TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 17, 2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 17, 2021

 

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 17, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 17, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

 

சர்வதேச நீதி தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

       சர்வதேச நீதி தினம் (அல்லது சர்வதேச நீதிக்கான உலக தினம் அல்லது சர்வதேச குற்றவியல் நீதி நாள்) (The World Day for International Justice, (also known as Day of International Criminal Justice or International Justice Day)) எனப்படும் இத்தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court – ICC) உருவாகக் காரணமான ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17 ஆம் தேதியை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ளது. (குறிப்பு = இந்தியா இந்த் அமைப்பில் உறுபினராக இல்லை). இந்த அமைப்பின் 124-வது உறுப்பு நாடாக மலேசியா இணைந்தது. இந்த ஆண்டிற்கான கரு = SOCIAL JUSTICE IN THE DIGITAL ECONOMY

ஏ.டி.எம்களில் கேசட் இடமாற்ற முறை:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

       இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) அனைத்து ஏடிஎம்களிலும் கேசட் இடமாற்ற முறையை செயல்படுத்த காலக்கெடுவை 2022 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. தற்போதைய நிலையில் ஏ.றி.எம்களில் பணம் நிரப்பும் முறையினை மாற்றி, பணத்தை ஏ.டி.எம் மையங்களில் நிரப்பாமல மூடப்பட்ட பெட்டிகளை அப்படியே இயந்திரத்தில் பொருத்தும் முறையாக “கேசட் இடமாற்ற” முறையை விரைந்து செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

  • வெள்ளை ஏ.டி.எம் = வங்கிகள் அல்லாத நிறுவங்களால் ஏற்படுத்தப்படுவது
  • பசுமை ஏ.டி.எம் = வேளாண்மை பயன்பாட்டிற்கு பயன்படுத்தல்
  • ஆரஞ்சு ஏ.டி.எம் = பங்கு பரிமாற்றங்களுக்கனது
  • இளஞ்சிவப்பு ஏ.டி.எம் = பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது
  • பழுப்பு நிற ஏ.டி.எம் = வங்கிகளுக்காக 3-ஆம் தர நிறுவனம் அமைத்தல்

வாரணாசியில் பிரதமர்:

       உத்திரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அங்கு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.

  • 200 கோடி ரூபாய் மதிப்பில், “ருத்ராக்ஸ்” (Rudhraksh – an International Cooperation and Convention Cnetre) என்ற பெயரில் “சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம்” அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மாநாடுகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாறும் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் வணிகர்களையும் நகரத்திற்கு இழுக்கும். சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்திற்கு “ருத்ராக்” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இந்த மையத்தில் 108 ருத்ராட்சம் உள்ளது. இதன் கூரை ‘சிவலிங்கம்’ போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1௦௦ படுக்கைகள் கொண்ட தாய்-சேய் மருத்துவமனை துவக்கம்
  • “பிரசாத்” (PRASHAD = Pilgrimage Rejuvenation And Spiritual Augmentation Drive) திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட்னக்ள துவக்கி வைக்கப்பட்டது.

மேம்பட்ட போக்குவரத்து தொழில்நுட்பம் மற்றும் அமைப்புகளுக்கான மையம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

                மத்திய சாலைப் போகுவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள “நெடுஞ்சாலை பொறியாளர்களின் இந்திய அகாடமி” (Indian Academy of Highway Engineers) நிறுவனம் மற்றும் ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கலகம் (New South Wales University, Australia) இணைந்து, உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் “மேம்பட்ட போக்குவரத்து தொழில்நுட்பம் மற்றும் அமைப்புகளுக்கான மையம்” (CATTS = centre for advanced transportation technology and systems) அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

7-வது பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்பு அமைச்சர்கள் மாநாடு:

       பிரிக்ஸ் நாடுகளின் 7-வது தொழிலாளர் மற்றும் வேலைவாய்பு அமைச்சர்கள் மாநாடு (7TH BRICS LABOUR AND EMPLOYMENT MINISTER’S MEETING), காணொளி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு “இந்தியா” (UNDER INDIA’S PRESIDENCY) தலைமையேற்று நடத்தியது. இக்க்கூட்டதின் முடிவில், “பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்பு பிரகடனம் 2௦21” (BRICS LABOUR AND EMPLOYMENT MINISTER’S DECLARATION 2021) கொண்டுவரப்பட்டது.

