வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்
வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள்

  • நிலைமொழிச் சொற்களுக்குப் பின், வருமொழிச் சொற்கள் வந்து புணரும்போது க், ச், த், ப், ஆகிய வல்லொற்றுகளின் வருக்க எழுத்துகள் வந்தால், அவ்வல்லொற்றுகள் சில இடங்களில் மிகுந்தும், சில இடங்களில் மிகாமலும் வரும். இவற்றையே வலிமிகுமிடங்கள், வலிமிகா இடங்கள் என்பர் (வலி – வல்லினம்).

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வல்லினம் மிகும் இடங்கள்

  • நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின்பின் வல்லினம் (க்,ச்,த்,ப்) மிகும்.
  • அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
  • அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்.
  • அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்.
  • இரண்டாம் வேற்றுமை (ஐ) விரியின்பின் வரும் வல்லினம் மிகும்.
  • நான்காம் வேற்றுமை (கு) விரியில் வரும் வல்லினம் மிகும்.
  • ஓரெழுத்து ஒருமொழியில் வரும் க், ச், த், ப் மிகும்.
  • வன்றொடர்க் குற்றியலுகரத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
  • இகர ஈற்றுச் ‘செய்து’ என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
  • அகரஈற்றுச் ‘செய’ என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
  • சால, தவ என்னும் உரிச்சொற்கள்பின் வரும் வல்லினம் மிகும்.
  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்முன் வல்லினம் மிகும்.

நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின்பின் வல்லினம் (க்,ச்,த்,ப்) மிகும்

  • கறி + குழம்பு = கறிக்குழம்பு
  • பலா + சுளை = பலாச்சுளை
  • வழி + தடம் = வழித்தடம்
  • பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி
வல்லினம் மிகும் இடங்கள்
வல்லினம் மிகும் இடங்கள்

அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்

  • அ + கடை = அக்கடை
  • இ + சட்டை = இச்சட்டை
  • உ + பக்கம் = உப்பக்கம் (செய்யுள் வழக்கு)
  • எ + பாடம் = எப்பாடம்

அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்

  • அந்த + கோவில் = அந்தக் கோவில்
  • இந்த + சட்டி = இந்தச் சட்டி
  • எந்த + தோட்டம் = எந்தத் தோட்டம்

அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்

  • அப்படி + கூறினான் = அப்படிக் கூறினான்.
  • இப்படி + தாவினான் = இப்படித் தாவினான்.
  • எப்படி + சொன்னான் = எப்படிச் சொன்னான்.

இரண்டாம் வேற்றுமை (ஐ) விரியின்பின் வரும் வல்லினம் மிகும்

  • பாரியை + கண்டான் = பாரியைக் கண்டான்.
  • பொருளை+ சேர்த்தான் = பொருளைச் சேர்த்தான்.
  • அவனை + தடுத்தான் = அவனைத் தடுத்தான்.
  • நிலவை + பார்த்தான் = நிலவைப் பார்த்தான்.

நான்காம் வேற்றுமை (கு) விரியில் வரும் வல்லினம் மிகும்

  • எனக்கு + கொடு = எனக்குக் கொடு.
  • குழந்தைக்கு + சோறு = குழந்தைக்குச் சோறு.
  • அவளுக்கு + தா = அவளுக்குத் தா.
  • பாப்பாவுக்கு + பாட்டு = பாப்பாவுக்குப் பாட்டு

ஓரெழுத்து ஒருமொழியில் வரும் க், ச், த், ப் மிகும்

  • ஈ + கால் = ஈக் கால்
  • தீ + சட்டி = தீச் சட்டி
  • கை + தடி = கைத் தடி
  • தை + பொங்கல் = தைப் பொங்கல்

 

 

வன்றொடர்க் குற்றியலுகரத்தின்பின் வரும் வல்லினம் மிகும்

  • கொக்கு + கால் = கொக்குக் கால்

இகர ஈற்றுச் ‘செய்து’ என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்

  • ஓடி + போனான் = ஓடிப்போனான்.

அகரஈற்றுச் ‘செய’ என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்

  • பாட + கேட்டேன் = பாடக் கேட்டேன்.
  • தேட + சென்றாள் = தேடச் சென்றாள்.
  • பாட + தெரியுமா? = பாடத் தெரியுமா?
  • ஓட + பார்த்தான் = ஓடப் பார்த்தான்.

சால, தவ என்னும் உரிச்சொற்கள்பின் வரும் வல்லினம் மிகும்

  • சால + பசித்தது = சாலப் பசித்தது.
  • தவ + சிறிது = தவச் சிறிது.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்முன் வல்லினம் மிகும்

  • காணா + கண்கள் = காணாக் கண்கள்
  • கேளா + செவி = கேளாச் செவி
  • ஓடா + தேர் = ஓடாத் தேர்
  • நாறா + பூ = நாறாப் பூ.

Leave a Reply