திருக்குறள்

திருக்குறள்

திருக்குறள்

திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று

  • திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு – உலகுக்குப் பொது” என்று கூறியவர் = திரு. வி. கலியாணசுந்தரனார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது

  • “திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது.” என்று கூறியவர் = கி.ஆ.பெ.விசுவநாதம்.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

  • “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும், பொருளல்ல தில்லை பொருள்” என்னும் இக்குறளில் பயின்று வரும் அணி = சொல் பின்வருநிலை அணி
  • இக்குறளின் பொருள் = ஒருபொருட்டாக மதிக்கத்தகாதவரையும் பிறர் மதிக்குமாறு செய்வதில் பொருளுக்கு இணையானது வேறொன்றுமில்லை.

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாம்

  • “முதலிலார்க்(கு) ஊதிய மில்லை, மதலையாம் சார்பிலார்க் கில்லை நிலை” என்னும் குறளில் பயின்று வரும் அணி = எடுத்துக்காட்டு உவமைஅணி.
  • “முதலிலார்க்(கு) ஊதிய மில்லை, மதலையாம் சார்பிலார்க் கில்லை நிலை” என்னும் குறளின் பொருள் = முதலீடு இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் ஒன்றுமில்லை. அதுபோல், தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் பெரியோர் துணையில்லாதவர்க்கு நிலைத்த தன்மை இல்லை.
திருக்குறள்
திருக்குறள்

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்

  • “அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு” என்னும் இக்குறளில் பயின்று வரும் அணி = உருவக அணி.
  • “அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு” என்னும் இக்குறளின் பொருள் = அன்பு என்னும் தாய் பெற்ற அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் வளர்ப்புத் தாயால் பேணப்படும்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால்

  • குன்றேறி யானைப்போர் கண்டற்றால், தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை” என்னும் இக்குறளில் பயின்று வரும் அணி = உவமை அணி.
  • “குன்றேறி யானைப்போர் கண்டற்றால், தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை” என்னும் இக்குறளின் பொருள் = தன் கைப்பொருள்கொண்டு ஒருவன் செய்யும் செயலானது குன்றின்மேல் இருந்துகொண்டு யானைப்போரைக் காண்பதற்கு ஒப்பானது.

 

சொற்பொருள்

  • மூத்த – முதிர்ந்த
  • தேர்ந்து – ஆராய்ந்து
  • உறாஅமை – துன்பம் வராமல்
  • தமர் – உறவினர்
  • தலை – சிறப்பு
  • செற்றார் – பகைவர்
  • தகைமை – தன்மை
  • மதலை – துணை
  • பொய்யா விளக்கம் – அணையா விளக்கு
  • ஈனும் – தரும்
  • புல்லார் – பற்றார்
  • உல்குபொருள் – வரியாக வரும்பொருள்
  • கேண்மை – நட்பு
  • நோய் – துன்பம்
  • பேணி – போற்றி
  • வன்மை – வலிமை
  • சூழ்வார் – அறிவுடையார்
  • இல் – இல்லை
  • ஏமரா – பாதுகாவல் இல்லாத
  • எள்ளுவர் – இகழ்வர்
  • இருள் – பகை
  • தீதின்றி – தீங்கின்றி
  • உறுபொருள் – அரசு உரிமையால் வரும்பொருள்
  • தெரு – பகை
  • செவிலி – வளர்ப்புத்தாய்
  • செருக்கு – இறுமாப்பு

இலக்கணக்குறிப்பு

  • அறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • தேர்ந்து கொளல் – வினையெச்சம்
  • உற்றநோய் – பெயரெச்சம்
  • பெற்றியார் – வினையாலணையும் பெயர்
  • வன்மை – பண்புப்பெயர்
  • சூழ்வார் – வினையாலணையும் பெயர்
  • துணையார் – வினையாலணையும் பெயர்
  • பகைகொளல் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • அறனீனும் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • திறன் – கடைப்போலி
  • தன்ஒன்னார் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • ஈன்குழவி – வினைத்தொகை
  • குன்றேறி – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • செறுநர் செருக்கு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • திறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • கொளல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
  • உறாஅமை – செய்யுளிசை அளபெடை
  • கொளல் – தொழிற்பெயர்
  • ஒழுகுதல் – தொழிற்பெயர்
  • தக்கார் – வினையாலணையும் பெயர்
  • இல்லை – குறிப்பு வினைமுற்று
  • பொய்யா விளக்கம் – ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம்
  • வந்த பொருள் – பெயரெச்சம்
  • வாராப் பொருளாக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • வேந்தன் பொருள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • செல்வச்செவிலி – உருவகம்
  • செய்க – வியங்கோள் வினைமுற்று
  • ஒண்பொருள் – பண்புத்தொகை

Leave a Reply