10TH பன்முகக் கலைஞர்

10TH பன்முகக் கலைஞர்

10TH பன்முகக் கலைஞர்
10TH பன்முகக் கலைஞர்

10TH பன்முகக் கலைஞர்

  • கலைஞர் மு.கருணாநிதி பற்றி பேராசிரியர் அன்பழகன் கூறியது = “கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனையாளர்; பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர்; படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்; கலைத்துறையில் வாகைசூடிய படைப்பாளர்; தொட்டது துலங்கத் துறைதோறும் தம் முத்திரை பதிக்கும் திறமையாளர்; முத்தமிழிலும் வல்ல வித்தகர்; செந்தமிழுக்கொரு தீமை எனில் தம்முயிரும் தந்திடத் துணியும் தியாகத் திருவுருவம்!”
  • “செந்தமிழுக்கொரு தீமை எனில் தம்முயிரும் தந்திடத் துணியும் தியாகத் திருவுருவம்” என்று கலைஞர் கருணாநிதியை கூறியவர் = பேராசிரியர் அன்பழகன்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

கலைஞர் கருணாநிதி குறிப்புகள்

  • “புதையல்” எனும் புதினத்தின் ஆசிரியர் = கலைஞர் கருணாநிதி.
  • இசை முகிழ்ந்த புலமும் வேளாண் செழித்த நிலமும் என்று கூறப்படும் மாவட்டம் = திருவாரூர்.
  • கலைஞர் கருணாநிதி பிறந்த ஊர் = திருவாரூர் மாவட்டத்தில் உள்ள “திருக்குவளை” என்னும் ஊர்.
  • கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி = 3 சூன் மாதம் 1924.
  • பெற்றோர் = முத்துவேல், அஞ்சுகம் அம்மையார்.

போராட்டக் கலைஞர்

  • கருணாநிதி தொடக்கக்கல்வியை நிறைவு செய்த இடம் = திருக்குவளை.
  • கருணாநிதி உயர்நிலைக் கல்வியை முடித்த இடம் = திருவாரூர்.
  • 1921இல் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்தவர் = நீதிக்கட்சியின் பனகல் அரசர்.
  • இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட பொழுது கலைஞர் கருணாநிதியின் வயது = பதினான்கு.
  • 10TH பன்முகக் கலைஞர்
10TH பன்முகக் கலைஞர்
10TH பன்முகக் கலைஞர்

பேச்சுக் கலைஞர்

  • யாருடைய பகுத்தறிவுக் கருத்துக்கள் கலைஞரை ஈர்த்தன = பெரியார்.
  • யாருடைய பேச்சாற்றல் கலைஞரை கவர்ந்தது = பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா.
  • “நட்பு” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியவர் = கலைஞர் கருணாநிதி.
  • பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சுப் பயிற்சி வழங்க கருணாநிதி உருவாக்கிய சங்கம் = சிறுவர் சீர்திருத்தச் சங்கம்.
  • பள்ளிப் பருவத்திலேயே மாணவரிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த கருணாநிதி உருவாக்கிய சங்கம் = தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்.
  • “சிறுவர் சீர்திருத்தச் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கியவர் = கலைஞர் கருணாநிதி.
  • “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” என்ற அமைப்பை உருவாக்கியவர் = கலைஞர் கருணாநிதி.
  • “இளைய தலைமுறையே; எழுவாய்! செயப்படுபொருள் பயனிலையேல் விழுவாய்! அறிவில் மூத்தோரைத் தொழுவாய்! அரிய பயன் காண ஆழ உழுவாய்!” என்று கூறியவர் = கலைஞர் கருணாநிதி.

நாடகக் கலைஞர்

  • கலைஞர் கருணாநிதியின் முதல் நாடகம் = பழநியப்பன்.
  • கலைஞர் கருணாநிதி எழுதிய “தூக்குமேடை” என்னும் நாடகத்தில் எம்.ஆர்.ராதாவின் வேண்டுகோளுக்கு இணங்க அந்நாடகத்தில் மாணவர் தலைவராக நடித்தார்.
  • எந்த நாடகத்தின் பாராட்டு விழாவில் கருணாநிதிக்கு “கலைஞர்” என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது = தூக்குமேடை.
  • 10TH பன்முகக் கலைஞர்

