ஐரோப்பியர்கள் வருகை
இந்தியாவிற்கு ஐரோப்பியர்களின் (போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள்) வருகை, அவர்களின் வணிக மையங்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் TNPSC மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான முக்கியத் தகவல்கள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

ஐரோப்பியர்கள் வருகை
- இந்தியாவிற்கு கடல் வழியாக முதன் முதலில் வந்த ஐரோப்பியர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
- இந்தியாவிற்கு கடல் வழியாக முதன் முதலில் வந்த ஐரோப்பியர் = வாஸ்கோடகாமா (போர்ச்சுகீசியர்)
- இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பியர்கள் வரிசைமுறை = போர்ச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்கள் டேனிஷ்காரர்கள் பிரெஞ்ச்க்காரர்கள்
- இந்தியாவை விட்டு கடைசியாக வெளியேறிய ஐரோப்பியர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
- இந்தியாவிற்கு முதலில் வந்து (கி.பி. 1498), கடைசியாக (கி.பி. 1948) வெளியேறிய ஐரோப்பியர்கள் = போர்ச்சுகீசியர்கள்
- ஐரோப்பியர்கள் வருகை
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
| கம்பெனி | உருவான ஆண்டு | தலைமையகம் |
| போர்ச்சுகீசிய கிழக்கிந்திய கம்பெனி | கி.பி. 1498 | கொச்சின், கோவா |
| ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி | கி.பி. 1600 | சூரத், பெங்கால், மதராஸ், பம்பாய் |
| டச்சு கிழக்கிந்திய கம்பெனி | கி.பி. 1602 | புலிகாட், ஹூக்ளி |
| டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி | கி.பி. 1616 | சீராம்பூர் |
| பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி | கி.பி. 1664 | சூரத், புதுச்சேரி |
| ஸ்வீடிஷ் கிழக்கிந்திய கம்பெனி | கி.பி. 1731 | கோதேன்பெர்க் (ஸ்வீடன்) |

போர்ச்சுகீசியர்கள்
- இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த முதல் ஐரோப்பியர் = வாஸ்கோடகாமா.
- தென்ஆப்ரிக்காவின் “நன்னம்பிக்கை முனையை” வந்தடைந்த வாஸ்கோடகாமா, “அப்துல் இபின் மஜீத்” என்னும் குஜராத்திய இந்திய கடல் மாலுமி உதவியுடன் இந்தியாவின் “காலிகட்” (கள்ளிக்கோட்டை / கோழிக்கோடு) பகுதிக்கு கி.பி. 1498, மே 20 ஆம் தேதி வந்தடைந்தார்.
- “சாமோரின்” என்னும் அப்பகுதி மன்னர் வாஸ்கோடகாமாவை வரவேற்றார்.
- கி.பி. 1499ல் வாஸ்கோடகாமா போர்ச்சுகல் நாட்டிற்கு திரும்பி சென்றார்.
- கி.பி. 1500ல் “பெட்ரோ அல்வாராஸ் காப்ரல்” என்னும் போர்ச்சுகல் மாலுமி இந்தியா வந்தார்.
- இந்தியாவிற்கு வருகை தந்த இரண்டாவது போர்ச்சுகீசியர் = பெட்ரோ அல்வாராஸ் காப்ரல்.
- கி.பி. 1502ல் இரண்டாவது முறையாக வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்தார்.
- கி.பி. 1524ல் மூன்றாவது முறையாக வாஸ்கோடகாமா இந்தியா வந்தார். மோசமான உடல்நிலை காரணமாக கொச்சியில் இறந்தார்.
- இந்தியாவில் முதல் ஐரோப்பிய குடியேற்றம் போர்த்துகீசியர்களால் கி.பி 1503 இல் கொச்சியில் நிறுவப்பட்டது.
- இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் முதல் வணிகத் தளம் நிறுவப்பட்ட இடம் = கொச்சின்.
- வாஸ்கோடகாமாவின் இரண்டாவது பயணத்தின் பயனாக கொச்சின், கண்ணனூர் மற்றும் காலிகட் ஆகிய பகுதிகளில் போர்ச்சுகீசியர்கள் தங்களது வணிகத் தளங்களை துவக்கினர்.
- ஐரோப்பியர்கள் வருகை
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா (1505 – 1509)
- இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் நபர் = பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா.
- இந்திய பெருங்கடலில் அரேபிய ஆதிக்கத்தை உடைக்க எண்ணினார்.
- “நீலக்கடல் கொள்கையினை” பின்பற்றியர் = அல்மெய்டா.
- ஐரோப்பியர்கள் வருகை
அல்போன்சோ டி அல்புகர்க் (1509 – 1519)
- இந்தியாவின் இரண்டாவது போர்ச்சுகீசிய ஆளுநர் = அல்போன்சோ டி அல்புகர்க்.
- இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் போர்ச்சுகீசிய தளத்தை பலமாக நிறுவினார்.
- விஜயநகர பேரரசுடன் நல்ல நட்புறவை ஏற்படுத்திக் கொண்டார்.
- இந்தியப் பெண்களை திருமணம் செய்துக் கொள்ள போர்ச்சுகீசிய வீரர்களை ஊக்குவித்தார் (கலப்பு மணம்)
- இந்தியாவில் போர்ச்சுகீசிய செல்வாக்கை உண்மையில் உயர்த்தியவர்.
- கி.பி. 1510ல் பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து “கோவாவை” கைப்பற்றினார்.
- “சதி” முறையை தடை செய்த முதல் ஐரோப்பியர் = அல்போன்சோ டி அல்புகர்க்.
- இந்தியாவில் “சதி” முறையை தடை செய்த போர்ச்சுகீசிய ஆளுநர் = அல்போன்சோ டி அல்புகர்க்.
- கி.பி 1535 இல், “நினோ டா குன்ஹா” என்ற போர்த்துகீசிய கவர்னர் குஜராத்தின் பகதூர் ஷாவிடமிருந்து டையூ மற்றும் பஸ்சைனைக் கைப்பற்றினார்.
- ஐரோப்பியர்கள் வருகை
- இந்தியாவில் “புகையிலை”யை அறிமுகம் செய்தவர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
- இந்தியாவில் “பென்சிலை” அறிமுகம் செய்தவர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
- இந்தியாவில் “அச்சு இயந்திரத்தை” அறிமுகம் செய்தவர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
- இந்தியாவில் “தக்காளியை” அறிமுகம் செய்தவர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
- இந்தியாவில் “மிளகாயை” அறிமுகம் செய்தவர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
- இந்தியாவில் “முந்திரி பருப்பை” அறிமுகம் செய்தவர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
- இந்தியாவில் முதல் அச்சு இயந்திரம் 1556 ஆம் ஆண்டு கோவாவில் போர்த்துகீசியர்களால் நிறுவப்பட்டது.
- ஒரு ஐரோப்பிய எழுத்தாளரால் இந்திய மருத்துவ தாவரங்கள் பற்றிய முதல் அறிவியல் படைப்பும் கி.பி 1563 இல் கோவாவில் அச்சிடப்பட்டது.
- பிரான்சிஸ்கோ சேவியர் என்ற புகழ்பெற்ற துறவி மார்ட்டின் அல்போன்சோ டி சோசாவின் காலத்தில் இந்தியாவிலும் ஆசியாவிலும் கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்தார். அவர் கோரமண்டல் கடற்கரையில் (பரவர்கள்) மற்றும் மலபார் கடற்கரையில் (முக்குவாஸ்) மீனவர் பழங்குடியினரை கிறிஸ்தவர்களாக மாற்றினார்.
- போர்ச்சுகீசியர்களின் இந்திய தலைநகராக இருந்த பகுதி = கொச்சின் (பின்னர் கோவா).
- “நினோ டா குன்ஹா” என்ற ஆளுநர், போர்ச்சுகீசியர்களின் தலைநகராக “கோவா” பகுதியை அறிவித்தார்.
- 1632 ஆம் ஆண்டில், முகலாய பேரரசர் ஷாஜஹான் ஹூக்ளியில் உள்ள போர்த்துகீசிய குடியேற்றத்தை முற்றிலுமாக அழித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்த்துகீசிய மக்களைக் கைதிகளாகக் கொண்டு சென்றார்.
- கி.பி 1661 இல், இரண்டாம் சார்லஸ் கேத்தரினை மணந்தபோது, போர்ச்சுகல் அரசர், பம்பாய் பகுதியை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுக்கு வரதட்சணையாகக் கொடுத்தார்.
- ஐரோப்பியர்கள் வருகை

ஆங்கிலேயர்கள்
- ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் துவங்குவதற்கு முன்னரே, “ஜான் மில்டன்ஹால்” என்ற ஆங்கிலேய வணிகர், தரைவழிப் பயணமாக இந்தியா வந்து இங்கு வணிகம் செய்துள்ளார்.
- ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் உருவாக்கப்பட்ட தினம் = டிசம்பர் 31, 1600.
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவான பொழுது இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னன் = அக்பர்.
- கி.பி. 1608ல் ஆங்கிலேய அரசர் முதலாம் ஜேம்ஸ் வழங்கிய கடிதத்தை, கொண்டுவந்து முகலாய அரசர் ஜகாங்கீரிடம் வழங்கி வணிகம் செய்வதற்கு ஒப்புதல் கோரினார் ஆங்கிலேய கேப்டன் “வில்லியம் ஹாக்கின்ஸ்”.
