மௌனி

மௌனி

மௌனி

மௌனி ஆசிரியர் குறிப்பு

  • மௌனியின் இயற்பெயர் = மணி (சுப்பிரமணியம்)
  • காலம் = சூலை 27, 1907 – சூலை 6, 1985
  • ஊர் = தஞ்சை அருகே மாயவரம்

புனைப் பெயர்

  • மௌனி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சிறப்பு பெயர்கள்

  • “சிறுகதையின் திருமூலர்” என்று அழைக்கப்படுபவர் = மௌனி

மௌனி சிறுகதைகள்

  1. பிரபஞ்சகானம்
  2. ஏன்? (முதல் சிறுகதை)
  3. காதல் சாலை
  4. குடும்பத்தேர்
  5. கொஞ்ச தூரம்
  6. சுந்தரி
  7. அழியாச்சுடர்
  8. மாறுதல்
  9. நினைவுச் சுழல்
  10. மாபெருங் காவியம்
  11. மிஸ்டேக்
  12. சிகிச்சை
  13. எங்கிருந்தோ வந்தான்
  14. இந்நேரம்,இந்நேரம்
  15. மாறாட்டம்
  16. நினைவுச் சுவடு
  17. மனக்கோலம்
  18. சாவில் பிறந்த சிருஷ்டி
  19. குடை நிழல்
  20. பிரக்ஞை வெளியில்
  21. மனக்கோட்டை
  22. உறவு, பந்தம், பாசம்
  23. அத்துவான வெளி
  24. தவறு (இறுதி சிறுகதை)

மௌனி

கட்டுரைகள்

  • எனக்கு பெயர் வைத்தவர்
  • செம்மங்குடி தன் ஊர் தேடல்

சிறுகதை தொகுப்பு

  • “அழியாச்சுடர்” (முதல் சிறுகதை தொகுப்பு)
  • மௌனி கதைகள்

மௌனி குறிப்புகள்

  • மெளனியின் மொத்த படைப்புகள் – 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்
  • மௌனியின் சிறுகதைகளைத் தேடித் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவந்த எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம்.
  • ஆல்ப்ர்ட் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிஞர் மௌனியிடம் ‘‘நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?’’ எனக் கேட்டபோது, ‘‘என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை; அதனால் எழுதுகிறேன்’’ எனப் பதில் சொன்னார் மௌனி.
  • எது நல்ல சிறுகதை என்ற கேள்விக்கு ‘‘நல்ல சிறுகதை என்பது ஒரு கவிதை. என் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையே’’ எனப் பதில் அளித்திருக்கிறார்
  • தன்னுடைய கதைகள் எதற்கும் தான் தலைப்பு வைத்ததில்லை என்றும் எல்லாம் பத்திரிகைக்காரர்களே வைத்த தலைப்புக்கள் என்றும் மௌனி குறிப்பிடுகிறார்.

மௌனி

மௌனி சிறப்புகள்

  • மௌனியை “சிறுகதையின் திருமூலர்” என்று அழைத்தவர் = சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்
  • புதுமைப்பித்தன் = “தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்தவர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற புனைபேரில் எழுதிவருபவரைச் சொல்லவேண்டும். அவரை தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று சொல்லவேண்டும். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபடமறுக்கும் கருத்துகளை மடக்கிக் கொண்டுவரக்கூடியவர் அவர் (மௌனி) ஒருவரே”
  • ஜெயகாந்தன் = எனக்கு பிடித்த மிகச்சிறந்த எழுத்தாளர் மௌனி.
  • ஜெயகாந்தன் = தான் எப்போதும் எழுதுவதற்காக உட்காரும்போது மௌனியின் ‘மாறுதல்’ என்ற கதையைப் படித்து விட்டுத்தான் எழுதுவதாக கூறியுள்ளார்
  • க.நா.சுப்பிரமணியன் = மௌனியின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெருஞ்சிகரம்
  • “24 கதை எழுதி இறவாப்புகழ் பெற்றவர்” என்று கூறப்படுபவர்.
  • ‘மௌனியோடு கொஞ்ச தூரம்’ என்ற நூலை எழுதியவர் = திலீப்குமார்
  • ‘மௌனியின் மறுபக்கம்’ என்ற நூலை எழுதியவர் = ஜே.வி.நாதன்
  • சுந்தர ராமசாமி = ’மௌனி சாதித்து விட்டார். நாங்களெல்லாம் முயற்சி செய்கிறோம்’ என்றார்.
  • ஆல்பர்ட் ஃப்ராங்க்ளீன் என்ற அமெரிக்கன் மௌனியை ’கருமேகங்களுக்கிடையில் ஒரு மின்னல்’ என்று பாராட்டி எழுதியுள்ளார்.
  • பெங்குவின் பதிப்பகம் சிறந்த உலகச்சிறுகதைகளில் ஒன்றாக, மௌனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி’ கதையை வெளியிட்டது.

 

 

 

Leave a Reply