வல்லினம் மிகா இடங்கள்
வல்லினம் மிகா இடங்கள்
- நிலைமொழிச் சொற்களுக்குப் பின், வருமொழிச் சொற்கள் வந்து புணரும்போது க், ச், த், ப், ஆகிய வல்லொற்றுகளின் வருக்க எழுத்துகள் வந்தால், அவ்வல்லொற்றுகள் சில இடங்களில் மிகுந்தும், சில இடங்களில் மிகாமலும் வரும். இவற்றையே வலிமிகுமிடங்கள், வலிமிகா இடங்கள் என்பர் (வலி – வல்லினம்).
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வல்லினம் மிகா இடங்கள்
- வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.
- உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.
- இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
- வியங்கோள் வினைமுற்றை அடுத்து வரும் வல்லினம் மிகாது.
- விளித்தொடரை அடுத்துவரும் வல்லினம் மிகாது.
- இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது.
- அவை, இவை என்னும் சுட்டுச்சொற்கள், எவை என்னும் வினாச்சொல் ஆகியவற்றை அடுத்துவரும் வல்லினம் மிகாது.
- அது, எது எனும் சுட்டுச்சொற்களை அடுத்துவரும் வல்லினம் மிகாது.
- பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர் ( படித்து என்பதுபோல் வன்றொடர்க் குற்றியலுகரச்சொல் அல்லாதவை ) ஆகியவற்றை அடுத்துவரும் வல்லினம் மிகாது.
- எழுவாய்த்தொடரில் வரும் வல்லினம் மிகாது.
வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது
- விடு + கணை = விடுகணை
- விரி + சுடர் = விரிசுடர்
- தோய் + தயிர் = தோய்தயிர்
- பாய் + புலி = பாய்புலி
உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது
- காய் + கனி = காய்கனி
- தாய் + தந்தை = தாய்தந்தை
- முத்து + பவளம் = முத்துபவளம்
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது
- கதை + சொன்னார் = கதை சொன்னார்.
- கடல் + தாவினான் = கடல் தாவினான்.
- புகழ் + பெற்றார் = புகழ் பெற்றார்.
வியங்கோள் வினைமுற்றை அடுத்து வரும் வல்லினம் மிகாது
- கற்க + கசடற் = கற்க கசடற
- வளர்க + சிந்தனை = வளர்க சிந்தனை
- வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
- காண்க + படம் = காண்க படம்
விளித்தொடரை அடுத்துவரும் வல்லினம் மிகாது
- முருகா + கேள் = முருகா கேள்.
- கண்ணா + சொல் = கண்ணா சொல்,
- கிளியே + தா = கிளியே தா.
- அண்ணா + போ = அண்ணா போ.
இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது
- கடகட, தடதட, சட்சட், படபட
அவை, இவை என்னும் சுட்டுச்சொற்கள், எவை என்னும் வினாச்சொல் ஆகியவற்றை அடுத்துவரும் வல்லினம் மிகாது
- அவை + பறவைகள் = அவை பறவைகள்
- இவை + சட்டைகள் = இவை சட்டைகள்
- அவை + தடங்கள் = அவை தடங்கள்
- எவை + படங்கள் = எவை படங்கள்
அது, எது எனும் சுட்டுச்சொற்களை அடுத்துவரும் வல்லினம் மிகாது
- அது + கூடை = அது கூடை
- இது + சட்டி = இது சட்டி
- அது + தோணி = அது தோணி
- இது + பாடம் = இது பாடம்
பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர் (வன்றொடர்க் குற்றியலுகரச்சொல் அல்லாதவை) அடுத்துவரும் வல்லினம் மிகாது
- வந்த + கயல்விழி = வந்த கயல்விழி
- தைத்த + சட்டை = தைத்த சட்டை
- வந்து + தந்தான் = வந்து தந்தான்
- செய்து + பார்த்தான் = செய்து பார்த்தான்
எழுவாய்த்தொடரில் வரும் வல்லினம் மிகாது
- கண்ணகி + பார்த்தாள் = கண்ணகி பார்த்தாள்
- தங்கை + கேட்டாள் = தங்கை கேட்டாள்
- பூவிழி + தந்தாள் = பூவிழி தந்தாள்