மயிலை சீனி வேங்கடசாமி
மயிலை சீனி வேங்கடசாமி
- பிறப்பு = திசம்பர் 16, 1900 – சூலை 8, 1980
- ஊர் = மயிலாப்பூர்
- தந்தை = சீனிவாசன்
- ஆசிரியர் = மயிலை சண்முகம் பிள்ளை
- இலக்கண, இலக்கியங்கள் கற்றது = பேராசிரியர் திரு. சற்குணர்
மயிலை சீனி வேங்கடசாமி சிறப்பு பெயர்கள்
- பல்கலைக் கழகப் பேரவைச் செம்மல் (தமிழ்ப் பேரவை செம்மல்) = (வ.சுப.மாணிக்கம், மதுரைப் பல்கலைக்கழகம்)
- ஆராய்ச்சிப் பேரறிஞர் (நீதியரசர் கணபதி பிள்ளை)
- தமிழ் ஆய்வுலகின் முன்னோடி
- ஆய்வுக்கு இலக்கணம் வகுத்த அறிஞர்
- தமிழ்த் தேனி
- நுண்கலை வாணர்
- இலக்கியக் கடல்
- மொழிநூற் புலவர், சமயநூல் வித்தகர், நுண்கலை வாணர், வரிவடிவ வரலாற்று வல்லுநர், சொல்லாய்வுச் செம்மல்
- தமிழை மீட்டுருவாக்கம் செய்தவர்
மயிலை சீனி வேங்கடசாமி நூல்கள்
- மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய முதல் நூல் = கிறித்துவமும் தமிழும்.
- பௌத்தமும் தமிழும்
- சமணமும் தமிழும்
- இந்து மதமும் தமிழும்
- இஸ்லாமும் தமிழும்
- யானைக் கோவில் வரலாறு
- தமிழ்நாட்டு சிற்பக்கலை
- 18 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம்
- மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
- இறையனார் களவியல் ஆராய்ச்சி
- பௌத்தக் கதைகள்
- இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவங்கள்
- மகேந்திரவர்மன்
- வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்
- மூன்றாம் நந்திவர்மன் (இம்மன்னனை பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் நூல்)
- புத்த ஜாதகக் கதைகள்
- அஞ்சிறைத்தும்பி (சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
- கௌதம புத்தர்
- மறைந்துபோன தமிழ் நூல்கள்
- சாசனச் செய்யுள் மஞ்சரி
- மனோன்மணீய ஆராய்ச்சியும் உரையும்
- பழங்காலத் தமிழ் வாணிகம்
- கொங்கு நாட்டு வரலாறு
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- இசைவாணர் கதைகள்
- உணவு நூல்
- துளு நாட்டு வரலாறு
- சமயங்கள் வளர்த்த தமிழ்
- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
- சேரன் செங்குட்டுவன்
- 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்
- சங்க காலச் சேர சோழ பாண்டியர்
- சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்
- நுண் கலைகள்
- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (கலைகள் குறித்த முழுமையான செய்திக் களஞ்சியம், தமிழ் கலைகள் குறித்து வெளிவந்த முதல் நூல்)
- சிறுபாணன் சென்ற பெருவழி
- மகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் (மொழிபெயர்ப்பு)
- பழந்தமிழும் பல்வகைச் சமயமும்
- பிறவெளிவந்த நூல்கள், கதைகள், இதழியல் கட்டுரைகள்
- இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்)
- தமிழ்நாட்டு வரலாறு – சங்ககால அரசியல் (இவரின் கடைசி நூல்)
மயிலை சீனி வேங்கடசாமி மொழிபெயர்ப்பு நூல்
- மத்த விலாசம் (மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம் என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்)
பதிப்பித்த நூல்கள்
- மனோன்மணியம்
கட்டுரைகள்
- கொடுங்காற்று (முதல் கட்டுரை)
- ஆசார சீர்திருத்தம்
- வெண்பா
- தமிழ்நாட்டின் தொன்மை
- கிரேக்கக் கவி ஹோமரும் கவிச்சக்ரவர்த்தி கம்பரும்
- ஆண் பெண் சமத்துவம்
- சைவ சாப்பாடு அல்லது மரக்கறி உணவு
- மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள்
- தேசிய பாடல்கள்
- இந்தியாவின் பொது பாஷை இங்கிலீஷா? ஹிந்தியா?
