தொ மு சிதம்பர ரகுநாதன்
தொ மு சிதம்பர ரகுநாதன் ஆசிரியர் குறிப்பு
- பெயர் = தொ. மு. சிதம்பர ரகுநாதன்
- தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன்
- ஊர் = திருநெல்வேலி
- பெற்றோர் = தொண்டைமான் முத்தையா- முத்தம்மாள்
புனைப்பெயர்
- திருச்சிற்றமபலக் கவிராயர்
சிறப்புபெயர்
- நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
இதழ்
- சாந்தி
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தொ மு சிதம்பர ரகுநாதன் சிறுகதைகள்
- சேற்றில் மலர்ந்த செந்தாமரை
- க்ஷணப்பித்தம்
- சுதர்மம்
- கிரகணம்
- ரகுநாதன் கதைகள்
- நிலாவிலே பேசுவோம்
- சுருதி பேதம்
- அசலும் நகலும்
- மனைவி
- மாயை
- பிழைப்பு
- அபாய அறிவிப்பு
- ஐந்தாம் படை
- ஆணைத் தீ
- நீயும் நானும்
- வென்றிலன் என்றபோதும்
- மனைவி
சிதம்பர ரகுநாதன் கவிதை நூல்கள்
- ரகுநாதன் கவிதைகள்
- கவியரங்கக் கவிதைகள்
- காவியப் பரிசு
- தமிழால் ஏலாதா ?
தொ மு சிதம்பர ரகுநாதன் இலக்கிய விமர்சன நூல்கள்
- பாரதி – காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி பரிசு பெற்றது)
- இலக்கிய விமரிசனம்
- சமுதாய விமரிசனம்
- கங்கையும் காவிரியும் (தாகூருடன் பாரதியை ஒப்பிடும் ஆய்வு நூல்)
- பாரதியும் ஷெல்லியும்
- புதுமைப்பித்தன் கதைகள் – சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)
வரலாறு நூல்
- புதுமைப்பித்தன் வரலாறு (தனது நண்பனின் வரலாறை கூறும் நூல்)
ஆய்வு நூல்
- இளங்கோவடிகள் யார்?
தொ மு சிதம்பர ரகுநாதன் புதினங்கள்
- புயல் (முதல் புதினம்)
- பஞ்சும் பசியும் (நெசவாளர்களின் துயரை கூறும் புதினம்)
- முதலிரவு (தமிழக அரசால் தடை செய்யப்பட நாவல்)
- கன்னிகா
நாடகங்கள்
- சிலை பேசிற்று
- மருது பாண்டியன்
- அண்ணனும் தம்பியும்
- பெண்ணாய்ப் பிறந்தால்
- மோகினி
- வலி
- அத்தான் வந்தார்
- பஞ்சப்பாட்டு
பாரதி ஆய்வு நூல்கள்
- பாரதி-சில பார்வைகள்
- பாரதி காலமும் கருத்தும்
- பாரதியும் புரட்சி இயக்கமும்
- பாஞ்சாலி சபதம் – உறை பொருளும் மறை பொருளும்
மொழிபெயர்ப்பு நூல்கள்
- தாய் (கார்க்கியின் – தி மதர்).
- லெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா – விளடிமிர் இலிச் லெனின்).
- மூன்று தலைமுறைகள் (கார்க்கியின் – தி ஆர்டமோனோவ் பிசினஸ்)
- தந்தையின் காதலி (கார்க்கியின் கதையான மால்வா)
- சந்திப்பு (கார்க்கியின் சிறுகதைகள்)
- அக்னிபரிட்சை (டால்ஸ்டாய்)
தொ மு சிதம்பர ரகுநாதன் குறிப்புகள்
- இவரின் அண்ணன் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் கோயில்கள் குறித்த கட்டுரைகள் “வேங்கடம் முதல் குமரிவரை” என்ற தலைப்பில் ஐந்து பெருந்தொகுதிகளாக எழுதியவர்.
- இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார்.
- இவரின் முதல் புதினம் = புயல்
- இவரின் “பஞ்சும் பசியும்” என்ற புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50,000 பிரதிகள் விற்பனையானது (இதனை மொழிபெயர்த்தவர் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில்).
- கவிதைகளை மட்டும் திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் எழுதுவார்.
- ‘மின்னல்’ என்னும் கையெழுத்து இதழை 1940 ஆம் ஆண்டு நடத்தினார்.
- சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் அ சீனிவாச ராகவன் தொ மு சியின் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார்.
தொ மு சிதம்பர ரகுநாதன் சிறப்புகள்
- இவரின் நண்பர் = சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்.
- சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனால் “எனது வாரிசு” என்று அடையாளம் காட்டப்பட்டவர் தொ.மு.சி.
- ரகுநாதன் எழுதிய `ஆனைத்தீ’ என்ற சிறுகதைக்கு ஈடான ஒரு கதையை, தமிழில் வேறு யாரும் எழுதவில்லை என்பது எழுத்தாளர் சுந்தரராமசாமியின் அழுத்தமான கருத்து.
- முற்போக்கு இலக்கியம் என்ற வகைமையின் பயணத்துக்கு முதன்முதலாகப் பாதை போட்டவர்.
- தொ.மு.சி.ரகுநாதனின் நூல்கள் 2008-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
- 1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்’ நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல்.
- ‘இலக்கிய விமர்சனம்’ என்னும் நூலை தமது இருபத்தைந்தாவது வயதில் எழுதி வெளியிட்டார். இலக்கிய விமர்சனக் கலை பற்றி தமிழில் வெளிவந்த முதல் நூல் ஆகும்.
- இவரது ‘இலக்கிய விமர்சனம்’ என்னும் நூல், தமிழில் வெளிவந்த முதல் இலக்கிய விமர்சன நூலாகும்.
- அழகியலைத் தமிழுக்கு அறிமுகம் செய்த முதல் நூல் = இலக்கிய விமர்சனம்
- போராடும் தொழிலாளர்களை முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் கதாநாயகனாக்கிய புரட்சிகர எழுத்தாளர்.
விருதுகள்
- சாகித்திய அகாதமி விருது – 1983
- இலக்கிய சிந்தனை பரிசு
- சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)
- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு
- பாரதி விருது – 2001