திருத்தச் சட்டம் – 1781
திருத்தச் சட்டம் – 1781 ஆம் ஆண்டு சட்டம் உருவாக்க வேண்டிய காரணம், திருத்தச் சட்டம் – 1781 ஆல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை தேர்வு நோக்கில் இங்கு பதியப்பட்டுள்ளது.
திருத்தச் சட்டம் – 1781 சட்டத்தின் தேவை:
- திருத்தச் சட்டம் – 1781 சட்டம் கொண்டு வந்ததின் முக்கிய காரணம், 1773 ஒழுங்குமுறை சட்டத்தின் குறைபாடுகளை நீக்க ஏதுவாக பிரிட்டிஷ் பாராளுமன்றம், இச்சட்டத்தை கொண்டுவந்தது.
- “டவுச்சட் குழுவின்” (Touchet Committee) பரிந்துரையின் அடிப்படையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
- இச்சட்டத்தை “அறிவிப்பு சட்டம் 1781” (Declaratory Act 1781) அல்லது “தீர்வு சட்டம் 1781” (Act of Settlement 1781) எனவும் அழைத்தனர்
- 1773 ஒழுங்குமுறை சட்டத்தால், கவர்னர் ஜெனரலுக்கும், ஆலோசனை குழுவினருக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. அதிகார மோதல் வெடித்தது.
- மாநிலங்களின் மீது கவர்னர் ஜெனரலால் முழுமையான அதிகாரம் செலுத்தப்பட முடியவில்லை
- நீதிமன்ற அதிகாரம் கவர்னர் அதிகாரத்தில் குறுக்கிட்டது
திருத்தச் சட்டத்தின் சிறப்பியல்புகள்:
- இச்சட்டத்தின் முக்கிய இயல்பே, “நீதிமன்றத்திற்கும், கவர்னரின் கவுன்சிலுக்கும்” இடையேயான அதிகார எல்லையை பிரித்து தெளிவுப்படுத்தியது
- நீதிமன்றத்தை காட்டிலும் கவர்னரின் அதிகார கவுன்சில் குழுவிற்கு அதிக அதிகாரத்தை வழங்கியது
- கவர்னர் ஜெனரலும் அவரது ஆலோசனை குழு உறுப்பினர்களும் வங்காள தலைமை நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல
- கம்பெனியின் வரிவசூல் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை எனப்பட்டது
- வரிவசூல் அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை
- ஆங்கிலேயர்கள் சம்பந்தமான வழக்குகள் மட்டுமே இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்
- கல்கத்தாவில் வசிக்கும் மக்கள் யாவரும் தலைமை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டவர் ஆவார். உச்ச நீதிமன்றத்தின் அதிக்கரம் கல்கத்தா உள்ளே மட்டும் செல்லுபடியாகும்.
- ஆனால் இந்துக்களும், முகலாயர்களும் வாரிசுரிமை போன்ற நிகழ்வுகளில் அவரவர் மதச் சட்டத்தின் படியே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது
- இந்து மற்றும் முஸ்லிம் சட்டங்கள் பாதுகாக்கப்பட்டன
- நீதிமன்ற மேல்முறையீட்டிற்கு, கவர்னர் ஜெனரலின் ஆலோசனை குழுவினை நாட வேண்டும்
- உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர், கவர்னர் ஜெனரலால் ஆட்சிக்கு தேவைகேற்ப அவசரநிலை சட்டம், விதிகள், ஒழுங்குமுறை ஆணை போன்றவற்றை அறிவிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
- உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டது
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
- இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சம்கள்
- இந்திய அரசியலமைப்பு பகுதிகள்