திரைக் கலைஞர்

  • எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடித்த படம் = ராஜகுமாரி (1947).
  • எம்.ஜி.ஆர் முதல் படமான “ராஜகுமாரி” படத்திற்கு முழு வசனமும் எழுதியவர் = மு.கருணாநிதி.
  • கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் = ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன்.
  • சிவாஜியின் முதல் படம் = பராசக்தி.
  • சிவாஜியின் முதல் படமான “பராசக்தி” படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் = மு.கருணாநிதி.
  • கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் = பராசக்தி, திரும்பிப் பார், மனோகரா.
  • கலைஞர் மு.கருணாநிதி திரைப்படப் பாடல்கள் எழுதிய படங்கள் = ரங்கோன் ராதா, மந்திரிகுமாரி, மறக்க முடியுமா?
கலைஞர் கருணாநிதி குறிப்புகள்
10TH பன்முகக் கலைஞர்

கலைஞர் எழுதிய நாடகங்கள்

  • கலைஞர் கருணாநிதியின் முதல் நாடகம் = பழநியப்பன்.
  • சாம்ராட் அசோகன்
  • மணிமகுடம்
  • வெள்ளிக்கிழமை
  • காகிதப்பூ
  • தூக்குமேடை

கலைஞர் மு.கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்கள்

  • கலைஞரின் கதை, வசனங்களில் பகுத்தறிவு பேசிய படங்கள் = பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்.
  • கலைஞரின் கதை, வசனங்களில் சமூகக்கருத்துகளைப் பேசிய படங்கள் = மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப் பார்.
  • கலைஞரின் கதை, வசனங்களில் பெண்கள் முன்னேற்றம் பேசிய படங்கள் = மணமகள், ராஜாராணி, இருவர் உள்ளம், பாசப் பறவைகள்.
  • கலைஞரின் கதை, வசனங்களில் அரசியல் பேசிய படங்கள் = புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி, வண்டிக்காரன் மகன்.
  • கலைஞரின் கதை, வசனங்களில் இலக்கியம் பேசிய படங்கள் = அபிமன்யு, பூம்புகார், உளியின் ஓசை.
  • 10TH பன்முகக் கலைஞர்

கலைஞர் மு.கருணாநிதி எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்

  • ‘மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது’ என்ற வசனம் இடம் பெற்ற படம் = பூம்புகார்.
  • “நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ, சாக்ரட்டீஸ் அழைக்கிறேன், ஓடி வாருங்கள்” என்ற வசனம் இடம் பெற்ற படம் = ராஜாராணி.
  • “பொறுத்தது போதும் மனோகரா! பொங்கி எழு” என்ற வசனம் இடம்பெற்ற படம் = மனோகரா.

இராமானுஜர் தொடர்

  • கருணாநிதி திரைப்படங்களுக்காக எழுதத் துவங்கிய பொழுது வயது = 23.
  • தொலைக்காட்சிக்காக “இராமானுஜர்” தொடருக்கு வசனம் எழுதிய பொழுது அவருக்கு வயது = 92.

இதழியல் கலைஞர்

  • “மாணவநேசன்” என்ற கையெழுத்து ஏட்டை நடத்தியவர் = மு.கருணாநிதி.
  • “திராவிட நாடு” என்ற இதழின் ஆசிரியர் = அறிஞர் அண்ணா.
  • எந்த இதழில் மு.கருணாநிதி தந்து முதல் கட்டுரையை எழுதினார் = அண்ணாவின் திராவிட நாடு.
  • “முரசொலி” இதழை துவக்கியவர் = மு.கருணாநிதி.
  • “சேரன்” என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகளை எழுதியவர் = கலைஞர் மு.கருணாநிதி.
  • 10TH பன்முகக் கலைஞர்

கயிற்றில் தொங்கிய கணபதி

  • மலேசியாவில் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த தமிழகத்தை சேர்ந்த “மலேயா கணபதி” என்பவருக்கு ஆங்கிலயே அரசு தூக்கு தண்டனை வழங்கியது.
  • அவர் தூக்கிலிடப்பட்டதை அறிந்த கலைஞர் “கயிற்றில் தொங்கிய கணபதி” என்ற கட்டுரையை எழுதி வெளியிட்ட பொழுது கலைஞருக்கு வயது 22.
  • கலைஞர் கருணாநிதிக்கு ஆங்கிலேய எதிர்ப்பு இருந்ததை பதிவு செய்த நூல் = கயிற்றில் தொங்கிய கணபதி.
கலைஞர் கருணாநிதி படைப்புகள்
10TH பன்முகக் கலைஞர்

கலைஞர் கருணாநிதி எழுதிய சிறுகதைகள்

  • நளாயினி
  • சித்தார்த்தன் சிலை
  • சந்தனக் கிண்ணம்
  • தாய்மை
  • புகழேந்தி
  • அணில்குஞ்சு

கலைஞர் கருணாநிதி எழுதிய புதினங்கள்

  • ரோமாபுரிப் பாண்டியன்
  • பொன்னர் சங்கர்
  • தென்பாண்டிச்சிங்கம்
  • ஒரே ரத்தம்

நெஞ்சுக்கு நீதி

  • மு.கருணாநிதி எழுதிய தன வரலாற்று நூல் = நெஞ்சுக்கு நீதி.
  • நெஞ்சுக்கு நீதி நூலில் உள்ள பாகங்களின் எண்ணிக்கை = ஆறு.

