நான்கு வகை குடியுரிமை
நான்கு வகை குடியுரிமை
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) இரண்டாவது பகுதியில் (Part II) விதி 5-ல் இருந்து 11 வரை (Article 5 – 11), இந்தியக் குடியுரிமையை (Citizenship) பற்றி கூறுகிறது. இதன்படி, இந்திய குடியரசு தினமான ஜனவரி 26, 195௦ ஆம் தேதி, இந்தியாவில் நான்கு வகை குடியுரிமை செயல்பாட்டில் இருந்தது.
- இந்தியாவில் நிரந்தரமாக தங்கியிருப்போர்
- பாகிஸ்தானில் இருந்து வந்தோர்
- இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்று மீண்டும் இந்தியா திரும்பியோர்
- இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் வாழ்வோர்
இந்தியாவில் நிரந்தரமாக தங்கியிருப்போர்
இந்தியாவை வாழ்விடமாக கொண்டிருந்தோர் (Domiciles). இவர்கள்,
- இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் அல்லது
- இவர்களின் பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் அல்லது
- இந்திய அரசியல் சட்டம் நடைமுறைப் படுத்துவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன் இருந்து இந்தியாவில் நிலையாகத் தங்கி இருக்க வேண்டும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாகிஸ்தானில் இருந்து வந்தோர்
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து வந்தோர். அவ்வாறு புலம் பெயர்ந்து வந்தோரின் பெற்றோரோ அல்லது தாத்தாக்களோ ஒன்றுபட்டிருந்த இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.
- 1948 ஜூலை 19-ம் தேதிக்கு முன் வந்திருந்தால் அவர்கள் இந்தியக் குடியிருப்போராக கருதப்படுவர். ஏனெனில் அந்த ஆண்டில் தான் குடிபெயர்ந்தோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அல்லது,
- ஜூலை 19, 1948 அன்று அல்லது அதற்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தால், அவர் இந்திய குடிமகனாக பதிவு செய்யப்பட்டார். ஆனால், ஒரு நபர் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் தேதிக்கு முந்தைய ஆறு மாதங்கள் இந்தியாவில் வசித்திருந்தால் மட்டுமே அவர் பதிவு செய்ய முடியும்.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்று மீண்டும் இந்தியா திரும்பியோர்
மார்ச் 1, 1947 க்குப் பிறகு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த ஒருவர், ஆனால் பின்னர் மீள்குடியேற்றத்திற்காக இந்தியாவுக்குத் திரும்பினால், இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்படுவார். இதற்காக, அவர் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
- குறிப்பு = இந்த விதி 1947 மார்ச் 1 க்குப் பிறகு மற்றும் 1950 ஜனவரி 26 க்கு முன்பு குடியேற்றத்தைக் குறிக்கிறது. 1950 ஜனவரி 26 க்குப் பிறகு குடியேறிய நபர்களின் குடியுரிமை குறித்த கேள்வி குடியுரிமைச் சட்டம் 1955 ன் கீழ் முடிவு செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் வாழ்வோர்
இந்தியாவுக்கு வெளியே இருந்து ஒருவரோ அல்லது அவரது பெற்றோரோ, தாத்தாவோ ஒன்றுபட்டிருந்த இந்தியாவில் பிறந்திருந்து வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால் அவர் இந்தியக் குடியுரிமை பெறலாம். இதற்கு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதவர் தக்க சான்றிதழ் கொடுக்க வேண்டும். இச்சட்டம் வெளிநாடு வாழ் இந்தியர், இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு வழி வகுத்தது.
- ஒன்றிய அரசு / UNION OF STATES
- புதிய மாநிலங்களை உருவாக்குதல் / FORMATION OF NEW STATES
- மாநிலங்கள் மறுசீரமைப்பு / REORGANISATION OF STATES
- இந்திய நிலபரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் / EXCHANGE OF TERRITORIES WITH FOREIGN NATIONS
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் / EXCHANGE OF TERRITORIES WITH BANGLADESH
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் / INTEGRATION OF PRINCELY STATES
- தார் கமிசன் / DHAR COMMISSION
- ஜேவிபி குழு / JVP COMMITTEE
- பசல் அலி கமிசன் / FAZAL ALI COMMISSION
- 1956 பிறகு புதிய மாநிலங்கள் / STATES AFTER 1956
- ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் / JAMMU KASHMIR AND LADAKH
- மாநிலங்களின் பெயர் மாற்றம் / RENAMING OF STATES