மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு
மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு
இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) துவங்கிய காலத்தில், இந்தியாவில் இரண்டு அடுக்கு (Dual Polity) அரசாங்க முறையே இருந்தது. மத்திய மாதிய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இணைந்து கூட்டாட்சி (Federal) தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவை ஆள்கின்றன.
1992-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தத்தின் (73rd and 74th Amendment Acts of 1992) மூலம், இந்தியாவின் புதிதாக மூன்றடுக்கு அரசாங்க முறை (Three Tier Government) நடைமுறைக்கு வந்தது. இது போன்ற அமைப்பு முறை, உலகின் உள்ள எந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திலும் இல்லை. அதாவது
- மத்திய அரசாங்கம் (Central Government)
- மாநில அரசாங்கம் (State Government)
- உள்ளாட்சி மன்ற அரசாங்கம் (Local Self Government)
மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு
1992-ம் ஆண்டு, 73-வது சட்டத்திருத்தத்தின் (73rd Amendment Act) படி, உள்ளாட்சி அமைப்பான கிராமப் பஞ்சாயத்துகளுக்கு (Panchayat) அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து (Constitutional Status) வழங்கப்பட்டது. இதற்காக புதிய பகுதி 9-ம் (Part IX), அட்டவணையில் புதிதாக அட்டவணை-11 (Schedule 11) சேர்க்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ்ஜியம் முறையில் ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்றடுக்கு கிராம (Three Tier Panchayat Raj System) முறைகள் கொண்டுள்ளன
- கிராமப் பஞ்சாயத்து (Village Panchayat)
- பஞ்சாயத்து ஒன்றியம் (Panchayat Union)
- மாவட்ட பஞ்சாயத்து (District Panchayat)
1992-ம் ஆண்டு, 74-வது சட்டத்திருத்தத்தின் (74th Amendment Act) படி, உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகளுக்கு (Municipalities), அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து (Constitutional Status) வழங்கப்பட்டது. இதற்காக புதிய பகுதியாக பகுதி-9அ (Part IX-A) என்ற பிரிவும், அட்டவணை பகுதியில் “அட்டக்வனை 12” (Schedule 12) ஆகியனவும் சேர்க்கப்பட்டன. நகரப் பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்பில் மூன்று அடுக்கு முறை (Three types of Municipalities) கொண்டுவரப்பட்டது.
- நகரப் பஞ்சாயத்து (Town Panchayat)
- நகராட்சி (Municipalities)
- மாநகராட்சி (Corporation)
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை
- FUNDAMENTAL RIGHTS / அடிப்படை உரிமைகள்
- DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY / வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- FUNDAMENTAL DUTIES / அடிப்படை கடமைகள்
- A SECULAR STATE / சமய சார்பற்ற நாடு
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை
- INDEPENDENT BODIES / தன்னாட்சி அமைப்புகள்
- EMERGENCY PROVISIONS / நெருக்கடி கால நியதிகள்