- ஆனால் போர்த்துகீசியர்களின் தலையீடு காரணமாக ஒப்புதல் கிடைக்கவில்லை.
- 1611ல் முகலாய அரசரிடம் இருந்து வணிகம் செய்வதற்கான ஒப்புதலை பெற்ற ஆங்கிலேயர் = கேப்டன் மிடில்டன்.
- 1615ல் “சர் தாமஸ் ரோ” தலைமையிலான ஆங்கிலேய குழு, சுங்க வரி இன்றி இந்தியாவில் வணிகம் செய்வதற்கான ஒப்புதலை, முகலாய அரசர் ஜகாங்கீரிடம் இருந்து பெற்றது.
- அவுரங்கசீப்பால் நாடு கடத்தப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் = சர் ஜான் சைல்ட்.
- ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் முதல் வணிகத்தளம் நிறுவப்பட்ட இடம் = சூரத்.
- ஆங்கிலேயர்களின் முதல் தற்காலிக வணிகத்தளம் நிறுவப்பட்ட இடம் = மசூலிப்பட்டினம்.
- ஆங்கிலேயர்களின் முதல் நிரந்தர வணிகத்தளம் நிறுவப்பட்ட இடம் = சூரத்.
- மேற்கு கடற்கரையில் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைமையகம் = பம்பாய்.
- மதராஸ் பகுதியில் ஆங்கிலேயர்கள் நிறுவிய தலைமையகம் = செயின்ட் ஜார்ஜ் கோட்டை
- பம்பாய் பகுதியில் ஆங்கிலேயர்கள் நிறுவிய தலைமையகம் = செயின்ட் டேவிட் கோட்டை
- வங்காளத்தில் ஆங்கிலேயர்கள் நிறுவிய தலைமையகம் = வில்லியம் கோட்டை.
- கி.பி 1661 இல், இரண்டாம் சார்லஸ் கேத்தரினை மணந்தபோது, போர்ச்சுகல் அரசர், பம்பாய் பகுதியை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுக்கு வரதட்சணையாகக் கொடுத்தார்.
- பம்பாய் பகுதியை “ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு” வாடகைக்கு கொடுத்த இங்கிலாந்து மன்னர் = இரண்டாம் சார்லஸ்.
- நிறுவனம் 1668 ஆம் ஆண்டு பம்பாயை ஆண்டுக்கு பத்து பவுண்டுகள் வாடகைக்கு இரண்டாம் சார்லஸிடமிருந்து குத்தகைக்கு வாங்கியது.
- ஐரோப்பியர்கள் வருகை
நவீன இந்தியாவின் முதல் நாணயம்
- நவீன இந்தியாவின் முதல் நாணயத்தை வெளியிட்டவர்கள் = ஆங்கிலேயர்கள்.
- நவீன இந்தியாவின் முதல் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு =
- நவீன இந்தியாவின் முதல் நாணயத்தை வெளியிட்டவர் = இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட்.
- இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட், தனது உருவம் பொறிக்கப்பட்ட நவீன இந்தியாவின் முதல் நாணயத்தை கி.பி. 1862இல் வெளியிட்டார்.
- ஐரோப்பியர்கள் வருகை
ஆங்கிலேயர்கள் வளர்ச்சியில் முக்கிய ஆண்டுகள்
| 1600 | ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டது |
| 1608 | ஜகாங்கீர் அவைக்கு வில்லியம் ஹாக்கின்ஸ் வருகை |
| 1612 | ஆங்கிலேயரின் முதல் நிரந்தர வணிகத்தளம் சூரத்தில் துவக்கம் |
| 1616 | ü ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது இரண்டாவது வணிகத்தளத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினர்.
ü தென் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதல் வணிகத் தளம் = மசூலிப்பட்டினம். |
| 1633 | கிழக்கு இந்தியப் பகுதியில் ஆங்கிலேயர்களின் முதல் வணிகத் தளம் ஓடிஸா மாநிலத்தின் பாலோசர் பகுதியில் நிறுவப்பட்டது. |
| 1662 | போர்ச்சுகீசிய இளவரசியை திருமணம் செய்த ஆங்கிலேய அரசர் இரண்டாம் சார்லஸ்க்கு வரதட்சணையாக “பம்பாய்” நகரம் வழங்கப்பட்டது. |
| 1687 | ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகம் சூரத்தில் இருந்து பம்பாய்க்கு மாற்றம். |

டச்சுக்காரர்கள்
- டச்சுக்காரர்கள் = ஹாலந்து, நெதர்லாந்து.
- டச்சு கிழக்கிந்திய கம்பெனி (VOC) நிறுவப்பட்ட ஆண்டு = 1602.
- பங்குகளை வெளியிட்ட முதல் பன்னாட்டு நிறுவனம் இதுவாகும்.
