திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வார்
- இவரின் ஊர் திருக்குறையலூர்
- இவர் திருமாலின் வில்லின் அம்சமாகப் பிறந்தவர்
- இவரின் இயற் பெயர் = கலியன்
- இவரின் மனைவி = குமுதவல்லி
- இவர் ஆண்ட நாடு = திருவாலி நாடு
- இவருக்கு நாராயண மந்திரத்தை உபதேசம் செய்தவர் = திருமால்
- இவர் பாடிய ஆறு நூல்களும் தமிழ் வேதமாகிய திருவாய் மொழியின் ஆறு அங்கங்கள் எனப்படும்
- முதன் முதலாக மடல் என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கியவர்
- இவரின் மடல் கலிவென்பாவால் ஆனது
- தாண்டகம் பாடிய ஆழ்வார் = திருமங்கையாழ்வார்
- தாண்டகம் பாடிய நாயன்மார் = திருநாவுக்கரசர்
- நாட்டுப்புற பாடல்களுக்கு வடிவம் கொடுத்த ஆழ்வார் = திருமங்கையாழ்வார்
- நாட்டுப்புற பாடல்களுக்கு வடிவம் கொடுத்த நாயன்மார் = மாணிக்கவாசகர்
- இவர் வழிப்பறியில் ஈடுப்பட்டு அடியவர்களுக்கு உணவளித்தார்
- இவர் வழிப்போக்கராக வந்த திருமாலிடமே திருட முயன்றவர்
- இவர் நாகப்பட்டினத்துப் புத்த விகாரத்தை உடைத்து ஸ்ரீரங்கம் கோயிலின் மூன்றாம் சுவர் கட்டியதாக கூறப்படுகிறது.
- இவர் தம் பாசுரங்களைச் “சங்க முகத்தமிழ் மாலை” என்றும் “சங்கமலி தமிழ்மாலை” என்றும் கூறுவார்.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் மிக சிறப்புடையது இவர் தம் பாட்டே என்பார் மறைமலையடிகள்
சிறப்புப் பெயர்கள்
- கலியன் (இயற் பெயர்)
- கலிநாடன்
- கலிகன்றி
- அருள்மாரி
- பரகாலன்
- குறையலாளி
- மங்கையர் கோன்
- மங்கை வேந்தன்
- ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
- ஆறு அங்கம் கூறிய அறிநாடன்
படைப்பு
- பெரிய திருமொழி
- திருநெடுந்ததாண்டகம்
- திருக்குறுந்தாண்டகம்
- திருஎழுகூற்றறிக்கை
- சிறிய திருமடல்
- பெரிய திருமடல்
மேற்கோள்
- தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
- காவியை வென்ற கண்ணாரிடம் என்
ஆவியை இழந்த பாவியாய் இருந்தேன்
- வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயிர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மொடு