பள்ளி ஆசிரியர்களுக்கு “SIATP” திட்டம்:

       மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய பழங்குடியின அமைச்சர் இணைந்து, பள்ளி ஆசிரியர்களுக்கான “SIATP” பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தனர். SITAP என்பது, “பள்ளி கண்டுபிடிப்பு பிரதிநிதி பயிற்சி திட்டம்” (SCHOOL INNOVATION AMBASSADOR TRAINING PROGRAM) ஆகும். இத்திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் 5௦௦௦௦ மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

நீலப் பொருளாதாரத்தை அதிகரிக்க “ஆழ்கடல்” இயக்கம்:

       மத்திய அரசின் சார்பில், நீலப் பொருளாதாரம் (BLUE ECONOMY) எனப்படும் கடல்சார் பொருளாதாரத்தை (SEAFOOD ECONOMY) 1௦௦ பில்லியன் ருபாய் அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக அரசு, “ஆழ்கடல் இயக்கம்” (DEEP OCEAN MISSION) என்ற இயக்கத்தை துவக்கி ஆழ்கடல் ஆய்வுகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில் “குறைதீர்” செயலி:

       மத்திய அரசின் சார்பில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க “செயற்கை நுண்ணறிவு” முறையில் குறைதீர் மேலாண்மை திட்ட செயலியை அறிமுகம் செய்துள்ளது. “CPGRAMS” (CENTRALIZED PUBLIC GRIEVANCE REDRESS AND MONITORING SYSTEM) எனப்படும் இத்திட்டத்தின் மூலம் குறைகளை எளிதில் தீர்க்க செயற்கை நுண்ணறிவு, தகவல் அறிவியல் மற்றும் இயந்திர மொழி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு “கிசான் சாரதி” திட்டம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

       மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் சார்பில், “கிசான் சாரதி” (KISAN SARATHI) என்ற டிஜிடல் இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், விவசாயிகளுக்கு “அவரவர் மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவல்களை வழங்குதல்” (RIGHT INFORMATION AT THE RIGHT TIME IN THEIR DESIRED LANGUAGE) ஆகும். இத்திட்டம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் 93-வது துவக்க ஆண்டு தினத்தை முன்னிட்டு செயல்படுத்தப்பட்டது.

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள்:

       “2-வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் 2௦22” (2ND KHELO INDIA UNIVERSITIES GAMES 2022), போட்டிகள் வருகின்ற 2௦22 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு (BENGALURU, KARNATAKA) நகரில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள் இடையேயான இப்போட்டிகள், இந்தாண்டு புதிதாக 2  விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை யோகாசனம் மற்றும் மல்லேகாம்ப் ஆகும்.

அன்சுலா ராவிற்கு தடை:

       மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை “அன்சுலா ராவ்”விற்கு, போதைமருந்து எடுத்துக்கொண்ட காரணத்திற்காக நான்கு ஆண்டுகள் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்பாட்டிற்காக தடை செய்யப்பட்டுள்ள முதல் கிரிக்கெட் வீராங்கனை (1ST WOMEN CRICKETER TO BE BANNED FOR DOPING) இவராவார். “19 – NORANDROSTERONE” என்ற போதைப் பொருள் பயன்படுத்தி உள்ளார்.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியில் “கேரள மகளிர் அணி”:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

       ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள “ஏ.எப்.சி கிளப் சாம்பியன்சிப்” (AFC Club Championship 2020-21) போட்டிகளில், இந்தியாவின் சார்பில், “கோகுலம் கேரள எப்.சி” (GOKULAM KERALA FC) மகளிர் அணி விளையாட உள்ளது. நான்காவது ஹீரோ பெண்கள் கால்பந்து சாம்பியன்சிப் (4TH HERO INDIAN WOMEN’S LEAGUE) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.

