தொகை நூல்கள்
தொகைநூல்கள்
- சங்க இலக்கியங்கள் எனப்படுவது = பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்.
- மேற்கணக்கு நூல்கள் எனப்படுவது = பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
எட்டுத்தொகை நூல்கள் யாவை
- எட்டுத்தொகை நூல்களாவன = நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.
எட்டுத் தொகை நூல்களை குறிப்பிடும் பழம்பாடல்
நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று) ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை |
- இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் உள்ள பாடல்கள் பல்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர் பலரால் பல்வேறு சூழல்களில் பாடப்பட்டவையாகும்.
எட்டுத்தொகை நூல்களில் புறப்பொருள் நூல்கள்
- எட்டுத்தொகை நூல்களில் புறப்பொருள் நூல்கள் மொத்தம் = இரண்டு.
- எட்டுத்தொகை நூல்களில் புறப்பொருள் நூல்கள் = பதிற்றுப்பத்து, புறநானூறு.
எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் நூல்கள்
- எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் நூல்கள் மொத்தம் = ஐந்து.
- எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் நூல்கள் = நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல்
- எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல் = பரிபாடல்.
தொல்காப்பியம்
- பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களுக்கு எட்டுத்தொகைநூல்கள் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.