கருணாநிதி எழுதிய உரை நூல்கள்

  • சங்கத்தமிழ்
  • குறளோவியம்
  • தொல்காப்பியப் பூங்கா

தொல்காப்பியப் பூங்கா

  • இலக்கண நூலுக்கு இலக்கியச் சுவை தோன்றுமாறு அமைந்த புதுமை நூல் = தொல்காப்பியப் பூங்கா.
  • 142 தொல்காப்பிய நூற்பாக்களை கொண்டு 100 தலைப்புகளில் எழுதியுள்ளார்.
  • “நெல்லுக்குள்ளிருந்து அரிசி தலைகாட்டுவதுபோல, வெள்ளை விழிகள் இமைகளின் இடுக்குகளில் ஒளிகாட்டிய வண்ணமிருந்தன” என்று உவமையாக கூறியவர் = கலைஞர் கருணாநிதி.
  • “வல்லினம், மெல்லினம், இடையினம் ஒன்றுபட்டுத் தமிழ் என்றே தகத்தகாய ஒளிபரப்பிடும்போது தமிழர்கள் பலகூறுகளாகப் பிளவுபட்டுப் பாழ்பட்டுக் கிடப்பது நியாயந்தானா?” என்று உவமையை கூறியவர் = கலைஞர் மு.கருணாநிதி.
  • எழுத்துகளின் ஒற்றுமையைக் கூறவந்த இடத்தில், தமிழர்கள் தமக்குள் பிளவுபட்டு இருப்பதைக் உவமையாகக் கூறியவர் = மு.கருணாநிதி.
  • 10TH பன்முகக் கலைஞர்

கவிதைக் கலைஞர்

  • “கவியரங்குகளே தனக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!” என்று கூறியவர் = கலைஞர் கருணாநிதி.
  • கலைஞர் மு.கருணாநிதி எழுதிய கவிதைகள் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளன = ஒன்பது.
  • கலைஞர் கருணாநிதி எழுதிய வசன கவிதை நூல் = புறநானூற்றுத்தாய்.
  • “இந்த எட்டுச்சுவை பிட்டுத்தமிழ் கட்டித்தயிர் வட்டில்நிறை கொட்டித்தரப் பட்டுக்கொடிக் கொற்றக்குடை முத்துச்சரச் சோழனூர்வருவீரே!” என்ற கருணாநிதியின் வரிகள் குறிப்பிடும் நூல் = சிலப்பதிகாரம்.
  • “கொடுமைக்கு முடிவு கண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?” என்று அறிஞர் அண்ணாவின் மறைவின் பொழுது கருணாநிதி குறிப்பிட்டார்.

கட்டுமான ஆர்வலர் கலைஞர்

  • சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும் அமைத்தார் கலைஞர்.
  • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கத்தின் பெயர் = குறள் மணிமாடம்.
  • அழிந்து போல சிலப்பதிகார நகரான பூம்புகாரில், “பூம்புகார்க் கலைக்கூடம்” என்ற அரங்கை உருவாக்கினார்.
  • அண்ணாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு 2010ஆம் ஆண்டு “அண்ணா நூற்றாண்டு நூலகம்” திறந்து வைத்தார்.
  • காமராஜர் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள இடம் = கன்னியாகுமரி.
  • 10TH பன்முகக் கலைஞர்

செம்மொழிக் கலைஞர்

  • “முத்தமிழ் அறிஞர்” என்று போற்றப்படுபவர் = மு.கருணாநிதி.
  • கல்வித்துறையை பள்ளிக்கல்வித்துறை என்றும், உயர்கல்வித்துறை என்றும் இரண்டாக பிரித்தார்.
  • 2010 ஆம் ஆண்டு “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை” எங்கு நடத்தினார் = கோவை.
  • கருணாநிதி எழுதிய “செம்மொழியான தமிழ்மொழியாம்” பாடலுக்கு இசை அமைத்தவர் = ஏ.ஆர்.ரஹ்மான்.
  • கலைஞர் மு.கருணாநிதி எந்த வயதில் காலமானார் = 94.
  • கலைஞர் மு.கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி காலமானார்.

Leave a Reply