திறன் இந்தியா இயக்கத்தின் 6 ஆம் ஆண்டு விழா:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

       திறன் இந்தியா இயக்கத்தின் 6 ஆம் ஆண்டு விழாவினை (6th ANNIVERSARY OF SKILL INDIA MISSION) முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மக்களிடம் உரையாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் தேதி, “உலக இளையோர் திறன் தினம்” (WORLD YOUTH SKILLS DAY, JULY 15) கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு பிரதமர் நாடு மக்களிடம் உரையாடினார். பிரதமரின் கூற்றுப்படி, ஸ்கில் இந்தியா மிஷனின் கீழ், இன்றுவரை 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் தூதரகத்தை திறந்துள்ள முதல் வளைகுடா நாடு, அமீரகம்:

       இஸ்ரேல் நாட்டின் தூதரகத்தை திறந்துள்ள முதல் வளைகுடா நாடு (UAE, the first Gulf nation to open Embassy in Israel) என்ற சிறப்பை, “ஐக்கிய அரேபிய அமீரகம்” பெற்றுள்ளது. இவ்விழாவில், இஸ்ரேலின் புதிய பிரதமர் பங்கேற்றார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட அனுமதிக்கும் நாட்டின் முதல் உயர் நீதிமன்றம்:

       நீதிமன்ற நடவடிக்கைகளை மக்கள் மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் பார்வையிட அனுமதி அளித்துள்ள, இந்தியாவின் முதல் நீதிமன்றம் என்ற சிறப்பை, குஜராத் உயர்நீதிமன்றம் பெற்றுள்ளது (Gujarat High Court is set to become the first high court in the country to allow public viewing of proceedings through virtual mode). முன்னதாக 2020 அக்டோபரில் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஒரு யூடியூப் சேனலில் பொதுமக்கள் பார்வைக்கு நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கியது.

உலக எமோஜி தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

       ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி, “உலக எமோஜி தினம்” (WORLD EMOJI DAY) கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம், உரையாடல்களில் எமோஜிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்தல் ஆகும். 

மின்னல் அறிக்கை:

       இந்தியாவில் ஆண்டு தோறும் “மின்னல் அறிக்கை (ANNUAL LIGHTNING REPORT)” RELIEFWEB என்ற நிறுவனம் மூலம் வெளியிடப்படுகிறது. 2௦21 ஆம் ஆண்டு அறிக்கை சமிபத்தில் வெளியிடப்பட்டது. அறிக்கையில் உள்ள முக்கிய குறிப்புகளாவன,

  • இந்தியாவில் ஏற்படும் மின்னல்களின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் 34% அதிகரித்துள்ளது
  • சென்ற ஆண்டினை காட்டிலும், தற்போது பஞ்சாப்பில் 331% அதிகமாகவும், பீகாரில் 168% அதிகமாகவும் மின்னல்கள் பதிவாகி உள்ளன
  • அனால் கடந்த ஒரு வருடத்தில் மிகவும் அதிகபட்சமாக கோவா, டையு, டாமன் பகுதிகளில் -74% மின்னல்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில் -12% மின்னல்கள் குறைந்துள்ளன.
  • கடந்த ஒரு வருடத்தில் அதிகபட்ச மின்னல்கள பதிவாகியுள்ள மாநிலம் = ஒடிசா ஆகும்
  • கடந்த ஒரு வருடத்தில் மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆனது,
    • பீகார் = 401 (முதல் இடம்)
    • உத்திரப் பிரதேசம் = 238 (2-வது இடம்)
    • மத்தியப்பிரதேசம் = 228 (3-வது இடம்)
    • தமிழ்நாடு = 12
  • ஜூலை 11, 2021 அன்று மின்னல் தாக்குதலில் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.

 

 

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 14.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 13.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 12.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 11.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 10.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 09.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 08.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 07.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 06.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 05.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 04.07.2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 03.07.2021

 

Leave a Reply