரு ஹர் கோவிந்த்
  7. குரு ஹர் ராய்
  8. குரு ஹர் கிருஷன்
  9. குரு தேக் பகதூர்
  10. குரு கோவிந்த் சிங்
முதல் சீக்கிய குரு
முதல் சீக்கிய குரு

முதல் சீக்கிய குரு

  • முதல் சீக்கிய குரு = குருநானக்.
  • இவரின் காலம் = கி.பி. 1469-1539
  • சீக்கிய மதத்தை நிறுவியவர் (சிக்கந்தர் லோடி காலத்தில் இம்மதத்தை நிறுவினார்)
  • நிர்குண துறவி பிரிவைச் சேர்ந்தவர்
  • லாகூரில் உள்ள தல்வாண்டியில் பிறந்தார்
  • இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
  • சிலை வழிபாட்டை கண்டித்தார்.
  • இவரின் சீடர் = மர்தானா
  • “கடவுள் ஒருவரின் நற்பண்புகளை மட்டுமே அறிவார், அவருடைய ஜாதியைக் கேட்க மாட்டார், எதிர்காலத்தில் சாதி இருக்காது” என்று கூறியவர் = குருநானக்.
  • “ஆண்களைப் பெண்கள் பெற்றெடுக்கும் போது அவர்கள் எவ்வாறு தாழ்ந்தவர்களாக இருக்க முடியும்? பெண்களும் ஆண்களும் கடவுளின் கிருபையில் பங்கு கொள்கிறார்கள் மற்றும் அவருக்கு அவர்கள் செய்யும் செயல்களுக்கு சமமான பொறுப்பு” ஏறனு கூறியவர் = குருநானக்.
  • ஆண் – பெண் சமம் பற்றி கூறினார்.
  • இவர் ஞானோதயம் அடைந்த இடம் = சுல்தான்பூர்.
  • சமபந்தி உணவு கூடமான “லாங்கர்” முறையை அறிமுகம் செய்தார்.
  • கர்தார்பூர் (பாகிஸ்தானில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குருநானக்.
  • கர்தார்பூர் (இந்தியாவில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குரு அர்ஜூன் தேவ்.
  • முதல் குருத்வாராவை (தர்மசாலா) உருவாக்கிய சீக்கிய குரு = குருநானக்.
  • சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

குரு அங்கத்

  • இரண்டாவது சீக்கிய குரு.
  • இவரின் காலம் = கி.பி. 1504-1552
  • குருநானக் தேவ் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தார். இது “ஜனம் சகி” என்று அழைக்கப்படுகிறது.
  • குருமுகி எழுத்துமுறையை அறிமுகம் செய்தவர்.
  • கண்ணோசி போரில் தோற்ற பிறகு, ஹுமாயூன் இவரை தேடி வந்து சந்தித்துள்ளார்.

குரு அமர் தாஸ்

  • இவரின் காலம் = கி.பி. 1479-1574
  • அணைத்து சாதியினரும் சேர்ந்து உண்ணும் முறையை துவக்கி வைத்தார்.
  • “சீக்கிய குரு” என்ற பட்டத்தை பெற்றவர்.
  • இவரின் திட்டத்திற்கு முகலாய அரசர் அக்பர் நிதியுதவி அளித்தார்.
  • சதி உடன்கட்டை ஏறுதலை தடை செய்தார்.
  • “கோயிந்த்வால்” நகரை உருவாக்கியவர் = குரு அமர் தாஸ்.
  • சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

குரு ராம் தாஸ்

  • இவரின் காலம் = கி.பி. 1534-1581
  • குரு அமர்தாஸின் மருமகன்
  • அனைத்து அடுத்தடுத்த குருக்களும் ராம் தாஸின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.
  • “ஆனந்த கராஜ்” எனப்படும் சீக்கிய திருமண விழாவிற்கு பாடல்களை இயற்றியவர் இவர்.
  • “ராம்தாஸ்பூர்” நகரி உருவாக்கினார். இதுவே அமிர்தசரஸ் நகராகும்.
  • “அமிர்தசரஸ்” என்னும் புதிய நகரத்தை உருவாக்கியவர் = குரு ராம் தாஸ்.
  • இவருக்கு 500 பிகா நிலத்தை தானமாக வழங்கினார் அக்பர். இவ்விடத்தில் அமிர்தசரஸ் நகரம் உருவாக்கப்பட்டது.
  • சீக்கிய மதத்தின் 10 குருக்கள்
குரு அர்ஜூன் தேவ்
குரு அர்ஜூன் தேவ்