- இந்தியாவில் முதல் டச்சு குடியேற்றம் = மசூலிப்பட்டினம் (1605).
- “புலிகாட்” (கெல்ட்ரியா கோட்டை) பகுதியில் தங்களின் வணிகத் தளத்தை நிறுவினர்.
- மற்ற ஐரோப்பியர்களை போல் “வாசனை திரவியங்களை” வணிகம் செய்யாமல், டச்சுக்காரர்கள் “இந்திய பருத்தி” வணிகத்தையே அதிகளவு மேற்கொண்டனர்.
- இந்தியாவிற்கு வந்த முதல் டச்சுக் குடிமகன் = கார்னெலிஸ் டி ஹவுட்மேன் (1596).
- பிற டச்சு குடியிருப்புகள் = சூரத் (1616) மற்றும் நாகப்பட்டினம்.
- டச்சு கிழக்கிந்திய கம்பெனி மசூலிப்பட்டினத்தில் ஒரு தொழிற்சாலையையும் (வர்த்தகம்) மற்றும் புலிகாட்டில் ஒரு கோட்டையையும் (கெல்ட்ரியா கோட்டை) நிறுவியது.
- டச்சுக்காரர்களின் தலைமையகம் = புலிகாட் (1689 வரை)
- 1690ல் டச்சுக்காரர்களின் புதிய தலைநகரம் = நாகப்பட்டினம்.
- டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இடையே நடைபெற்ற போ = பெத்ரா போர்.
- ஐரோப்பியர்கள் வருகை
டேனியர்கள்
- டேனியர்கள் = டென்மார்க்.
- டேனியக் கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்ட ஆண்டு = 1616.
- இந்தியாவில் டேனியர்களின் முதல் வர்த்தக நிலையம் = தரங்கம்பாடி (1620)
- “குட்டி டென்மார்க்” என்று அழைக்கப்படும் பகுதி = தரங்கம்பாடி.
- அவர்கள் 1676 இல் வங்காளத்தில் செரம்பூர் என்ற இடத்தில் குடியேற்றங்களை நிறுவினர்.
- இந்தியாவில் டேனியர்களின் தலைநகரம் = செரம்பூர்
- ஐரோப்பியர்கள் வருகை

பிரெஞ்சுக்காரர்கள்
- பிரெஞ்ச் கிழக்கிந்திய நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு = 1664.
- இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டவர் = பிரெஞ்சுக்காரர்கள்.
- இந்தியாவில் பிரெஞ்ச் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் = சூரத்.
- இந்தியாவில் முதல் பிரெஞ்சு தொழிற்சாலையை சூரத்தில் நிறுவியர் = ஃபிராங்கோயிஸ் கரோன்.
- 1669ல் “மசூலிப்பட்டினத்தில்” பிரெஞ்ச் தொழிற்சாலையை நிறுவியவர் = மர்காரா.
- “வல்லிகொண்டபுரம்” என்ற பகுதியை ஷேர்கான் லோடியிடம் வாங்கி, அப்பகுதியில் புதிய பிரெஞ்ச் தொழிற்சாலையை நிறுவினார் = பிரான்கோயிஸ் மார்டின்.
- “வல்லிகொண்டபுரம்” பகுதியே பின்நாளில் “பாண்டிச்சேரி” என்ற மாற்றம் செய்யப்பட்டது.
- பாண்டிச்சேரி நகரத்தை உருவாக்கியவர் = பிரான்கோயிஸ் மார்டின்.
- பாண்டிச்சேரியின் முதல் பிரெஞ்ச் ஆளுநர் = பிரான்கோயிஸ் மார்டின்.
- பிரெஞ்ச் ஆளுநர்களில் சிறந்தவர் = டியுப்ளே.
- இந்தியாவின் அரசியல் உள் விவகாரங்களில் முதன் முதலில் தலையிட்ட ஐரோப்பியர் = டியுப்ளே.
- இந்தியாவில் முதன் முதலில் அரசியல் அதிகாரம் பெற்ற ஐரோப்பியர்கள் = பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் சில காலம் மட்டுமே நீடித்தது.
- ஐரோப்பியர்கள் வருகை
இந்தியாவின் முக்கிய நகரங்களை உருவாக்கியவர்கள்
- “கல்கத்தா” நகரை உருவாக்கிய ஆங்கிலேயர் = ஜாப் சார்னாக்
- “மெட்ராஸ்” நகரை உருவாக்கிய ஆங்கிலேயர் = பிரான்சிஸ் டே.
- “புது தில்லி” நகரை உருவாக்கிய ஆங்கிலேயர் = எட்வின் லூடியன்ஸ்.
- “பம்பாய்” நகரை உருவாக்கிய ஆங்கிலேயர் = ஜெரால்ட் அங்கியார்.
- ஐரோப்பியர்கள் வருகை