பள்ளு இலக்கியம்
பள்ளு இலக்கியம்
- இதனை “உழத்திப்பாட்டு, பள்லேசல்” என்றும் கூறுவர்
- இது உழவர் வாழ்வை சித்தரித்து கூறும்
- இது மருத நில நூலாக கருதப்படுகிறது
- பாவகை = சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்படும்
- இது கோலாட்டமாக பாடப்படும் என்கிறார் டி.கே.சி
- பள்ளு இலக்கியத்தை “உழத்திப்பாட்டு” எனக் கூறியவர் = வீரமாமுனிவர்
- “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும், அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்
- தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கியம் பள்ளு ஆகும்
சேரி மொழியாற் செவ்விதிற் கிளத்து தேர்தல் வேண்டாது குறித்து தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே |
- சந்த நயம் மிக்கது இந்நூல் வகை
- “நெல்லு வகையை எண்ணினாலும், பள்ளு வகையை எண்ண முடியாது” என்பது பழமொழி
- முதல் பள்ளு நூல் = முக்கூடற்பள்ளு
முக்கூடற்பள்ளு
- இதுவே பள்ளு நூல்களில் முதல் நூல்
- இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர்
- திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
- அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
- சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
- இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
- இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.
- இதன் காலம் பதினேழாம் நூற்றாண்டு
- “முக்கூடல் நாடகம்” படைத்தவர் = சின்னத்தம்பி வேளாளர்