வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை

வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை

வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை

வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை

        இந்திய அரசு (Government of India), மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (Ministry of External Affairs) சார்பில், செப்டம்பர் 2௦௦௦ வது ஆண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் (Indian Diaspora) மீண்டும் இந்தியாவிற்கான உறவினை புதுப்பிக்க, “எல்.எம்.சிங்வி” தலைமையில் “புலம் பெயர்ந்தோருக்கான உயர்மட்டக் குழுவினை” (High Level Committee on the Indian Diaspora under the Chairmanship of L.M. Singhvi) அமைத்தது. உலகளாவிய இந்திய புலம்பெயர்ந்தோரைப் பற்றி விரிவான ஆய்வு செய்வதும் அவர்களுடன் ஆக்கபூர்வமான உறவுக்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதும் அக்குழுவிற்கு கட்டளையிடப்பட்டது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

       இக்குழு தனது அறிக்கையை ஜனவரி 2௦௦2 இல் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இக்குழு தனது அறிக்கையில், குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள இந்திய வம்சாவழியை சேர்ந்த (PIO – Persons of Indian Origin) இந்தியர்களுக்கு, 1955-ம ஆண்டு இந்திய குடியுரிமை (Indian Citizenship Act, 1955) சட்டத்தை திருத்தும் செய்து, அவர்களுக்கு “இரட்டை குடியுரிமையை” (Dual Citizenship) வழங்க பரிந்துரை செய்தது.

                இதன்படி, மத்திய அரசு “குடியுரிமை (திருத்த) சட்டம் 2௦௦3” (Citizenship (Amendment) Act, 2003) சட்டத்தினை கொண்டு வந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நீங்கலாக சுமார் 16 நாடுகளில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகைசெய்தது (16 நாடுகள் = ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், ஐயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து, நியுசிலாந்து, போர்சுகல், சைப்ரஸ், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா)

       மீண்டும் 2௦௦5 ஆம் ஆண்டு குடியுரிமை (Citizenship (Amendment) Act, 2005) சட்டத்தில் திருத்தும் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு குடியுரிமை (Citizenship) அளிக்க முடிவு செய்யப்பட்டது.

வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை

       இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 9-ன் படி (Article  of Indian Constitution), இந்தியாவில் இரட்டை குடியுரிமை மற்றும் இரட்டை தேசியம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு இரட்டை குடியுரிமை என்பது இரண்டு குடியுரிமை என்று பொருளல்ல.

       2௦15-ம் ஆண்டில், குடியுரிமை (Citizenship Amendment Act, 2015) சட்டத்தில், மேலும் ஒரு திருத்தும் மேற்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அனைவருக்கும், “வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் அட்டை” (Overseas Citizen of India Cardholder) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 

 

Leave a Reply