- மாமிச உணவைப் பற்றிய தடைக்கு விடை
- வைட்டமின் (Vitamin) என்னும் ஜீவ சத்துப் பொருள்
- பாவாடை
- பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கம்
- சிற்பக்கலையில் தாமரை
- மாநாய்கனும் மாசாத்துவானும்
- தமிழ்நாட்டு ஜைன சிற்பங்களும் ஓவியங்களும் (அவரின் இறுதி கட்டுரை)
மயிலையாரின் தோற்றம் குறித்து நாரை. துரைக்கண்ணன் கூற்று
- “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம். பளபளக்கும் வழுக்கைத் தலை. வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி. கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்டமுகம். எடுப்பான மூக்கு. படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள். கணுக்கால் தெரியக் கட்டி இருக்கும் நான்கு முழு வெள்ளை வேட்டி. காலர் இல்லாத முழுக்கை சட்டை. சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி, பவுண்டன் பேனா, கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம். இடது கையில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப்பை. இப்படியான தோற்றத்துடன் கன்னிமரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்”
மயிலை சீனி வேங்கடசாமி குறிப்புக்கள்
- தன்னார்வம் மிக்கவராய், நடுநிலை பிறழாதவராய், காட்சிக்கு எளியராய், தமிழின் மறைந்துபோன அடையாளங்களை – சின்னங்களை மீட்டுருவாக்க வடிவில் யாவரும் அறிய ஆய்வுப் படைப்புகளை வழங்கிச் சென்றவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.
- நீதிக்கட்சியின் “திராவிடன்” இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்
- “நினைப்பதை நூல் வடிவில் எழுதுக” என என்னை முதலில் ஊக்கப்படுத்தியவர் சற்குணர்தாம் என்று வேங்கடசாமி அவர்களே தெரிவித்துள்ளார்
- மனத்திற்குச் சரி என்று பட்டதைத் துணிந்து கூறவேண்டும் என்ற உணர்வு தந்தை பெரியாரிட மிருந்து தாம் பெற்றதாக மயிலையாரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்
- வரலாற்று ஆய்வு தொடர்பாக 9 நூல்களை படைத்துள்ளார்
- இலக்கிய ஆய்வு பிரிவில் 6 நூல்களை படைத்துள்ளார்
- சமய ஆய்வு நூல்கள் 4 ஆகும்
- கலை ஆய்வு நூல்கள் 5 ஆகும்
- இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார்.
- இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்
- 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார்.
- ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் “அஞ்சிறைத் தும்பி” என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
- மயிலை சீனி வேங்கடசாமியின் முதல் நூல் = கிறித்துவமும் தமிழும்
- மயிலை சீனி வேங்கடசாமியின் கடைசி நூல் = தமிழ்நாட்டு வரலாறு – சங்ககால அரசியல்
- மயிலை சீனி வேங்கடசாமியின் முதல் கட்டுரை = கொடுங்காற்று
- மயிலை சீனி வேங்கடசாமியின் இறுதி கட்டுரை = தமிழ்நாட்டு ஜைன சிற்பங்களும் ஓவியங்களும்
மூன்று செய்திகள்
- இவர் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை. இடைநிலைப் பள்ளி ஆசிரியர். தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்
- இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் ஆறுமுக நாவலர் போன்று தமிழுக்கு தொண்டு செய்தவர்
- இவர் தனித்தன்மை கொண்ட ஆராய்ச்சியாளர்
முதல் ஆராய்ச்சி
- மானிடவியல், சமூகவியல் அறிவுடன் தமிழர் பண்பாட்டு வரலாற்றை முதன் முறையாக ஆய்வு செய்தவர் மயிலையாரோ
- தமிழருடைய கலை, பணபாடு. சமயம் ஆகிய துறைகளில் கருத்து வடிவங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அத்துறையில் முதன் முதலாக ஆராய்ச்சி செய்தவர் மயிலையாரே
மயிலை சீனி வேங்கடசாமி சிறப்புகள்
- முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ.வி அவர்கள் செயற்படுத்திய 49 புலவர் அடங்கிய பெருங் குழுவினரில் மரபுவழிப் புலவர் ஆக மதிக்கப்பெற்றார்
- பழந்தமிழ் எழுத்து, பிராமி எழுத்து, வட்டெழுத்து, தற்காலச் சோழர் எழுத்து, வடக்கு பிராமி, தெற்கு பிராமி, குறியீடுகள் ஆகியவற்றைக் கண்டு ஊர் ஊராய், கோவில் கோவிலாய், மலை மலையாய்ச் சுற்றிச் சுற்றிச் சோர்விலும் தமிழ்ப் பணியில் திளைத்து இன்பம் கண்டவர் மயிலை சீனி. வே. அவர்கள்.
- அறிஞர். வ.சுப. மாணிக்கம் துணைவேந்தராக இருந்த காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகம் 29.3.1980இல் “பல்கலைக் கழகப் பேரவைச் செம்மல்” எனும் தகுதியைத் தந்து பெருமைப்படுத்தியது.
- 1961இல் மயிலையாருக்கு மணிவிழா நடை பெற்றது. சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற அவ்விழாவில் நீதியரசர் கணபதியா பிள்ளை, மயிலையாருக்கு ‘ஆராய்ச்சிப்பேரறிஞர்’ என்ற பட்டத்தை நல்கிச் சிறப்பித்தார்.
