அறிந்த மொழிகள் = தமிழ், வடமொழி மற்றும் ஆங்கிலம் (மும்மொழி புலமை பெற்றவர்)
தமிழ் நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு என பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.
பதிப்பித்த நூல்கள்
திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்ற பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்
இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன.
புராணக் கதைகள் வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார்.
தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார்.
திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு “நாவலர்” என்ற பட்டதை வழங்கினார்
பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க்க இவர் உதவினார்.