9TH TAMIL வல்லினம் மிகா இடங்கள்

9TH TAMIL வல்லினம் மிகா இடங்கள்

9TH TAMIL வல்லினம் மிகா இடங்கள்
9TH TAMIL வல்லினம் மிகா இடங்கள்

9TH TAMIL வல்லினம் மிகா இடங்கள்

  • நாம் பேசும் போதும் எழுதும் பொழுதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது அவசியமாகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வல்லினம் மிகா இடங்கள்

அது செய்

இது காண்

அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
எது கண்டாய்?

எவை தவறுகள்?

இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
குதிரை தாண்டியது.

கிளி பேசும்.

எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
அண்ணனோடு போ

எனது சட்டை.

மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.
தந்தையே பாருங்கள்.

மகளே தா.

விளித் தொடர்களில் வல்லினம் மிகாது.
வந்த சிரிப்பு

பார்த்த பையன்

பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.
நாடு கண்டான்.

கூடு கட்டு

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
வரும்படி சொன்னார்.

பெறும்படி கூறினார்.

படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
வாழ்க தமிழ்

வருக தலைவா!

வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
குடிதண்ணீர், வளர்பிறை,

திருவளர்செல்வன்

வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
ஒரு புத்தகம், மூன்று கோடி எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.
தாய்தந்தை, இரவுபகல் உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
அன்று சொன்னார்.

என்று தருவார்.

அவராவது தருவதாவது

யாரடா சொல்.

ஏனடி செல்கிறாய்?

கம்பரைப் போன்ற கவிஞர் யார்?

அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
அவ்வளவு பெரியது.

அத்தனை சிறியது.

அவ்வாறு பேசினான்.

அத்தகைய பாடங்கள்.

அப்போதைய பேச்சு.

அப்படிப்பட்ட காட்சி.

நேற்றைய சண்டை.

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை,

இத்தனை, எத்தனை,

அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு,

அத்தகைய, இத்தகைய, எத்தகைய,

அப்போதைய, இப்போதைய, எப்போதைய,

அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.

என்னோடு சேர்.

மரத்திலிருந்து பறி.

குரங்கினது குட்டி.

மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது.
தமிழ் படி. (ஐ)

கை தட்டு. (ஆல்)

வீடு சென்றாள்.(கு)

கரை பாய்ந்தான். (இருந்து)

இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது.
தலைவி கூற்று.

தொண்டர் படை

நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடரில் வல்லினம் மிகாது.
உறு பொருள்

நனி தின்றான்.

கடி காவல்

சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.
பார் பார்

சலசல

அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது.
கருத்துகள்

பொருள்கள்

வாழ்த்துகள்

கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.

(மிகும் என்பர் சிலர்)

பைகள், கைகள் ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.

 

Leave a Reply