திருத்தச் சட்டம் – 1781

திருத்தச் சட்டம் – 1781

                                      திருத்தச் சட்டம் – 1781  ஆம் ஆண்டு சட்டம் உருவாக்க வேண்டிய காரணம், திருத்தச் சட்டம் – 1781 ஆல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை தேர்வு நோக்கில் இங்கு பதியப்பட்டுள்ளது.

திருத்தச் சட்டம் - 1781

திருத்தச் சட்டம் – 1781 சட்டத்தின் தேவை:

  • திருத்தச் சட்டம் – 1781 சட்டம் கொண்டு வந்ததின் முக்கிய காரணம், 1773 ஒழுங்குமுறை சட்டத்தின் குறைபாடுகளை நீக்க ஏதுவாக பிரிட்டிஷ் பாராளுமன்றம், இச்சட்டத்தை கொண்டுவந்தது.
  • “டவுச்சட் குழுவின்” (Touchet Committee) பரிந்துரையின் அடிப்படையில் இந்த  சட்டம்  கொண்டுவரப்பட்டது.

திருத்தச் சட்டம் - 1781

  • இச்சட்டத்தை “அறிவிப்பு சட்டம் 1781” (Declaratory Act 1781) அல்லது “தீர்வு சட்டம் 1781” (Act of Settlement 1781) எனவும் அழைத்தனர்
  • 1773 ஒழுங்குமுறை சட்டத்தால், கவர்னர் ஜெனரலுக்கும், ஆலோசனை குழுவினருக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. அதிகார மோதல் வெடித்தது.
  • மாநிலங்களின் மீது கவர்னர் ஜெனரலால் முழுமையான அதிகாரம் செலுத்தப்பட முடியவில்லை
  • நீதிமன்ற அதிகாரம் கவர்னர் அதிகாரத்தில் குறுக்கிட்டது

திருத்தச் சட்டத்தின் சிறப்பியல்புகள்:

  • இச்சட்டத்தின் முக்கிய இயல்பே, “நீதிமன்றத்திற்கும், கவர்னரின் கவுன்சிலுக்கும்” இடையேயான அதிகார எல்லையை பிரித்து தெளிவுப்படுத்தியது
  • நீதிமன்றத்தை காட்டிலும் கவர்னரின் அதிகார கவுன்சில் குழுவிற்கு அதிக அதிகாரத்தை வழங்கியது
  • கவர்னர் ஜெனரலும் அவரது ஆலோசனை குழு உறுப்பினர்களும் வங்காள தலைமை நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல
  • கம்பெனியின் வரிவசூல் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை எனப்பட்டது
  • வரிவசூல் அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை
  • ஆங்கிலேயர்கள் சம்பந்தமான வழக்குகள் மட்டுமே இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்
  • கல்கத்தாவில் வசிக்கும் மக்கள் யாவரும் தலைமை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டவர் ஆவார். உச்ச நீதிமன்றத்தின் அதிக்கரம் கல்கத்தா உள்ளே மட்டும் செல்லுபடியாகும்.

திருத்தச் சட்டம் - 1781

  • ஆனால் இந்துக்களும், முகலாயர்களும் வாரிசுரிமை போன்ற நிகழ்வுகளில் அவரவர் மதச் சட்டத்தின் படியே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது
  • இந்து மற்றும் முஸ்லிம் சட்டங்கள் பாதுகாக்கப்பட்டன
  • நீதிமன்ற மேல்முறையீட்டிற்கு, கவர்னர் ஜெனரலின் ஆலோசனை குழுவினை நாட வேண்டும்

திருத்தச் சட்டம் - 1781

  • உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர், கவர்னர் ஜெனரலால் ஆட்சிக்கு தேவைகேற்ப அவசரநிலை சட்டம், விதிகள், ஒழுங்குமுறை ஆணை போன்றவற்றை அறிவிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
  • உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டது

 

Leave a Reply