SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்

Table of Contents

SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்

SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்

SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம் பெருமையை உணர உதவும் புதையல்களாக விளங்குகின்றன

மயிலை சீனி வேங்கடசாமி

  • மயிலை சீனி. வேங்கடசாமி, 16.12.1900ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.
  • தந்தை சீனிவாசன் ஒரு சித்த மருத்துவராகவும் அவருடைய தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியராகவும் இருந்தனர்.

தமிழ்ப்பற்று ஏற்பட காரணம்

  • தமக்கு தமிழ்பற்று ஏற்பட காரணம் என்ன என்பதை அவரே கூறுகிறார் = “”தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன்; எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன்”.

பணி

  • தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்
  • விபுலானந்த அடிகள், கா. சுப்பிரமணியர், திரு.வி.க, தெ.பொ.மீ, ச.த. சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் இருந்த தொடர்பு காரணமாக அவரது ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின.

தமிழ்த் தேனீ

  • மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாகின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்

மயிலை சீனி வேகடசாமியின் நூல்கள்

  • தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1934
  • மயிலை சீனி வேங்கடசாமியின் முதல் நூல் = கிறித்துவமும் தமிழும்
  • இவரின் பிற நூல்கள் = பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்

கல்வெட்டு ஆய்வு

  • இவர் மிகவும் புகழ் பெற்ற துறை = கல்வெட்டு ஆராய்ச்சி
  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார். இது, தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

  • தமிழர்கள் வரலாற்றில் “இருண்ட காலம்” எனப்படும் “களப்பிரர் கால”த் தமிழக மன்னர்களை பற்றி ஆராய்ந்து “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” என்ற நூலை படைத்தார்

தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

  • மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் படைத்த “தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்” என்னும் நூலே கவின்கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூலிற்கு தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
  • கலை பற்றிய இவரின் பிற நூல்கள் = இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள்

ஓவியம் வரைதல்

  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரின் கலைத் திறனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சங்ககாலம் பற்றிய நூல்கள்

  • தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் மூலம் இவர் = சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாடு வரலாறு – சங்ககாலம் (அரசியல்) ஆகிய நூல்களை படைத்தார்
  • “ஆய்வு உலகில் தமிழக வரலாற்றை பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தவர்” என்று சிறப்பிக்கப்படுகிறார்.
  • இவர் துளு மொழியையும், தமிழ் மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்து உள்ளார்

பிற நூல்கள்

  • சாசனச் செய்யுள் மஞ்சரி
  • மறைந்து போன தமிழ்நூல்கள்
  • 19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம்

மறைந்து போன தமிழ்நூல்கள்

  • இவரின் “மறைந்து போன தமிழ்நூல்கள்” என்னும் இவரின் நூல், அறிய ஆவணப் பணிகளில் மிகச்சிறந்த நூலாகும்.
  • இந்நூலில், பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் நிறுத்துகிறார்.

SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்

பன்மொழிப் புலமை

  • வேங்கடசாமி தொடர்ந்து சொல்லாய்வுகளில் ஈடுபட்டு வந்தார்.
  • ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் “அஞ்சிறைத் தும்பி” என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

மத்த விலாசம்

  • வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர்.
  • எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம் என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.

வேங்கடசாமியின் வருத்தம்

  • “நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன். ஆராய்ச்சி நூல்களைப் பெரும்பான்மையோர் படிப்பதில்லை; இதை மிகச் சிறுபான்மையோரே படிக்கின்றனர் என்பதை நன்றாகத் தெரிந்தே ஆராய்ச்சி நூல்களை எழுதுகிறேன்” என்று வேங்கடசாமி வருந்தி எழுதியுள்ளார்

சுவாமி விபுலானந்த அடிகள் கூற்று

  • சுவாமி விபுலானந்த அடிகள், ”மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில் முதியவர்; நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்

  • 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினர்.

பசும்பூண் பாண்டியனின் யானைச் சின்னம்

  • சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார்.

பாவேந்தர் பாராட்டு

SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்

மயிலை வேங்கடசாமி உருவ அமைப்பு பற்றி நாரை.துரைக்கண்ணன் விவரித்தல்

  • ‘ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; அகன்ற நெற்றி; வட்ட முகம்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப்பையில் மூக்குக்கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல்துண்டு; இடது கரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகப்பை. இப்படியான தோற்றத்துடன் கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • மயிலை சீனி வேங்கடசாமி பற்றி மேலும் 
    அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

  • SAMACHEER KALVI 12TH TAMIL இராசமாணிக்கனார்
  • SAMACHEER KALVI 12TH TAMIL தொன்மம்
  • SAMACHEER KALVI 12TH TAMIL புறநானூறு
  • SAMACHEER KALVI 12TH TAMIL சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நமது அடையாளங்களை மீட்டவர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL தேயிலை தோட்டப் பாட்டு
  • SAMACHEER KALVI 12TH TAMIL அதியச மலர்
  • SAMACHEER KALVI 12TH TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
  • SAMACHEER KALVI 12TH TAMIL வை.மு.கோதைநாயகி
  • SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்
  • SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்

Leave a Reply