இவர் திருமணம் செய்துக் கொள்ள வில்லை. தன்னுடைய இறுதி காலத்தில் “பூங்கோதை” என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார்
1907 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்திலுள்ளசூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கு வ.உ.சி. உள்ளிட்டவர்களைத் திரட்டுவதற்காகத் தூத்துக்குடிக்கு வந்த சி. சுப்பிரமணிய பாரதியை வ.உ.சி.யின் வீட்டில் முதன்முறையாகக் கண்டார்.
1932ஆம் ஆண்டில் காந்தியடிகளின் கட்டளையை ஏற்று சென்னை சிந்தாரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார்.
இறுதி நாட்களில் தான் வாழ்ந்த பகுதிக்கு “பாரதிபுரம்” எனப் பெயர் சூட்டினார்
1921 செப்டம்பர் 11ஆம் நாள் இரவு ஒரு மணிக்கு இறந்த பாரதியாரின் உடலை மறுநாள் சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவருள் நெல்லையப்பரும் ஒருவர்
1908ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 7ஆம் நாள் வ.உ.சி.க்கு இரட்டை வாழ்நாள் தண்டனையும் சிவத்திற்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டன. இதனைக் கண்டித்து நெல்லையப்பர் கட்டுரையொன்று எழுதினார். அது பாரதியார் நடத்தியஇந்தியா இதழில் வெளியிடப்பட்டது. இதுவே அச்சில் வந்த அவரின் முதற் படைப்பு
பாரதியை பற்றி “இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களை தமிழ்நாட்டு மாதர்களும், புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன்” எனக் கூறினார் நெல்லையப்பர்
பாரதி படைப்புக்களை பதிப்பித்தல்
பாரதியை ‘நோபல் பரிசு பெறாத தமிழ்நாட்டுத் தாகூர்’ என்று கண்ணன் பாட்டு முன்னுரையில் பரலியார் குறிப்பிடுகிறார்
1917ஆம் ஆண்டு பாரதியாரின்கண்ணன் பாட்டு (ஆகத்து), 19 பாடல்கள் அடங்கிய நாட்டுப்பாட்டு (அக்டோபர்), பாப்பா பாட்டு, முரசுப் பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தார்.
1923ஆம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலரோடு இணைந்துபாரதி பிரசுராலயம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன்வழியாக குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாரதி அறுபத்தாறு ஆகிய பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிட்டார்.