தி சு நடராசன்
தி சு நடராசன்
- பெயர் = தி.சு.நடராசன்
- ஊர் = விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்
- இவர் முதுகலைத் தமிழ்ப் படிப்பைச் சென்னை மாநிலக் கல்லூரியிலும், முனைவர் பட்டத்தை மதுரைப் பல்கலைக்கழகத்திலும் முடித்தவர்
- மார்க்சியத் திறனாய்வாளராக அறியப்படும் தி.சு. நடராசன் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய பேராசிரியர்.
- தமிழில் மார்க்சியத் திறனாய்வுக்கு அடிப்படைகளை உருவாக்கித் தந்த பாளையங்கோட்டை நா.வானமாமலையின் ஆய்வு வட்டத்தில் பயிற்சி பெற்று முழுமையான திறனாய்வாளராகத் தன்னை வளர்த்துக் கொண்டவர்.
ஆசிரியர் பணி
- திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்
- மதுரை காமாராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர்
- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர்
- போலாந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் பணி.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இலக்கிய பணி
- சாகித்திய அகாதெமி பொதுக்குழுவில் உறுப்பினராக இருந்தவர்
- தற்போது வரை தொடர்ச்சியாக ஞானபீட விருதுத் தேர்வுக்குழுவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்
- மகாநதி என்ற இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் காந்தள் என்னும் திறனாய்வுக்கான இதழ் ஆசிரியப் பொறுப்பிலும் பணியாற்றியவர்.
எழுதிய நூல்கள்
- கவிதையெனும் மொழி
- திறனாய்வுக்கலை (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
- திறனாய்வுக் கலை – கொள்கைகளும் அணுகுமுறைகளும்
- தமிழ் அழகியல்
- தமிழ் அழகியல் – மரபும் கோட்பாடும்
- தமிழின் பண்பாட்டு வெளிகள்
- தமிழகத்தில் வைதீக சமயங்கள்- வரலாறும் வக்கணைகளும்
- தமிழின் அடையாளம் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
- பறந்து போகுது குட்டியானை
- உரைகளும் உரையாசிரியர்களும்
- சிலப்பதிகாரம் மறுவாசிப்பு
- தி.ஜானகிராமனின் நாவல்கள் – ஒரு மறுவாசிப்பு அனுபவம்
- சாதிச் சழக்குகள்
- இந்துசமயம் : புதர்களும் புதிர்களும்
- அமெரிக்காவிற்கு ஒரு பயணம்
- கவிதை இயற்றுவது எப்படி?
மொழிபெயர்ப்பு நூல்கள்
- ரோமன் யாக்கப்சனின் மொழியியலும் கவிதையியலும் (Roman Jakobson’s Linguistics and Poetics)
- மாயகாவ்ஸ்கியின் எழுத்துக்கலை (Mayakovsky’s Craft of writing)