- “சமன முனிவர் போல வாழ்ந்தவர்; தமிழ் உள்ளளவும் தமிழுக்காகப் பாடுபட்டவர்” எனப் போற்றப்படுகிறார்
- மயிலையார் ஒரு நுண்கலை வாணர். தமிழர் வளர்த்த கட்டடக்கலை, சிற்பக்கலை. ஓவியக்கலை, இசைக்கலை, நாடகக்கலை அனைத்தையும் மிக நுட்பமாக ஆய்வு செய்தவர்
- தமிழ்த்தாத்தா உ வே. சாமிநாதர் ஏட்டுச்சுவடிகளைத் தேடும் பணியில் ஊர் ஊராகக் கால் கடுக்க நடந்து சென்றார். அவர் போன்று மயிலையாரும் ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினைச் செய்தார்
- மயிலையார் ஒரு பல்கலை வாணர், இலக்கியக் கடல், வரலாற்றறிஞர், மொழிநூற் புலவர், சமயநூல் வித்தகர், நுண்கலை வாணர், வரிவடிவ வரலாற்று வல்லுநர், சொல்லாய்வுச் செம்மல், கல்வெட்டு, சாசனம், தொல்லியல் துறைகளில் தனி முத்திரை பதித்தவர். பன்மொழிப் புலவர். மானிடவியல், சமூகவியல் அறிஞர் எனப் பல்வேறு பரிமாணங் களின் பெட்டகமாகத் திகழ்ந்தார்.
- உரையாசிரியர்களின் உரைகளையெல்லாம் ஊன்றிப் படித்து மறைந்து போன தமிழ் நூல்கள் பற்றிய குறிப்புகளையெல்லாம் ஒன்று விடாமல் தேடித்தொகுத்துத் தந்தப் பெருமை மயிலையாருக்கு உரியதாகும்
- இவரின் நூல்களும், கட்டுரைகளும், மீட்டுரு வாக்கத்தின் வாயில்கள் ஆகும்.
- தமது நூல்களுக்கு தாமே படம் வரைந்தவர்
- நாம் இழந்து விட்ட நூல்களைத் தேடிய முதல் அறிஞர் இவரே
- மறைந்த மாநகரங்களை அகழ்ந்து எடுப்பது போலத் தமிழ்ப் பெருங்கடலுள் புதையுண்டுபோன புதையல்களைத் தேடி எடுத்தார். மிக நுண்ணிய தடயங்களைக் கொண்டே நூல்களை அடையாளங்கொண்டு, சிதைந்து போன உருவத்தைச் செப்பம் செய்து உயிரூட்டி உலவவிட்டவர் மயிலையார்.
- தமிழர் கலைகள் குறித்து வெளிவந்த முதல் நூல் = மயிலையாரின் “தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்”
- மகாபலிபுரம் என்று தவறாக வழங்கப்பட்ட பெயரை மாமல்லபுரம் என்று அறிமுகப்படுத்திய பெருமையும் மயிலையாரையே சேரும்
- 2001 ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. அவரின் குடும்பத்திற்கு 10 இலட்ச ரூபாய் நன்கொடை வழங்கியது.
- மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாகின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்
- மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் படைத்த “தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்” என்னும் நூலே கவின்கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும். இந்நூலிற்கு தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது
- “ஆய்வு உலகில் தமிழக வரலாற்றை பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தவர்” என்று சிறப்பிக்கப்படுகிறார்.
மயிலை சீனி வேங்கடசாமி பற்றி சுவாமி விபுலானந்த அடிகள்
- சுவாமி விபுலானந்த அடிகள், ”மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில் முதியவர்; நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மயிலை சீனி வேங்கடசாமி பற்றி பாரதிதாசன்
கபிலசுவலபில் பாராட்டு
- சீனி வேங்கடசாமியின் “19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம்” மாதிரியான நூல்களை மயிலை சீனி அவர்களால் மட்டுமே எழுத முடியும்” என பாராட்டி உள்ளார்
பசும்பூண் பாண்டியனின் யானைக் கொடி
- அகநானூற்றின் 162 வது பாடலில் சங்க கால மன்னன் பசும்பூண் பாண்டியன்கோடியில் மட்டும் யானை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்பதை எடுத்துக் காட்டினார்.
- இப்பாடலை எழுதியவர் = பரணர்
மாமல்லபுரம்
- மாமல்லபுரத்துச் சிற்பங்கள் அருச்சுனன் தவசு அல்லது பகீரதன் தவசு எனக் குறிப்பிடுவதை தவறு என்றும், அவை சமணர்களின் அஜீத நாதர் புராணத்தில் கூறப்படுகிற சகரசாகரர்களின் கதையென ஆராய்ந்து விளக்கினார்
- மகாபலிபுரம் என்று தவறாக வழங்கப்பட்ட பெயரை மாமல்லபுரம் என்று அறிமுகப்படுத்திய பெருமையும் மயிலையாரையே சேரும்
மயிலை சீனி வேங்கடசாமி பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மயிலையின் அஞ்சிறைத் தும்பி” என்ற சொல்லாய்வுக் கட்டுரைகள் தொகுப்பாக வெளிவந்த இதழ்
‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் “அஞ்சிறைத் தும்பி” என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.