குரு அர்ஜூன் தேவ்

  • இவரின் காலம் = கி.பி. 1563-1606
  • குரு ராம் தாஸின் மகன்
  • முகலாய இளவரசர் குஸ்ராவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக முகலாய மன்னர் (ஜஹாங்கிர்) காவலில் வைக்கப்பட்ட சித்திரவதைக்குப் பிறகு இறந்தார்.
  • முகலாய அரசனால் கொல்லப்பட்ட முதல் சீக்கிய குரு = குரு அர்ஜூன் தேவ்.
  • அமிர்தசரஸில் புகழ்பெற்ற பொற்கோயிலைக் கட்டியவர் = குரு அர்ஜூன் தேவ்.
  • சமய சீர்திருத்தவாதியான “கபீரின்” கருத்துக்களை தேடித்தேடி தொகுத்தார்.
  • சீக்கிய போதனைகளின் சுருக்கத்தைத் தயாரித்தவர் = குரு அர்ஜூன் தேவ்.
  • கி.பி 1604 இல் சீக்கியர்களின் புனித நூலான “குரு கிரந்த சாகிப்பை” தொகுத்தவர்
  • இந்நூலினை “ஆதிகிரந்தம்” என்றும் கூறுவர்.
  • “ஆதிகிரந்தம்” நூலை தொகுத்தவர் = குரு அர்ஜூன் தேவ்
  • இதில் குரு அர்ஜன் தேவின் 2312 பாடல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • கர்தார்பூர் (இந்தியாவில் உள்ள) நகரை உருவாக்கியவர் = குரு அர்ஜூன் தேவ்.

குரு ஹர்கோவிந்த்

  • இவரின் காலம் = கி.பி. 1595-1644
  • குரு அர்ஜன் தேவ்வின் மகன்
  • இவர் கூறிய இரண்டு = ஒன்று மிரி (மதச்சார்பற்ற சக்தி) மற்றும் மற்றொன்று பிரி (ஆன்மீக சக்தி)
  • கிபி 1608 இல் அகல் தக்த் கட்டினார்.
  • “கிரத்பூர்” நகரை உருவாக்கிய சீக்கிய குரு = குரு ஹர்கோவிந்த்.
  • சீக்கிய மதத்தின் 10 குருக்கள்

குரு ஹர் ராய்

  • இவரின் காலம் = கி.பி. 1630-1661
  • குரு ஹர்கோவிந்தின் மகன்
  • ஷாஜகானின் மகன்களுக்கு இடையே நடந்த வாரிசுப் போர்களில் தாராவின் கூற்றை ஆதரித்தார்.

குரு ஹர்கிஷன்

  • இவரின் காலம் = கி.பி. 1656-1664
  • குரு ஹர் ராயின் மகன்.
  • மிக இளம் வயதிலேயே சீக்கிய குருவாக உயர்ந்தவர் = குரு ஹர் கிஷன் (5 வயதில்).
  • புது டெல்லியில் உள்ள குருத்வாரா பங்களா சாஹிப் இவரது நினைவாக கட்டப்பட்டது.
  • சின்னம்மை நோயினால் இறந்தார்.

குரு தேக் பகதூர்

  • இவரின் காலம் = கி.பி. 1621-1675
  • குரு ஹர்கோவிந்தின் மகன்
  • காஷ்மீரி இந்துக்களின் மத சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய சீக்கிய குரு = குரு தேக் பகதூர்.
  • முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் படுகொலை செய்யப்பட்டார்.
  • கொலை செய்யப்பட இரண்டாவது சீக்கிய குரு = குரு தேக் பகதூர்.
  • “ஆனந்த்பூர் சாஹிப்” நகரை உருவாக்கிய சீக்கிய குரு = குரு தேக் பகதூர்.
  • புது டெல்லியில் உள்ள குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிபில் இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
  • சீக்கிய மதத்தின் 10 குருக்கள்
கடைசி சீக்கிய குரு
கடைசி சீக்கிய குரு

கடைசி சீக்கிய குரு

  • கடைசி சீக்கிய குரு = குரு கோவிந்த் சிங்.
  • இவரின் காலம் = கி.பி. 1666-1700
  • முகலாய அரசரின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
  • குரு தேக் பகதூரின் மகன் சீக்கியர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து “கல்சா” என்னும் அமைப்பை உருவாக்கினார்.
  • “கல்சா” என்னும் முறையை நிறுவிய சீக்கிய குரு யார் = குரு கோவிந்த் சிங்.
  • 5K என்ற அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு = குரு கோவிந்த் சிங்.
  • 5K = (Kesh, Kangha, Kara, Kachera, Kirpan)
  • சீக்கிய மதத்தின் நித்தியமான மற்றும் இறுதியான உயிருள்ள குருவாக “குரு கிரந்த் சாஹிப்” நூலை அறிவித்த சீக்கிய குரு = குரு கோவிந்த் சிங்.
        1. கேஷ் (ஆன்மீகத்திற்காக வெட்டப்படாத முடி)
        2. கங்கா (சுத்தத்திற்காக மரத்தாலான சீப்பு)
        3. காரா (நீதிக்கான நெறிமுறையைக் குறிக்கும் இரும்பு வளையல்)
        4. கிர்பான் (நீதிக்கான வாள்)
        5. கச்சேரா (அடக்கத்திற்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்ற பருத்தி உள்ளாடை)

11-வது சீக்கிய குரு – குரு கிரந்த் சாஹிப்

  • பத்தாவது குருவிற்குப் பிறகு மனித வடிவிலான வாரிசு யாரும் இல்லாத நிலையில், சீக்கிய மதத்தின் புனித நூலான ‘குரு கிரந்த் சாஹிப்‘ நித்தியமான 11-வது குருவாகப் போற்றப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *